26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 10 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Assertion [A] : The Pallavas constructed the Cave temples without brick, wood, metal and sudhai.கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
Reason [R] : The stones kept one upon another and not bound with plaster is known as "Katraligal".
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.
- [A] true, but [R] false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] false but [R] true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி✓
- Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Which one of the statement is incorrect regarding Gokhale?கீழ்கண்ட கூற்றுகளில் கோகலேவை பற்றி தவறான கூற்று எது?
- 1. He started "Servants of Indian Society" in 1905
- 2. He went in to South Africa and helped Gandhi in his movement against Colour bar
- 3. Gandhi accepted Gokhale as 'Political guru'
- 4. Gandhi described Gokhale as diamond of India, the Jewel of Maharastra and Prince of Workers
- 1. கோகலே "இந்திய பணியாளர் கழகம்" என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
- 2. இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவேறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
- 3. காந்தி கோகலேவை தனது 'அரசியல் குருவாக' ஏற்றுக் கொண்டார்
- 4. காந்தி கோகலேவை இந்தியாவின் வைரம், மகராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கிறார்
- 1, 2, 3, 4 are correct1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
- 1, 2, 3 are correct only 4 is incorrect1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது✓
- 1, 3, 4 are correct only 2 is incorrect1, 3, 4 கூற்றுகள் சரியானவை 2வது கூற்று தவறானது
- 1, 2 are correct 3, 4 are incorrect1, 2 கூற்றுகள் சரியானவை 3, 4 வது கூற்றுகள் தவறானது
-
Consider the following statements and Identify the wrong answersகீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி.
- 1. On 1st September 1798 Major Bannerman served an ultimatum directing Kattabomman to see him at Palayamkottai.
- 2. Kattabomman's Fort 500 feet long and 300 feet broad, was constructed entirely of Mud.
- 3. On September 16, 1799 Veera Pandiya Kattabomman was tried before an assembly of Palayakkarars at Kayatar.
- 4. On 1st June, 1799 Kattabomman, attended by 500 men, proceeded to Sivagangai.
- 1. 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார்.
- 2. கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது.
- 3. 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.
- 4. 1799 ஜுன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.
- (1) is wrong(1) மட்டும் தவறு
- (2) is wrong(2) மட்டும் தவறு
- (1) and (3) are wrong(1) மற்றும் (3) மட்டும் தவறு✓
- (2) and (4) are wrong(2) மற்றும் (4) மட்டும் தவறு
-
During the age of Kalabhras, a Jain monk who established Dravida Sangha at Madurai wasகளப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
- Vajranandhiவஜ்ஜிரநந்தி✓
- Parsava Munivarபார்சவ முனிவர்
- Mahavirமகாவீரர்
- Maha Kasabarமகா கசபர்
-
The revolutionary nationalist Nelakanda Brahmachari was born atபுரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
- Thirunelveliதிருநெல்வேலி
- Maduraiமதுரை
- Sirkaliசீர்காழி✓
- Chennaiசென்னை
-
Match List I with List II select correct answer.பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
List I List II (a) Lord Minto 1. Revolutionary (b) K.R. Cama 2. Divide and Rule (c) Abdul Kalam Azad 3. Home Rule League (d) Common Wheel 4. Khilafat Movement பட்டியல் I பட்டியல் II (a) மிக்டோ பிரபு 1. தீவிரவாதி (b) கே. ஆர். காமா 2. பிரித்தாளும் கொள்கை (c) அப்துல் கலாம் ஆசாத் 3. தன்னாட்சி கழகம் (d) பொதுசக்கரம் 4. கிலாபாத் இயக்கம் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Zamindari system was introduced byஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது?
- Thomas Munroeதாமஸ் மன்ரோ
- Lord Cornwallisலார்டு கார்ன்வாலிஸ்✓
- Venkata Subbaiahவெங்கட சுப்பையா
- Myrdalமிர்டல்
-
----- was the first Muslim leader to demand for Pakistan in 1933.1933 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கான கோரிக்கை விடுத்த முதல் முஸ்லீம் தலைவர் ----- ஆவார்.
- Maulana Azadமௌலானா ஆசாத்
- Muhammed Ali Jinnahமுகமது அலி ஜின்னா
- Sayyid Ahamedசையது அகமது
- Rehmat Aliரெஹ்மத் அலி✓
-
Meadows Taylor observes that the death of __________ was 'the beginning of the end' of the Bahmani kingdom.மெடோஸ் டெய்லர் __________ ன் மரணம் பாஹ்மனி ஆட்சியின் 'முடிவின் ஆரம்பம்' என்று கருதினார்.
- Mahmud Gawanமஹ்மத் கவான்✓
- Ahmad Shahஅஹ்மத் ஷா
- Mahmud Shahமஹ்மத் ஷா
- Humayunஹுமாயூன்
-
Choose the right matches among the following.கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்வு செய்யவும்.
- 1. Champaran Satyagraha – Financial Troubles
- 2. Ahmedabad Satyagraha – Mill Strike
- 3. Kheda Satyagraha – Peasants
- 4. Bardoli Satyagraha – Indigo planters
- 1. சம்பாரன் சத்தியாகிரகம் – நிதிச் சிக்கல்கள்
- 2. அகமதாபாத் சத்தியாகிரகம் – ஆலை வேலை நிறுத்தம்
- 3. கேதா சத்தியாகிரகம் – விவசாயிகள்
- 4. பர்டோலி சத்தியாகிரகம் – இண்டிகோ தோட்டக்காரர்கள்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்க :
கற்று (A) : பிரிட்டிஷ் ஆட்சியில் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரர்களிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள்.
காரணம் (R) : மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளைநிலங்களின் தேவை பெருகியது.Assertion (A) : Under British rule in Zamindari system, landlords charged heavy rents from tenants.
Reason (R) : Under Zamindari system population grew, villages decayed and demand for lands also grew.
- Both (A) and (R) are correct and (R) is correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R)-ம் இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are correct and (R) is not correct explanation of (A)கற்று (A)-யும் காரணம் (R) இரண்டு மட்டும் சரி ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is falseகற்று (A) மட்டும் சரி காரணம் (R) மட்டும் தவறு
- (A) is false but (R) is trueகற்று (A) மட்டும் தவறு, காரணம் (R) மட்டும் சரி
-
Which of the following statements are true about the Indus Civilisation?சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) In the 1920s Martimer Wheeler excavated the Harappan sites.
- (ii) The longest text has about twenty six signs.
- (iii) The term "Meluhha" in the Prakrit inscriptions refers to the Indus region.
- (iv) The "Priest King" of steatite was discovered in Mohenjo-Daro.
- (i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
- (ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
- (iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
- (iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
-
More than 500 seals have been discovered in Indus Valley civilization which are all ________ .சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ________ ஆல் தயாரிக்கப்பட்டது.
- Goldதங்கம்
- Silverவெள்ளி
- Terracottasமண்ணால் செய்யப்பட்டது✓
- Copperசெம்பு
-
Which of the following statements about Bhagat Singh are true?கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
- (i) In 1930, Bhagat Singh attacked the Chittagong armouries
- (ii) In 1929, Bhagat Singh and B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly Hall
- (iii) In 1925, Bhagat Singh formed Hindustan Republican Army
- (i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்
- (ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்
- (iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்
- (ii) only(ii) மட்டும் சரி✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும் சரி
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும் சரி
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும் சரி
-
Match List I with List II and select the correct answer using the code given below the list:வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:
வரிசை I:List I: List II: (a) Amuktamalyada 1. Gulbarga (b) Juma masjid 2. Bijapur (c) Golgumbaz 3. Sanskrit (d) Jambavathi kalyanam 4. Telugu (a) ஆமுக்தமாலியதா 1. குல்பர்கா (b) ஜும்மா மசூதி 2. பீஜப்பூர் (c) கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம் (d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு வரிசை II:
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Match List I with List II and select the correct answer :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க :
(a) Warren Hastings 1. Treaty of Mangalore (b) Sir John Shore 2. Hafiz Rehmat Khan (c) Dost Muhammad 3. Policy of Non-intervention (d) Lord Macartnay 4. Lord Auckland (a) வாரன் ஹேஸ்டிங்ஸ் 1. மங்களூர் உடன்படிக்கை (b) சர் ஜான் ஷோர் 2. ஹபீஸ் ரஹமத் கான் (c) தோஸ்த் முகமது 3. தலையிடா கொள்கை (d) மெக்கார்ட்னே பிரபு 4. ஆக்லண்ட் பிரபு - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
When the Government of India had decided to appoint a One Man commission of Inquiry to inquire into the circumstances of the disappearance of Netaji Subhas Chandra Bose. In 1945 ———— 's name was recommended by the then Chief Justice of India.கி.பி. 1945 ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்மமான முறையில் இறப்பெய்தததைத் தொடர்ந்து ஒரு நபர் குழுத்தலைமையின் கீழ் விசாரணை நடத்துவதென இந்திய அரசாங்கம் முடிவெடுத்த சமயத்தில் அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ———— ன் பெயரைப் பரிந்துரைத்தார்
- Srinivasavaradanஸ்ரீனிவாசவரதன்
- K.K. GhoshK.K. கோஷ்
- D.K. RoyD.K. ராய்✓
- G.D. KhoslaG.D. கோஸ்லா
-
Reason and Assertion Type.காரணம் மற்றும் கூற்று வகை.
Assertion [A] : On April 8, 1929 C.E. revolutionaries Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs into the Central Legislative Assembly.
Reason [R] : Bhaghat Singh and B.K. Dutt were against the passage of the Public Safety Bill and the Trade Disputes Bill.
கூற்று [A] : பொ.ஆ. 1929 ஏப்ரல் 8-ஆம் தேதி, புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டப் பேரவையில் குண்டுகளை வீசினர்.
காரணம் [R] : பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் (தொழில் தகராறு) தொழில் சர்ச்சைகள் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு எதிராக செயல்பட்டனர்.
- [A] is true but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false and [R] is true[A] தவறானது, [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Gandhiji established as ashram at Sabarmathi. Likewise an ashram was established in Tamil Nadu by Rajaji. Where was it established?காந்தியடிகள் சபர்மதி என்னும் இடத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். அதே போல் இராஜாஜி தமிழகத்தில் ஒரு ஆசிரமம் உருவாக்கினார். எங்கே அதை உருவாக்கினார்?
- Maduraiமதுரை
- Vadaranyamவேதாரண்யம்
- Salemசேலம்
- Thiruchengoduதிருச்செங்கோடு✓
-
Assertion [A] : A medieval Historian Zia-ud-din Barani encouraged the inclusion of Neo-Muslims into Aristocracy.கூற்று [A] : மத்திய கால வரலாற்றாசிரியர் ஜியாவுத்தீன் பரணி புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களை அரசவை கோமான்களாக சேர்ப்பதற்கு ஊக்குவித்தார்.
Reason [R] : Balban's son Prince Muhammed valued knowledge and talent than noble-birth.
காரணம் [R] : பால்பனின் மகனான இளவரசன் முகம்மது உயர்குடிப் பிறப்பைவிடச் சிறந்த அறிவும் திறமையுமே முக்கியம் என்பதை நிரூபித்தார்.
- [A] is true, but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false and [R] is true[A] தவறானது, மேலும் [R] சரியானது✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Which of the following statements are true about the Nordics?நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?
- (i) Indo-Aryans are the last immigrants into India.
- (ii) This group was the next to come to India after the Negritos.
- (iii) This group have come into India between 2000 and 1500 BC.
- (i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.
- (ii) நெகிரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.
- (iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Choose the right matches among the following.பின்வரும் வகைக்கு இடையே சரியான பொருத்தங்களை தேர்வு செய்பவும்.
- 1. Thiru.V.Ka – Desabakthan
- 2. Subramania Bharathiyar – Hindu
- 3. Annie Besant – New India
- 4. Kasthuri Ranga Ayyangar – India
- 1. திரு.வி.க – தேசபக்தன்
- 2. சுப்ரமணிய பாரதியார் – இந்து
- 3. அன்னிபெசன்ட் – நியூ இந்தியா
- 4. கஸ்தூரி ரங்க அய்யங்கார் – இந்தியா
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்
-
Match the following:பொருத்துக.
(a) Varahamihira 1. Physician (b) Kalidasa 2. Lexicographer (c) Amarasimha 3. Sanskrit Poet (d) Dhanvantri 4. Astronomer (a) வராகமிகிரர் 1. மருத்துவர் (b) காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர் (c) அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர் (d) தன்வந்திரி 4. வானியல் அறிஞர் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Which of the Vedic Gods is described as the "Destroyer of cities"?'நகரங்களை அழிப்பவர்' என்று எந்த வேதக் கடவுள் அழியப்படுகிறார்?
- Agniஅக்னி
- Indraஇந்திரன்✓
- Rudraருத்ரன்
- Vishnuவிஷ்ணு
-
Match the following with their correct answers:பின்வருவனவற்றை அவற்றின் சரியான பதிலுடன் பொருத்தவும் :
(a) Peshwa 1. Secretary (b) Shurnavis 2. Chief Justice (c) Nyayadhish 3. High Priest (d) Pandit Rao 4. Prime Minister (a) பேஷ்வா 1. செயலர் (b) சுர்நாவிஸ் 2. தலைமை நீதிபதி (c) நியாயதீஸ் 3. தலைமை அர்ச்சகர் (d) பண்டிட் ராவ் 4. பிரதம அமைச்சர் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →