13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 1 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
Topics in General Scienceஇந்தப் பாடத்தின் பிரிவுகள்
Every General Science questionஅனைத்து வினாக்களும்
-
Methane is the carbon compound. It's Molecular Formula isமீத்தேன் ஒரு கார்பன் சேர்மம். இதன் மூலக்கூறு வாய்பாடு என்ன?
- CH₄CH₄✓
- CH₃ClCH₃Cl
- C₂H₄C₂H₄
- CCl₄CCl₄
-
Pick out the correct reasons :
Oil mixed with petrol for two wheelers due to the following reason(s) :சரியான காரணங்களை தெரிவு செய்க :
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.- 1. It lubricates the engine parts.
- 2. It remove heat inside two engines.
- 3. It allows for the deposit of carbon on the spark plug.
- 1. இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
- 2. இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
- 3. தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
-
The interaction of biotic potential with environmental resources, as seen in populations showing the S-shaped growth curve, as :
dN/dt = rN(N−K)/K where N is the number of individuals in the population, t is the time, r is the biotic potential of the organism concerned and K stands forS-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு :
dN/dt = rN(N−K)/K இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், r என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது- Carrying capacityதாங்கும் திறன்✓
- Maximum population sizeஅதிகபட்ச மக்கள் தொகை அளவு
- Particular habitatகுறிப்பிட்ட வாழ்விடம்
- Biomassஉயிர்ப்பொருள்
-
Which of the following statements is/are correct ?
I. During oxidation, addition of hydrogen takes place.
II. During oxidation, loss of electrons takes place.
III. During oxidation, gain of electrons takes place.
IV. During oxidation, addition of electropositive ion takes place.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க :
I. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது.
இவற்றுள் :- I & III are correctI மற்றும் III சரியானவை
- III alone is correctIII மட்டும் சரியானது
- II alone is correctII மட்டும் சரியானது✓
- I & IV are correctI மற்றும் IV சரியானவை.
-
Ovulation is stimulated byஅண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
- LHLH✓
- LTHLTH
- Reninரெனின்
- Adrenalinஅட்ரீனலின்
-
Water drop in space is spherical because in the absence/reduced effects of gravity, the forces governing the objects are all the same and therefore the dropவின்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமாக இருக்கிறது. இதனால் வின்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோள வடிவம் எடுப்பதனால், நீர்த்துளி
- attains a shape having the least amount of surface area.மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.✓
- attains a shape having the maximum amount of surface area.மிக அதிகமான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
- attains a shape having the least volume.மிகக் குறைவான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
- attains a shape having the maximum volume.மிக அதிகமான பருமன் கொண்ட வடிவத்தை ஏற்கிறது.
-
The star seen closed to earth isபூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன்
- Siriusசிரியஸ்
- Alpha centauriஆல்ஃபா சென்டெளரி✓
- Cyginசைகின்
- Luytenலைடென்
-
Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
- 20 cm20 செ.மீ✓
- 40 cm40 செ.மீ
- 80 cm80 செ.மீ
- infinityமுடிவிலி
-
Match the following and find out the correct sequence.கீழ்கண்டவற்றை பொருத்துக மற்றும் மேலும் சரியான வரிசை முறையை காண்க.
- (a) Abiotic component
- (b) Bagasse
- (c) Carcinogen
- (d) Carnivorous
- (a) உயிரற்ற பொருள்
- (b) கரும்புச் சக்கை
- (c) கார்சினோஜன்
- (d) ஊணுண்ணி
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Match the following and choose the correct option related to ISRO :ISRO தொடர்பான கீழ்காண்பவற்றை பொருத்தி மற்றும் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
- (a) URSC 1. ISRO's virtual space Museum
- (b) ITTP 2. ISRO satellite centre
- (c) SPARK 3. Space science for school students
- (d) YUVIKA 4. Technical training for ISRO staff
- (a) URSC 1. ISRO வின் விர்ச்சுவல் ஸ்பேஸ் மியூஸியம்
- (b) ITTP 2. ISRO துணைக்கோள் நிலையம்
- (c) SPARK 3. பள்ளி மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல்
- (d) YUVIKA 4. ISRO வின் பணியாளர்களுக்கான தொழில் நுட்பப் பயிற்சி
- 2 3 4 12 3 4 1
- 3 1 4 23 1 4 2
- 2 4 1 32 4 1 3✓
- 4 3 2 14 3 2 1
-
Inheritance of genetic defects to children can be prevented byமரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
- Somatic cell gene therapyஉடற்செல் ஜீன் சிகிச்சை முறை
- Germ cell gene therapyகருச்செல் ஜீன் சிகிச்சை முறை✓
- Cloning techniqueகுளோனிங் முறை
- Karyotyping.கேரியோடைப்பிங் முறை.
-
Which endocrine gland is attached to kidney ?மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?
- Pituitary glandபிட்யூட்டரி சுரப்பி
- Thyroid glandதைராய்டு சுரப்பி
- Pancreasகணைய சுரப்பி
- Adrenal glandஅட்ரீனல் சுரப்பி✓
-
_______ accounts for 14% of National Greenhouse Gas emissions and consumes 18% of national electricity in India.இந்தியாவின், _______ தேசிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 14% பங்களிக்கிறது மற்றும் நாட்டின் மின்சார நுகர்வில் 18% ஐப் பயன்படுத்துகிறது.
- Agriculture Sectorவிவசாய துறை✓
- Industry Sectorதொழில் துறை
- Service Sectorசேவை துறை
- Technologyதொழில்நுட்பம்
-
Kuhne's tube can demonstrate the process ofகுன்ஸ் குழாய் எந்த நிகழ்வை நிரூபிக்கும்
- Fermentationநொதித்தல்✓
- Germination of seedsவிதை முளைத்தல்
- Growth of plantsதாவர வளர்ச்சி
- Aerobic respirationகாற்றுடைய சுவாசித்தல்
-
Choose the right matches among type :சரியான வகையிலான பொருத்தத்தை தேர்வு செய்க :
- 1. Hydrogen - Alternative energy
- 2. Biogas - From Non-degradable waste
- 3. Solar energy - Water heating
- 4. Geothermal energy - Wind speed and direction
- 1. ஹைட்ரஜன் - மாற்று ஆற்றல்
- 2. உயிரியாயு - மக்காத கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது
- 3. சூரிய ஆற்றல் - நீர் சூடாக்குதல்
- 4. புவி வெப்ப ஆற்றல் - காற்றின் வேகம் மற்றும் திசை
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது
-
Match the following :பொருத்துக :
(a) Force 1. Watt (b) Momentum 2. Joule (c) Power 3. Kg.m.s⁻¹ (d) Energy 4. Newton (a) விசை 1. வாட் (b) உந்தம் 2. ஜூல் (c) திறன் 3. கி.கி.மீ.வி.⁻¹ (d) ஆற்றல் 4. நியூட்டன் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Which of the following facts about Covid-19 virus is / are wrong?கோவிட் - 19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
- (a) People who have been infected by the virus but do not have symptoms do not spread virus.
- (b) Reinfection is not possible.
- (c) Anosmia (loss of smell) is a symptom.
- (d) Babies do not get infected by Corona virus.
- (a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
- (b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
- (c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
- (d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (a), (b) and (d)(a), (b) மற்றும் (d)✓
- (c) only(c) மட்டும்
- (d) only(d) மட்டும்
-
Newton's third law is applicable to bodiesநியூட்டனின் மூன்றாம் விதி ................... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
- at rest onlyஓய்வு நிலையில் மட்டும்
- in motion onlyஇயக்க நிலையில் மட்டும்
- both at rest and in motionஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்✓
- with same massசமமான நிறை
-
Consider the following statements and select your answerகீழ்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.Assertion (A) : Electron microscopes can give better resolution than optical microscopes.
Reason (R) : A high energy particle has a short de Broglie wavelength and so can probe the small scale interior structure of other particles.
- Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும்.✓
- Both (A) and (R) are true and (R) is not the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. ஆனால் (R), (A) விற்கான சரியான விளக்கமல்ல.
- Both (A) and (R) are false.(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை.
- (A) is true but (R) is false.(A) சரியானது ஆனால் (R) தவறானது.
-
Among the following which one is not an Insecticide?பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
- DDTDDT
- BHCBHC
- Zinc phosphideதுத்தநாக பாஸ்பைடு
- Zinc sulphideதுத்தநாக சல்பைடு✓
-
The normal blood glucose level isமனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோசின் அளவு
- 80-120 mg/100 ml80-120 mg/100 ml✓
- 70-110 mg/100 ml70-110 mg/100 ml
- 60-110 mg/100 ml60-110 mg/100 ml
- 50-110 mg/100 ml50-110 mg/100 ml
-
Choose the right matches among the following:சரியான இணையைக் கண்டறிக :
- 1. Five Kingdom System — R.H. Whittaker
- 2. Six Kingdom System — Carl Woese, et al
- 3. Four Kingdom System — Carl Linnaeus
- 4. Three Kingdom System — Ernst Haeckel
- 1. ஐந்துலக வகைப்பாடு — R.H. விட்டாக்கெர்
- 2. ஆறுலக வகைப்பாடு — கார்ல் வெயிசி, ம.ப.
- 3. நான்குலக வகைப்பாடு — கார்ல் லின்னேயஸ்
- 4. மூன்றுலக வகைப்பாடு — எர்னெஸ்ட் ஹெக்கேல்
- (1) only correct(1) மட்டும் சரி
- (1), (2) and (4) are correct(1), (2) மற்றும் (4) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரியானவை
-
Which one called from the development and the maturation of the erythrocyte from the haemocytoblast?கீழ்க்கண்டவற்றில் இரத்த சிவப்பு அணுக்கள் ஹிமட்டோபிளாஸ்டிகளிலிருந்து உருவாகி முதிர்ச்சி அடைவதற்கு பெயர்
- Erythropoiesisஎரித்திரோபாய்சிஸ்✓
- Erythrocyninஎரித்திரோசைனின்
- Erythrocyteஎரித்திரோசைட்
- Haemotocyteஹிமட்டோசைட்
-
Which of the following is strong acid and strong base reaction?பின்வருவனவற்றுள் வீரிய மிகுந்த அமிலம் மற்றும் வீரிய மிகுந்த கார வினையை தேர்ந்து எடுக்கவும்
- HCOOH + NH₃HCOOH + NH₃
- HCOOH + NaOHHCOOH + NaOH
- HCl + NH₃HCl + NH₃
- HCl + NaOHHCl + NaOH✓
-
Calculate the dimensions of Planck's constant 'h', using the equation E=hγ, where E → energy and γ → frequencyE=hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்
- MLT⁻¹MLT⁻¹
- ML²T⁻¹ML²T⁻¹✓
- ML⁻¹T⁻²ML⁻¹T⁻²
- ML⁻²T⁻¹ML⁻²T⁻¹
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →