Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 1 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 1 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
1.Assertion [A] : Databases of the Digital Herbarium simplify taxonomical references.கூற்று [A] : டிஜிட்டல் உலர் தாவரத் தொகுப்புத் தரவுத்தளங்கள் வகைப்பாட்டியல் குறிப்புகளை எளிதாக்குகின்றன.
Reason [R] : Databased images cannot help in confirming a specimen's historical collection data or location.
காரணம் [R] : தரவுத்தளத்தில் உள்ள படங்கள், ஒரு மாதிரியின் வரலாற்றுச் சேகரிப்பு தேதி அல்லது இருப்பிடத்தை உறுதிப்படுத்த உதவாது.
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
- [A] is true, but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, மேலும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, ஆனால் [R] ஆனது [A] யின் சரியான விளக்கமல்ல
-
2.Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Minamata disease 1. Nitrate (b) Itai-Itai disease 2. Mercury (c) Black foot disease 3. Cadmium (d) Blue baby syndrome 4. Arsenic (a) மினமாட்டா நோய் 1. நைட்ரேட் (b) இடாய்-இடாய் நோய் 2. பாதரசம் (c) கருப்புப் பாத நோய் 3. காட்மியம் (d) நீலக் குழந்தை நோய் 4. ஆர்சனிக் - (a) 4 (b) 3 (c) 2 (d) 1(a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1✓
- (a) 3 (b) 1 (c) 2 (d) 4(a) 3 (b) 1 (c) 2 (d) 4
- (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
-
3.Match the following :பொருத்துக :
(a) 1737 1. Orissa cyclone (b) 1970 2. Calcutta cyclone (c) 1991 3. Bhola cyclone (d) 1999 4. Bangladesh cyclone (a) 1737 1. ஒரிசா புயல் (b) 1970 2. கொல்கத்தா புயல் (c) 1991 3. போலா புயல் (d) 1999 4. வங்கதேச புயல் - (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1✓
- (a) 3 (b) 4 (c) 2 (d) 1(a) 3 (b) 4 (c) 2 (d) 1
- (a) 4 (b) 3 (c) 2 (d) 1(a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
-
4.Which of the following are examples of nature-based solutions for disaster risk reduction mentioned in the Tamilnadu State Disaster Management (TNSDM) Policy?தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையில் (TNSDM) குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் எவை?
- (i) Wetland Restoration
- (ii) Blue - Green infrastructure
- (iii) Concrete flood wall construction
- (iv) Sponge cities
- (i) சதுப்பு நில மறுசீரமைப்பு
- (ii) நீலம் – பசுமை உள்கட்டமைப்பு
- (iii) கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர்கள்
- (iv) ஸ்பாஞ்ச் நகரங்கள்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
-
5.Which of the following statements are true about Thanthai Periyar?கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் தந்தை பெரியார் பற்றிய சரியான தொடரைக் கூறுக.
- (i) When the Justice party renamed as Dravidar Kazhagam, Thanthai Periyar introduced the flag featured with red circle in black background.
- (ii) The flag of Dravida Kazhagam was introduced in Trichy conference.
- (iii) The red circle represented the revolutionary thoughts.
- (i) நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது கருப்பு பின்னணியுடன் சிவப்பு வட்டம் உள்ள கொடியை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்.
- (ii) திருச்சி மாநாட்டில் திராவிடர் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
- (iii) கொடியின் சிவப்பு வட்டப்பகுதி புரட்சி சிந்தனைகளைக் குறிக்கிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
6.Who was not the founding member of the Muslim League in 1906?கீழ்க்காணும் தலைவர்களில் 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் நிறுவப்பட்ட போது அதன் நிறுவன உறுப்பினராக இல்லாதவர் யார்?
- Nawab Salimullahநவாப் சலீமுல்லா
- Aga Khanஆகா கான்
- Mohsin-Ul-Mulkமொகசின்-உல்-முல்க்
- M.A. Jinnahமு.அ. ஜின்னா✓
-
7.Reason and Assertion Type.காரணம் மற்றும் கூற்று வகை.
Assertion [A] : On April 8, 1929 C.E. revolutionaries Bhagat Singh and Batukeshwar Dutt threw bombs into the Central Legislative Assembly.
Reason [R] : Bhaghat Singh and B.K. Dutt were against the passage of the Public Safety Bill and the Trade Disputes Bill.
கூற்று [A] : பொ.ஆ. 1929 ஏப்ரல் 8-ஆம் தேதி, புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் மத்திய சட்டப் பேரவையில் குண்டுகளை வீசினர்.
காரணம் [R] : பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் (தொழில் தகராறு) தொழில் சர்ச்சைகள் மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு எதிராக செயல்பட்டனர்.
- [A] is true but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false and [R] is true[A] தவறானது, [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
8.Arrange the following events in chronological order :காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- 1. The Arya Samaj
- 2. Ramakrishna Mission
- 3. Brahmo Samaj
- 4. Prarthana Samaj
- 1. ஆரிய சமாஜம்
- 2. இராமகிருஷ்ணா இயக்கம்
- 3. பிரம்ம சமாஜம்
- 4. பிரார்த்தன சமாஜம்
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (1), (2), (4)(3), (1), (2), (4)
- (3), (4), (1), (2)(3), (4), (1), (2)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
9.Assertion [A] : A medieval Historian Zia-ud-din Barani encouraged the inclusion of Neo-Muslims into Aristocracy.கூற்று [A] : மத்திய கால வரலாற்றாசிரியர் ஜியாவுத்தீன் பரணி புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களை அரசவை கோமான்களாக சேர்ப்பதற்கு ஊக்குவித்தார்.
Reason [R] : Balban's son Prince Muhammed valued knowledge and talent than noble-birth.
காரணம் [R] : பால்பனின் மகனான இளவரசன் முகம்மது உயர்குடிப் பிறப்பைவிடச் சிறந்த அறிவும் திறமையுமே முக்கியம் என்பதை நிரூபித்தார்.
- [A] is true, but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false and [R] is true[A] தவறானது, மேலும் [R] சரியானது✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
10.Match the following events based on the year of introduction :கீழ்க்கண்ட நிகழ்வுகளை அறிமுகமான ஆண்டின் அடிப்படையில் சரியாகப் பொருத்துக.
(a) Blue Revolution 1. 1965 (b) White Revolution 2. 1974 (c) Green Revolution 3. 1985 (d) Total Revolution 4. 1970 (a) நீலப்புரட்சி 1. 1965 (b) வெண்மைப்புரட்சி 2. 1974 (c) பசுமைப்புரட்சி 3. 1985 (d) முழுமையான புரட்சி 4. 1970 - (a) 3 (b) 4 (c) 1 (d) 2(a) 3 (b) 4 (c) 1 (d) 2✓
- (a) 4 (b) 2 (c) 1 (d) 3(a) 4 (b) 2 (c) 1 (d) 3
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (a) 3 (b) 4 (c) 2 (d) 1(a) 3 (b) 4 (c) 2 (d) 1
-
11.University of Madras was started based on whose report?யாருடைய அறிக்கையின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?
- Lord Riponரிப்பன் பிரபு
- Sir Charles Woodசர் சார்லஸ் உட்✓
- William Bentickவில்லியம் பென்டிக்
- Nortonநார்டன்
-
12.Match the following :
Subjectபொருத்துக :
பொருள்(a) India's membership of the commonwealth 1. 1950 (b) India adopted National Anthem 2. 1949 (c) India adopted National Flag 3. 1948 (d) First draft of the Constitution Published 4. 1947 Year
(a) காமன்வெல்த்தில் இந்தியா உறுப்பினரானது 1. 1950 (b) இந்தியாவில் தேசியகீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது 2. 1949 (c) இந்தியாவில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது 3. 1948 (d) அரசியலமைப்பின் முதல் வரைவு பிரதி வெளியிடப்பட்டது 4. 1947 ஆண்டு
- (a) 2 (b) 1 (c) 4 (d) 3(a) 2 (b) 1 (c) 4 (d) 3✓
- (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (a) 1 (b) 2 (c) 4 (d) 3(a) 1 (b) 2 (c) 4 (d) 3
-
13.Which among the following is correct with regard to Fundamental Rights in India?இந்தியாவில் அடிப்படை உரிமை தொடர்பான கருத்துகளில் சரியானவை எவை?
- (i) Fundamental Rights uphold equality of certain individuals.
- (ii) It establishes a Government of Laws and not of men.
- (iii) It promotes the ideal of political democracy.
- (i) அடிப்படை உரிமைகள் குறிப்பிட்ட தனிநபர்கள் சிலரின் சமத்துவத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.
- (ii) அடிப்படை உரிமைகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுகின்றன; மனிதர்களின் ஆட்சியை நிலைநாட்டவில்லை.
- (iii) அடிப்படை உரிமைகள் மக்களாட்சி அரசியலின் இலட்சியத்தை மேம்படுத்துகிறது.
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி✓
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரி
-
14.Which of the following statement(s) is/are true about the election of the President of India?கீழ்க்காணும் இந்திய குடியரசு தலைவர் தேர்வுமுறைகளுள் எது/எவை சரியானது?
- (i) The elected members of both Houses of Parliament.
- (ii) The elected members of the Legislative Assemblies of the States.
- (iii) The members of the Legislative Assemblies of the all Union Territories.
- (i) பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
- (ii) தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
- (iii) அனைத்து ஒன்றிய பிரதேசங்களில் உள்ள உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
15.Choose the right matches.
Dates of Constitution of the Lok Sabhaபொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மக்களவை அமைந்த நாட்கள்- 1. Fourth Lok Sabha - 23.03.1977
- 2. Sixth Lok Sabha - 15.03.1971
- 3. Eighth Lok Sabha - 31.12.1984
- 4. Tenth Lok Sabha - 20.06.1991
- 1. நான்காவது மக்களவை – 23.03.1977
- 2. ஆறாவது மக்களவை – 15.03.1971
- 3. எட்டாவது மக்களவை – 31.12.1984
- 4. பத்தாவது மக்களவை – 20.06.1991
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி✓
-
16.Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- (i) To aid and advise the Governor in the exercise of his functions.
- (ii) The Ministers are appointed by the Chief Minister of the State.
- (iii) The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
- (i) ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையையும் அளித்தல்.
- (ii) மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
- (iii) அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
17.Match the following :
Subject-matterபின்வருவனவற்றைப் பொருத்துக :
பொருள்(a) Powers to impose taxes of Panchayats 1. Article 243 I (b) Audits of Panchayats 2. Article 243 D (c) Finance Commission to Panchayats 3. Article 243 E (d) Reservation of Panchayats 4. Article 243 J 5. Article 243 H Articles
(a) பஞ்சாயத்துகளுக்கு வரி விதிக்கும் அதிகாரங்கள் 1. சரத்து 243 I (b) பஞ்சாயத்து தணிக்கைகள் 2. சரத்து 243 D (c) பஞ்சாயத்துகளின் நிதி ஆணையம் 3. சரத்து 243 E (d) பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு 4. சரத்து 243 J 5. சரத்து 243 H சரத்து
- (a) 4 (b) 5 (c) 1 (d) 3(a) 4 (b) 5 (c) 1 (d) 3
- (a) 5 (b) 4 (c) 1 (d) 2(a) 5 (b) 4 (c) 1 (d) 2✓
- (a) 2 (b) 3 (c) 5 (d) 1(a) 2 (b) 3 (c) 5 (d) 1
- (a) 3 (b) 2 (c) 4 (d) 5(a) 3 (b) 2 (c) 4 (d) 5
-
18.Consider the following statements about Union Public Service Commission. Which among the following statement is correct?மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து பின்வருவனவற்றுள் சரியானது எது?
- The expenses of the UPSC shall be charged on the consolidated fund of state.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய செலவினங்கள், மாநில திரள் நிதியத்திலிருந்து செலுத்தப்படும்
- It shall be the duty of the UPSC will present annually to the Parliament of the work done by the Commission.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் அளிக்கும்
- The Chairman and other members of the Commission shall be appointed by the Prime Minister.தலைவரும், இதர உறுப்பினர்களும் பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார்கள்
- A member of the UPSC shall be eligible for appointment as the Chairman of UPSC.மத்திய தேர்வாணைய உறுப்பினர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உள்ளது✓
-
19.Match the following :
Lok Ayukta in stateகீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
மாநிலங்களில் லோக் ஆயுக்தா(a) Maharashtra 1. 1973 (b) Rajasthan 2. 1975 (c) Uttar Pradesh 3. 1983 (d) Himachal Pradesh 4. 1971 Estd. year
(a) மகாராஷ்டிரா 1. 1973 (b) ராஜஸ்தான் 2. 1975 (c) உத்திரப்பிரதேசம் 3. 1983 (d) இமாச்சலப்பிரதேசம் 4. 1971 நிறுவப்பட்ட ஆண்டு
- (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3✓
- (a) 3 (b) 4 (c) 1 (d) 2(a) 3 (b) 4 (c) 1 (d) 2
-
20.A party to become recognized State Political Party is to getஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின்
- (i) In general election, the concerned party should get minimum 6% of valid vote.
- (ii) In a state assembly elections the party should get victory in atleast 2 constituencies.
- (iii) In general election, the concerned party should get minimum 8% of vote.
- (iv) In a state assemble elections the party should get victory in atleast 4 constituencies.
- (i) பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- (ii) மாநில சட்டமன்றத்தில் குறைந்தது 2 இடங்களுக்கான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- (iii) பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 8% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- (iv) மாநில சட்டமன்றத்தில் குறைந்தது 4 இடங்களுக்கான தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரி
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி✓
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி
-
21.Which of the following explain the withdrawal of rural women from total labour force in India?கீழ்கண்டவற்றுள், எவை இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறுவதை சரியாக விளக்குகிறது?
- (i) A large number of rural females are opting for education rather than joining the labour force in agriculture.
- (ii) With the rise in the level of income in rural India, rural females engaged in agriculture withdrawing from the labour force and getting engaged in domestic activities.
- (iii) Women are not adequately educated in rural areas.
- (i) கிராமப்புற பெண்களில் பெரும்பாலானோர் வேளாண் வேலை வாய்ப்பைத் தவிர்த்து, கல்விக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
- (ii) இந்தியாவின் கிராமப்புறங்களில் வருமான மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- (iii) கிராமப்புறப் பெண்கள் போதுமான கல்வி பெறவில்லை.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
-
22.Which one of the following is not a fiscal instrument?பின்வருவனவற்றில் எந்த ஒன்று நிதிக் கருவி இல்லை?
- Taxationவரி விதிப்பு
- Bank Rateவங்கி விகிதம்✓
- Public expenditureபொதுச் செலவு
- Public Debtபொதுக்கடன்
-
23.Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : RBI Act, 1934 was amended in 2016.
Reason [R] : To implement flexible inflation targeting framework.
கூற்று [A] : 1934 ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டம், 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
காரணம் [R] : நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணயக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்காக.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
-
24._______ accounts for 14% of National Greenhouse Gas emissions and consumes 18% of national electricity in India.இந்தியாவின், _______ தேசிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 14% பங்களிக்கிறது மற்றும் நாட்டின் மின்சார நுகர்வில் 18% ஐப் பயன்படுத்துகிறது.
- Agriculture Sectorவிவசாய துறை✓
- Industry Sectorதொழில் துறை
- Service Sectorசேவை துறை
- Technologyதொழில்நுட்பம்
-
25.Choose the right matches among typeபின்வருவனவற்றுள் சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Zero-Budget natural farming – Subhash Palekar
- 2. Natural farming – Nammalvar
- 3. One-straw revolution – Bhaskar Save
- 4. Gandhi of natural farming – Deepak Suchde
- 1. பூஜ்ஜியச் செலவு இயற்கை வேளாண்மை – சுபாஷ் பாலேக்கர்
- 2. இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்
- 3. ஒரு வைக்கோல் புரட்சி – பாஸ்கர் சேவ்
- 4. இயற்கை வேளாண்மையின் காந்தி – தீபக் சச்தே
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →