General Scienceபொது அறிவியல்
Biology — 119 previous-year questions — page 4 of 5
Every Biology question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 119questionsவினாக்கள்
-
Identify the correctly matched Fossil:சரியாக பொருந்திய தொல்லுயிரினை தேர்ந்தெடுக்க :
- Alga – Furculaபாசி – பர்குலா
- Bryophyte – Naiaditaபிரையோஃபைட் – நயடைட்டா✓
- Pteridophyte – Lepidocarponடெரிடோஃபைட் – லெப்பிடோகார்பான்
- Gymnosperm – Rhyniaஜிம்னோஸ்பெர்ம் – ரைனியா
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a) Apospory 1. Development of a sporophyte directly from the gametophyte (b) Apogamy 2. Fruit formation without fertilization of ovules (c) Parthenocarpy 3. Development of an embryo from an unfertilized egg cell (d) Parthenogenesis 4. Development of gametophytes directly from the sporophyte (a) அப்போஸ்போரி 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது (b) அப்போகேமி 2. கருவுறாமல் பழம் உருவாகுவது (c) பார்த்தினோகார்பி 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது (d) பார்த்தினோஜெனிசிஸ் 4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Which of the following statements about respiration is true?
I. Respiration results in loss of dry weight in plants.
II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.
III. The oxygen concentration is not known to affect respiration.
IV. Respiration is a constructive process.சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.- I, II and IVI, II மற்றும் IV
- II and IVII மற்றும் IV
- I and II onlyI மற்றும் II மட்டும்✓
- I and IIII மற்றும் III
-
Pseudomonas putida a genetically engineered bacterium was invented byசூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
- Dr. Ian WilmutDr. அயன் வில்மட்
- Dr. KoranaDr. கொரானா
- Dr. ChandrasekarDr. சந்திரசேகர்
- Dr. Ananda Mohan ChakrabortyDr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி✓
-
The A, B, O blood grouping was first discovered byA, B, O இரத்த வகைகளை முதன்முதலில் கண்டுபிடித்தவர்
- Landsteiner and Levineலேண்ட்ஸ்டைனர் மற்றும் லெவீன்✓
- Muller H.J.முல்லர் H.J.
- Morganமார்கன்
- Weinerவெயின்னர்
-
Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :
(a) Cerebral cortex 1. Temperature control (b) Hypothalamus 2. Sensory perception (c) Cerebellum 3. Role in sleep-awake cycle (d) Pons 4. Maintenance of posture and balance (a) பெருமூளைப் புறணி 1. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் (b) ஹைப்போதலாமஸ் 2. உணர்வுகளைப் பெறுதல் (c) சிறுமூளை 3. உறக்க-விழிப்பு சுழற்சி (d) பான்ஸ் 4. உடல் சமநிலை - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Which one of the following matches is correct?கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
(a) Thyroid hormone 1. Cushing's disease (b) Insulin 2. Myxedema (c) Corticosteroids 3. Acromegaly (d) Growth hormone 4. Diabetes (a) தைராய்டு ஹார்மோன் 1. குசிங்ஸ் நோய் (b) இன்சுலின் 2. மிக்ஸிடிமா (c) கார்டிகோஸ்டிராய்ட்ஸ் 3. அக்ரோமெகாலி (d) வளர் ஹார்மோன் 4. நீரழிவு நோய் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
What is Methylation?
I. A natural process that chemically modifies DNA
II. A physically modified process that converts higher energy to lower energy
III. Used as a biological clock
IV. Used in anaesthesiaமிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III. உயிர் நாலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை- I onlyI மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்✓
- II onlyII மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்
-
Human blood grouping was discovered byமனித இரத்த வகைகளைக் கண்டறிந்தவர்
- Landsteinerலேன்ட்ஸ்டைனர்✓
- Punettபுன்னெட்
- Corrensகோரென்ஸ்
- Mullerமுல்லர்
-
A special root-like structure in cuscuta and viscum is calledகஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
- Rhizoidsவேரிகள்
- Haustoriaஹாஸ்டோரியாக்கள்✓
- Hyphaeஹைப்பாக்கள்
- Stolensஸ்டோலன்
-
Which one of the following bacterium has extensive usage in Genetic Engineering work in plants?தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
- Clostridium septicumக்ளாஸ்டிரிடியம் செப்டிகம்
- Xanthomonas citriசேந்தோமோனாஸ் சிட்ரை
- Bacillus coagulensபேசில்லஸ் கோயாகுலன்ஸ்
- Agrobacterium tumefaciensஅக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்✓
-
The method of respiration which takes place in euglena isயூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
- Contractionசுருங்குதல்
- Absorptionஉறிஞ்சுதல்
- Diffusionபரவல்✓
- Conductionகடத்துதல்
-
Which of the following food material is translocated by phloem loading?கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது?
- Glucoseகுளுக்கோஸ்
- Starchஸ்டார்ச்
- Fructoseப்ரக்டோஸ்
- Sucroseசுக்ரோஸ்✓
-
In the following cross between parents, a child with B blood group is not possible why?கீழ்க்காணும் பெற்றோர்களுக்கான இணைகாட்டில் அட்டவணையின்படி 'B' இரத்த வகையைக் கொண்டுள்ள குழந்தைக்கு வாய்ப்பு இல்லை. ஏன் என விளக்கு.
- Because one parent is A homozygous dominant to the other is B heterozygous. Children with recessive b will become A because A is dominant. If the parent with A blood group is heterozygous dominant, then only child with 'B' blood group is possibleஒருவரின் 'A' இரத்த வகை ஒரே வகை ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது. ஒருவரிடம் 'b' இரத்த வகையைப் பெரும் குழந்தை 'A' தீ்னால் 'A' இரத்த வகையைப் பெறுகின்றது. 'A' இரத்த வகையைக் கொண்ட பெற்றோர் மாறுபட்ட ஜீன்களை 'A' கொண்டிருந்தால் மட்டுமே 'B' இரத்த வகை குழந்தை தோன்றும்✓
- Because parent with blood group 'B' is heterozygousபெற்றோரின் 'B' இரத்த வகை மாறுபட்ட ஜீன்களைக் கொண்டுள்ளது
- Because parent with blood group 'AB' is homozygousபெற்றோரின் 'AB' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
- Because parent with blood group 'B' is homozygousபெற்றோரின் 'B' இரத்த வகை ஒரே மாதிரியான ஜீன்களைக் கொண்டுள்ளது
-
Assertion [A] : HIV infection more often spreads due to conscious behaviour patterns.கூற்று [A] : எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது.
Reason [R] : The infection of AIDS in blood transfusion patients may occur due to poor monitoring
காரணம் [R] : இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்.
- Both [A] and [R] are not trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரியானதல்ல
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்.
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
- [A] is true and [R] is falseகூற்று [A] சரி, மற்றும் காரணம் [R] தவறு
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Cholera 1. Fungi (b) African sleeping sickness 2. Virus (c) Phlegm 3. Bacteria (d) Dandruff 4. Protozoa. Codes :
பட்டியல் I பட்டியல் II (a) காலரா 1. பூஞ்சை (b) ஆப்பிரிக்க தூக்க வியாதி 2. வைரஸ் (c) மார்புச் சளி 3. பாக்டீரியா (d) பொடுகு 4. புரோட்டோசோவா. குறியீடுகள் :
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Mutant variety of wheat isசடுதி மாற்ற கோதுமை வகை
- Oenothera Lamarkianaஈனோதீரா லாமார்க்கியானா
- Castor Arunaஆமணக்கு அருணா
- Sharbati Sonoraசார்பதி சொனோரா✓
- Mirabilis Jalabaமிராபிலிஸ் ஜலாபா
-
Angiosperms differ from gymnosperms byஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது
- Being evergreenஎப்பொழுதும் பசுமையானது
- Having compound leavesகூட்டிலைகள் கொண்டது
- Being smaller in sizeசிறிய அளவினைக் கொண்டது
- Having ovule enclosed in the ovaryசூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்✓
-
The Respiratory quotient value for glucose isகுளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
- 0.50.5
- 1.01.0✓
- 1.51.5
- 2.02.0
-
The opaqueness of the lens of the eye is known asகண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை ................... என்று அழைக்கப்படுகிறது.
- Retinopathyரெடினோபதி
- Cataractகண்புரை✓
- Astigmatismஅஸ்டிக் மாட்டிசம்
- Presbiopia.பிரஸ்பியோபியா.
-
One of the following is a mismatch :இவற்றில் ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :
- 1. Down's Syndrome – Autosomal trisomy of 21st chromosome
- 2. Haemophilia – Sex Linked
- 3. Klinefelter Syndrome – XO Complement
- 4. Turner Syndrome – Female with retarded growth
- 1. டவுனின் குறைபாட்டு நோய் – 21 வது குரோமோசோமில் ஏற்படும் ஆட்டோசோமல் டிரைசோமி
- 2. ஹீமோபிலியா – பால் இணைந்த தலைமுறை
- 3. கிளின்ஃபெல்டர் குறைபாட்டு நோய் – XO நிலை
- 4. டர்னரின் குறைபாட்டு நோய் – வளர்ச்சி பின்னடைந்த மகளிர்
- (3) only(3) மட்டும்✓
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
-
Find the correct statement/s :
I. After the release of the ovum the ruptured graffian follicle is transformed into corpus luteum.
II. Corpus luteum a transitory endocrine gland.சரியான கூற்றை தேர்வு செய்க :
I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.
II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.- I wrong II correctI தவறு II சரி
- I correct II wrongI சரி II தவறு
- Both I and II wrongI மற்றும் II தவறு
- Both I and II are correctI மற்றும் II சரி✓
-
Which of the following hormone stimulates contraction of uterine smooth muscle?கீழ்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது தசைகளைச் சுருக்க உந்துகிறது?
- Epinephrinஎபிநெப்ரின்
- Insulinஇன்சுலின்
- Oxytocinஆக்ஸிடோசின்✓
- Glucagonகுளுக்ககான்
-
In lower organisms sometimes the entire mature organisms do not form gametes but they themselves behave as gametes and the fusion of such mature individuals is known asகீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்
- Anisogamyவேறுபட்ட செல் சேர்க்கை
- Merogamyமாறுபட்ட செல் சேர்க்கை
- Paedogamyஇளம் செல் சேர்க்கை
- Hologamyமுழு சேர்க்கை✓
-
Which of the following facts are correct about prokaryotic cells
I. Prominent nucleus is absent
II. Nucleolus is present
III. Mitosis and meiosis cell divisions are takes place
IV. Enveloped cell organelles are absentபின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
I. தெளிவான உட்கரு கிடையாது
II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது
III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது
IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது- I and II are correctI மற்றும் II சரி
- I and IV are correctI மற்றும் IV சரி✓
- II and III are correctII மற்றும் III சரி
- III and IV are correctIII மற்றும் IV சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →