General Scienceபொது அறிவியல்
Biology — 119 previous-year questions — page 1 of 5
Every Biology question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 119questionsவினாக்கள்
-
The interaction of biotic potential with environmental resources, as seen in populations showing the S-shaped growth curve, as :
dN/dt = rN(N−K)/K where N is the number of individuals in the population, t is the time, r is the biotic potential of the organism concerned and K stands forS-வடிவ வளர்ச்சி வளைவைக் காட்டும் மக்கள் தொகையில் காணப்படுவது போல் சுற்றுச்சூழல் வளங்களுடனான உயிரியல் ஆற்றலின் தொடர்பு :
dN/dt = rN(N−K)/K இங்கு N என்பது மக்கள் தொகையில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, t என்பது நேரம், r என்பது சம்பந்தப்பட்ட உயிரினத்தின் உயிரியல் திறன், மற்றும் K என்பது- Carrying capacityதாங்கும் திறன்✓
- Maximum population sizeஅதிகபட்ச மக்கள் தொகை அளவு
- Particular habitatகுறிப்பிட்ட வாழ்விடம்
- Biomassஉயிர்ப்பொருள்
-
Ovulation is stimulated byஅண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
- LHLH✓
- LTHLTH
- Reninரெனின்
- Adrenalinஅட்ரீனலின்
-
Inheritance of genetic defects to children can be prevented byமரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
- Somatic cell gene therapyஉடற்செல் ஜீன் சிகிச்சை முறை
- Germ cell gene therapyகருச்செல் ஜீன் சிகிச்சை முறை✓
- Cloning techniqueகுளோனிங் முறை
- Karyotyping.கேரியோடைப்பிங் முறை.
-
Which endocrine gland is attached to kidney ?மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?
- Pituitary glandபிட்யூட்டரி சுரப்பி
- Thyroid glandதைராய்டு சுரப்பி
- Pancreasகணைய சுரப்பி
- Adrenal glandஅட்ரீனல் சுரப்பி✓
-
Kuhne's tube can demonstrate the process ofகுன்ஸ் குழாய் எந்த நிகழ்வை நிரூபிக்கும்
- Fermentationநொதித்தல்✓
- Germination of seedsவிதை முளைத்தல்
- Growth of plantsதாவர வளர்ச்சி
- Aerobic respirationகாற்றுடைய சுவாசித்தல்
-
The normal blood glucose level isமனித உடலில் இயல்பான இரத்த குளுக்கோசின் அளவு
- 80-120 mg/100 ml80-120 mg/100 ml✓
- 70-110 mg/100 ml70-110 mg/100 ml
- 60-110 mg/100 ml60-110 mg/100 ml
- 50-110 mg/100 ml50-110 mg/100 ml
-
Choose the right matches among the following:சரியான இணையைக் கண்டறிக :
- 1. Five Kingdom System — R.H. Whittaker
- 2. Six Kingdom System — Carl Woese, et al
- 3. Four Kingdom System — Carl Linnaeus
- 4. Three Kingdom System — Ernst Haeckel
- 1. ஐந்துலக வகைப்பாடு — R.H. விட்டாக்கெர்
- 2. ஆறுலக வகைப்பாடு — கார்ல் வெயிசி, ம.ப.
- 3. நான்குலக வகைப்பாடு — கார்ல் லின்னேயஸ்
- 4. மூன்றுலக வகைப்பாடு — எர்னெஸ்ட் ஹெக்கேல்
- (1) only correct(1) மட்டும் சரி
- (1), (2) and (4) are correct(1), (2) மற்றும் (4) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரியானவை
-
Which is an example for chemosynthetic heterotroph?வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?
- Manமனிதன்✓
- Viscumவிஸ்கம்
- Nitrosomonasநைட்ரசோமோனாஸ்
- Beggiatoaபெக்யாடோவா
-
Assertion [A] : 2 - 4 - D is used as herbicides.கூற்று [A] : 2 - 4 - D களைக்கொல்லியாக செயல்படுகிறது.
Reason [R] : 2 - 4 - D induces production of fruits without fertilization.
காரணம் [R] : 2 - 4 - D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.
- [A] is true, [R] is the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கம்
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] சரியானது
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
- [A] is true, [R] is not the correct explanation[A] சரியானது, [R] சரியான விளக்கமில்லை✓
-
A preparation of living (or) killed micro-organism (or) viruses used in prevention of diseases through immunization is calledஉயிருள்ள (அ) உயிரற்ற நுண்ணுயிர் உயிரினங்கள் (அ) வைரஸ்களை தம் உடலினூள் செலுத்தி தம்மை எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு என்ன பெயர்?
- Toxoidடாக்சாய்டு
- Vaccineதடுப்பு வாசி✓
- Viremiaவிரிமியா
- Anti - toxinஎதிர் - நச்சு
-
Inhibition of gastric secretion is brought about byஇரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு
- Pancreozyminபன்க்ரொஜைமின்
- Gastrinகஸ்ட்ரின்
- Enterogastroneஎண்டெரோகஸ்ட்ரோன்✓
- Cholecytokininகோலேசைட்டோகைனைன்
-
Assertion [A] : High density lipoproteins transport cholesterol from peripheral tissues to the liver.கூற்று [A] : உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்கு கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.
Reason [R] : The elevation of lipids in plasma leads to the deposition of cholesterol on the arterial walls, leading to atherosclerosis.
காரணம் [R] : பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல✓
-
Consider the statements :கீழ்கண்ட கூற்றுகளை கவனி :
- (a) Sterility is caused by the deficiency of Vitamin K.
- (b) Night blindness is caused by the deficiency of Vitamin D.
- (a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
- (b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
- Both (a) and (b) are false(a) மற்றும் (b) தவறானவை✓
- (a) is false and (b) is true(a) தவறு மற்றும் (b) சரி
- (a) is true and (b) is false(a) சரி மற்றும் (b) தவறு
- Both (a) and (b) are true(a) மற்றும் (b) சரியானவை
-
Point out the wrong statement/statements in the following :பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக :
- (i) Organisms which are able to synthesize their own food are called autotrophs
- (ii) Organisms which are unable to synthesize their own food are called heterotrophs
- (iii) Organisms which are unable to synthesize their own food are called autotrophs
- (iv) Organisms which are able to prepare their own food are called heterotrophs
- (i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
- (ii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
- (iii) தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள்
- (iv) தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
- (ii) and (iv)(ii) and (iv)
- (i) and (ii)(i) and (ii)
- (i) and (iii)(i) and (iii)
- (iii) and (iv)(iii) and (iv)✓
-
Severe diarrhoea is a symptom ofதீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
- Tuberculosisடியூபர்குலோசிஸ்
- Choleraகாலரா✓
- Leprosyதொழுநோய்
- Anthraxஆன்த்ராக்ஸ்
-
The best source of vitamin D isவைட்டமின்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?
- Margarineமார்கரைன்✓
- Riceஅரிசி
- Wheatகோதுமை
- Sugarcaneகரும்பு
-
Identify the teeth absent in milk dentition in mammals.பாலூட்டிகளில் பால்பற்களின் அமைவில் காணப்படாதது.
- Premolarsமுன்கடைவாய் பற்கள்
- Molarsபின்கடைவாய் பற்கள்✓
- Caninesகோரைப் பற்கள்
- Incisorsவெட்டுப் பற்கள்
-
Which group of plants species are lower in number in the plant kingdom?தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
- Fungiபூஞ்சைகள்
- Pteridophytaடெரிடோபைட்டா
- Bryophytesபிரையோஃபைட்டுகள்
- Gymnospermsஜிம்னோஸ்பெர்ம்கள்✓
-
Which one of the following is correctly matched?
I. Gregor Mendel - Neurospora
II. T.H. Morgan - Drosophila
III. C.B. Bridges - Garden pea
IV. J.H. Muller - Miceகீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
What is phototropism?போட்டோட்ராப்பிசம் என்றால் என்ன?
- movement of plants towards chemicalsசெடிகளின் வேதி பொருள்கள் நோக்கிய இயக்கம்
- movement of plants towards lightசெடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்✓
- movement of plants towards soilசெடிகளின் மண நோக்கிய இயக்கம்
- response of plants for day lengthசெடிகளின் ஒளி காலத்து விளைவு
-
Edible mushrooms areஉண்ணக் கூடிய காளான்கள்
- Agaricus bisporousஅகாரிகஸ் பைஸ்போரஸ்✓
- Rhizopusரைசோபஸ்
- Mucorமியூக்கர்
- Neurosporaநியூரோஸ்போரா
-
Arrange the following stages of meiosis-I in correct sequence.
I. Pachytene
II. Zygotene
III. Leptotene
IV. Diploteneபின்வரும் மியாசிஸ் I-ன் நிலைகளை சரியான வரிசைகளில் எழுதுக.
I. பேக்கிடீன்
II. சைகோடீன்
III. லெப்டோடீன்
IV. டிப்ளோடீன்- III, II, I, IVIII, II, I, IV✓
- II, I, IV, IIIII, I, IV, III
- IV, I, III, IIIV, I, III, II
- I, II, IV, IIII, II, IV, III
-
Identify the correct pairing.சரியான இணையைக் கண்டுபிடி.
- Nucleoside – Nitrogen base + phosphateநியூக்ளியோசைடு – நைட்ரஜன் காரம் + பாஸ்பேட்
- Pyrimidines – Cytosine and sugarபிரிமிடின்கள் – சைட்டோசின் மற்றும் சர்க்கரை
- Purines – Adenine and Guanineபியூரின்கள் – அடினைன் மற்றும் குவானைன்✓
- Nucleotide – Nucleoside + sugarநியூக்ளியோடைடு – நியூக்ளியோசைடு + சர்க்கரை
-
Match Column I with Column II and III and choose the correct options :
Column Iபட்டியல் I, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க
பட்டியல் I1. Typhoid
2. Pneumonia
3. Filariasis
4. Ringworm
Column II
(a) Haemophilus influenza
(b) Trichophyton
(c) Salmonella typhi
(d) Wuchereri malayi
Column III
(i) Chronic inflammation of the lymphatic vessels
(ii) Dry scaly lesions on the skin
(iii) Alveoli filled with fluid
(iv) Intestinal perforations1. டைபாய்டு ஜுரம்
2. நிமோனியா
3. ஃபைலேரியாசிஸ்
4. படர்தாமரை
பட்டியல் II
(a) ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளுயன்சா
(b) டிரைக்கோஃபைட்டான்
(c) சால்மொனெல்லா டைபி
(d) உச்செரேரியா மாலாயி
பட்டியல் III
(i) நிணநீர் நாளங்களின் நாட்பட்ட வீக்கம்
(ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்
(iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
(iv) குடல் ரணமாதல்- 1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii1-c-iv; 2-a-ii; 3-b-i; 4-d-iii
- 1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i1-c-iv; 2-b-ii; 3-a-iii; 4-d-i
- 1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii✓
- 1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii1-c-iv; 2-d-ii; 3-a-i; 4-b-iii
-
Match the diseases in Column I with the site of infectious in Column II :
Column Iகீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக :
Column I(a) Dengue 1. Intestine, Brain (b) Polio myelitis 2. Skin and Blood (c) Measels 3. Respiratory tract and Nervous system (d) Chicken Pox 4. Skin and Respiratory tract Column II
(a) டெங்கு 1. குடல், மூளை (b) இளம்பிள்ளை வாதம் 2. தோல், இரத்தம் (c) தட்டம்மை 3. சுவாசப்பாதை, நரம்பு மண்டலம் (d) சின்னம்மை 4. தோல், சுவாசப்பாதை Column II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →