Group 4 / VAO · 2022குரூப் 4 / VAO · 2022
TNPSC Group 4 / VAO 2022 — question paper with answers — page 1 of 8TNPSC குரூப் 4 / VAO 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2022 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
A worker was engaged for a certain number of days. But he remained absent for some days and was paid Rs. 1,387. Had he worked all the days, he would have earned Rs. 1,752. How many days did he work for?ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ. 1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
- 1919✓
- 2121
- 2424
- 2929
-
Pick out the correct statements :
Statement 1 : The delta of the Ganga Brahmaputra has the largest tidal forest.
Statement 2 : Tidal forest are also known as mangrove forest.சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் :
வாக்கியம் 1 : கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2 : அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.- Both statements are trueஇரண்டு வாக்கியங்களும் சரி✓
- Both statements are falseஇரண்டு வாக்கியங்களும் தவறு
- Statement 1 is true 2 is falseவாக்கியம் 1 சரி; 2 தவறு
- Statement 1 is false 2 is trueவாக்கியம் 1 தவறு; 2 சரி
-
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு✓
- அகநானூறு
- நற்றிணை
-
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel 1. மெய்யெழுத்து (b) Consonant 2. ஒரு மொழி (c) Homograph 3. உயிரெழுத்து (d) Monolingual 4. ஒப்பெழுத்து - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
The Winner of "Jnanpith award" for the year 2021 was2021ஆம் ஆண்டிற்கான "ஞானபீட விருதை" வென்றவர் யார்?
- Damodar Mauzoதாமோதர் மௌசோ✓
- Krishna Sobtiகிருஷ்ணா சோப்தி
- Amitav Ghoshஅமிதவ் கோஷ்
- Nilmani Phookanநில்மனி பூக்கன்
-
Which of the following statements are true about the post sangam age?கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
- (i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.
- (ii) The most important of these Thirukkural and Naladiyar.
- (iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.
- (i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
- (ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
- (iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
- (i) only True(i) மட்டும் சரி
- (ii) only True(ii) மட்டும் சரி
- (i), (ii) only True(i), (ii) மட்டும் சரி✓
- (i), (iii) only True(i), (iii) மட்டும் சரி
-
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
- தினத்தந்தி
- காஞ்சி✓
- முரசொலி
- தினமணி
-
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
- கலம் + அகம்
- கலம் + பகம்✓
- கலம்பு + அகம்
- கல் + அம்பகம்
-
Which number is in opposite plane of 3? [two views of a cube: view 1 shows top 2, left 3, right 5; view 2 shows top 5, left 2, right 4]3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? [கனசதுரத்தின் இரு தோற்றங்கள்]
- 11
- 44✓
- 66
- 55
-
Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidencyகாலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
- 1. P.T. Rajan
- 2. A. Subburayulu Reddiar
- 3. P. Munusamy Naidu
- 4. C. Rajaji
- 5. P. Subbarayan
- 1. பி.டி. ராஜன்
- 2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார்
- 3. பி. முனுசாமி நாயுடு
- 4. சி. ராஜாஜி
- 5. பி. சுப்பராயன்
- 2, 4, 3, 5, 12, 4, 3, 5, 1
- 2, 5, 3, 1, 42, 5, 3, 1, 4✓
- 5, 3, 1, 2, 45, 3, 1, 2, 4
- 3, 1, 5, 2, 43, 1, 5, 2, 4
-
Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
Reason (R) : Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
- (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு; ஆனால் (R) சரி
- Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்✓
- Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.- எத்தனை மாடுகள் மேய்ந்தன?✓
- எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
- மாடுகள் மேய்ந்தனவா?
- ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- மோனை
- எதுகை
- இசைவு✓
- இயைபு
-
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
- (a) காலப்பெயர் — செம்மை
- (b) சினைப்பெயர் — கண்
- (c) பண்புப்பெயர் — ஆண்டு
- (d) தொழிற்பெயர் — ஆடுதல்
- (a), (c)✓
- (a), (b)
- (c), (d)
- (a), (d)
-
பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
- ஆழ்வார்கள்
- சித்தர்கள்✓
- நாயன்மார்கள்
- புலவர்கள்
-
Three rivers in Peninsular India that runs from east to west areதீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
- Mahanadi, Godavari and Krishnaமகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா
- Krishna, Narmada and Taptiகிருஷ்ணா, நர்மதை மற்றும் தபதி
- Narmada, Tapti and Mahiநர்மதை, தபதி மற்றும் மாஹி✓
- Mahi, Mahanadi and Godavariமாஹி, மகாநதி மற்றும் கோதாவரி
-
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
- நெடுந்தொகை
- திருக்குறள்✓
- முத்தொள்ளாயிரம்
- கம்பராமாயணம்
-
Kala and Vani are friends. Kala says, "Today is my birthday" and she asks Vani, "When will you celebrate your birthday?" Vani replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Vani celebrated her birthday?கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
- Tuesdayசெவ்வாய் கிழமை
- Wednesdayபுதன் கிழமை✓
- Thursdayவியாழன் கிழமை
- Fridayவெள்ளி கிழமை
-
Choose the correct statement:சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
- (i) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.
- (ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.
- (iii) Yusuf Khan was negotiating with the Palayakkarars, without informing the company administration was charged with treachery and hanged in 1764.
- (iv) Ondiveeran led one of the army units of Kattabomman.
- (i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
- (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
- (iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
- (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி✓
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) ஆகியவை சரி
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) ஆகியவை சரி
-
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
- சாரதா அம்மாள்
- மூவலூர் இராமாமிர்தம்✓
- முத்துலெட்சுமி
- பண்டித ரமாபாய்
-
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர் (b) பள்ளி 2. பண்புப்பெயர் (c) கிளை 3. இடப்பெயர் (d) இனிமை 4. பொருள்பெயர் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
———— is the thought in terms of social, educational and psychological well being among various communities.பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ———— எனப்படும்.
- Communal harmonyசமுதாய நல்லிணக்கம்
- National integrationதேசிய ஒருங்கிணைப்பு✓
- Women empowermentபெண்கள் முன்னேற்றம்
- Community healthசமுதாய நலம்
-
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
- ஜி.யு. போப்✓
- தேவநேயப்பாவாணர்
-
ஆற்றூர் பேச்சு வழக்கில் ——————— என மருவியுள்ளது.
- ஆம்பூர்
- அரூர்
- அரசூர்
- ஆத்தூர்✓
-
Match the following:பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) First Five Year Plan 1. Economic stability (b) Second Five Year Plan 2. Growth with stability (c) Third Five Year Plan 3. Problems of refugees, food shortage and inflation (d) Fourth Five Year Plan 4. Self-generating economy (a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை (b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி (c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள் (d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →