Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 5 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
101.Consider the statements given below and choose the correct answer :கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்யவும் :
Assertion [A] : Iron ore is the most widely distributed element of the earth's crust and it rarely occurs in a free state.
Reason [R] : Magnetite is black in colour and has 60% of pure iron.
கூற்று [A] : புவியின் மேல் அடுக்கில் மிகப் பரவலாகக் காணப்படும் தாது இரும்புத்தாது ஆகும். மேலும் இது தனித்த நிலையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
காரணம் [R] : மேக்னடைட் கருப்பு நிறமுடையது. இது 60% தூய இரும்பைக் கொண்டது.
- Both [A] and [R] are true ; [R] explains [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரி
- Both [A] and [R] are true ; [R] does not explain [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரியல்ல✓
- [A] is true, [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
-
102.Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season.கூற்று [A] : தென்மேற்கு பருவக் காலத்தில் தமிழகத்தில் வறண்ட நிலையே காணப்படும்.
Reason [R] : Tamil Nadu coast lies in the rain shadow area of the Arabian sea, current and is parallel to the Bay of Bengal current.
காரணம் [R] : தமிழ்நாட்டின் அமைவிடமானது அரபிக்கடல் நீரோட்டத்தின் மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா நீரோட்டத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
-
103.Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- IPCC – International Panel on Climate ChangeIPCC – காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையான குழு✓
- CPC – Climate Prediction CentreCPC – காலநிலை கணிப்பு மையம்
- NOAA – National Oceanic and Atmospheric AdministrationNOAA – தேசிய கடல் மற்றும் வளிமண்டல முகமை
- UNEP – United Nations Environment ProgrammeUNEP – ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
-
104.Assertion [A] : Subash Chandra Bose believed in war and violence for the liberation of India.கூற்று [A] : சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் விடுதலைக்காக போர் மற்றும் வன்முறையில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
Reason [R] : He subscribed to the Gandhian Principles of Non-violence.
காரணம் [R] : அவர் காந்தியக் கொள்கையான அஹிம்சையை ஏற்றுக்கொண்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு✓
- Both [A] and [R] are true ; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமல்ல
-
105.Match the following type :சரியானவற்றைப் பொருத்துக :
(a) Mahakavi Bharathiyar 1. Chennimalai (b) Kappalottiya Thamizhan V.O. Chidambaranar 2. Vathalagundu (c) Subramaniya Siva 3. Ettayapuram (d) Tiruppur Kumaran 4. Ottapidaram (a) மகாகவி பாரதியார் 1. சென்னிமலை (b) கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 2. வத்தலகுண்டு (c) சுப்ரமணிய சிவா 3. எட்டயபுரம் (d) திருப்பூர் குமரன் 4. ஓட்டப்பிடாரம் - (a)-3, (b)-4, (c)-2, (d)-1(a)-3, (b)-4, (c)-2, (d)-1✓
- (a)-3, (b)-1, (c)-2, (d)-4(a)-3, (b)-1, (c)-2, (d)-4
- (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
- (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2
-
106.Which one of the following pairs is correctly matched?சரியான இணையைத் தேர்வு செய்க.
- (i) Lord Cornwallis – Subsidiary Alliance
- (ii) Lord Dalhousie – Permanent Settlement of Bengal
- (iii) Lord Lytton – Doctrine of Lapse
- (iv) Lord Curzon – Partition of Bengal
- (i) கார்ன்வாலிஸ் பிரபு – துணைப்படைத் திட்டம்
- (ii) டல்ஹவுசி பிரபு – வங்காளத்தின் நிரந்தர குடியேற்றம்
- (iii) லிட்டன் பிரபு – வாரிசு இழப்புக் கொள்கை
- (iv) கர்சன் பிரபு – வங்காளப் பிரிவினை
- (i) only(i) மட்டுமே
- (iv) only(iv) மட்டுமே✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டுமே
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டுமே
-
107.Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : The Qadiriya order of Sufism had been popularised in the Punjab by Sheik Kalimullah.
Reason [R] : The Qadiriya order of Sufism strongly supported the doctrine of Wahdat-al-Wajud (Unity of being).
கூற்று [A] : ஷேக் கலிமுல்லாவால் பஞ்சாபில் காதிரியா வரிசை சூஃபிஸம் பிரபலப்படுத்தப்பட்டது.
காரணம் [R] : சூஃபிஸ்வத்தின் காதிரியா பிரிவு 'வஹ்தத்-அல்-வஜூத்' (இருப்பின் ஒருமை) எனும் கோட்பாட்டை வலுவாக ஆதரித்தது.
- [A] is true, but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false and [R] is true[A] தவறானது; [R] சரியானது✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
108.Assertion [A] : India conducted Operation Blue Star in May 2025.கூற்று [A] : மே 2025-ல் இந்தியா நீல நட்சத்திர தாக்குதலை நடத்தியது.
Reason [R] : Pakistan – backed terror attack was launched in Pahalgam, and 26 innocent civilians were killed.
காரணம் [R] : பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத தாக்குதல் பஹல்காமில் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம்
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கமில்லை
-
109.Which of the following is incorrectly paired?தவறான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- 1. Bismilla Khan – Tabla
- 2. T.N. Krishnan – Violinist
- 3. Zahir Hussain – Shenoi
- 4. Ravi Shankar – Sitar
- 1. பிஸ்மில்லா கான் – கைம்முரசு இணை
- 2. T.N. கிருஷ்ணன் – வயலின் கலைஞர்
- 3. ஜாகிர் ஹூசைன் – நாதசுரம் போன்ற குழல்வகை
- 4. ரவி சங்கர் – நரம்பு இசைக்கருவி
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (3)(1) மற்றும் (3)✓
- (2) and (3)(2) மற்றும் (3)
- (2) and (4)(2) மற்றும் (4)
-
110.Identify the country does not have a Federal System of Government.கூட்டாட்சி இயல்புகளை கொண்டிராத அரசாங்கத்தையுடைய நாட்டினை கண்டறிக.
- Russiaரஷ்யா
- Switzerlandசுவிட்சர்லாந்து
- Australiaஆஸ்திரேலியா
- South Africaதென்னாப்பிரிக்கா✓
-
111.Arrange the following items in chronological order according to the parts of the Indian constitution:இந்திய அரசியலமைப்புச் சட்டப் பகுதிகளின் அடிப்படையில் பின்வரும் இனங்களை கால வரிசைப்படுத்துக :
- 1. Elections
- 2. Official languages
- 3. Panchayat Raj
- 4. Union Territories
- 1. தேர்தல்கள்
- 2. அலுவலக மொழிகள்
- 3. பஞ்சாயத்து ராஜ்
- 4. யூனியன் பிரதேசங்கள்
- (4), (3), (1), (2)(4), (3), (1), (2)✓
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
112.Fundamental duties under Indian Constitution apply to which of the following?இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் கீழ் கூறப்படுபவர்களில் யாருக்குப் பொருந்தும்?
- Citizens of India onlyஇந்திய குடிமக்களுக்கு மட்டும்✓
- All personsஅனைத்து நபர்களுக்கும்
- To foreigners alsoவெளிநாட்டினருக்கும்
- To citizens above 21 years only21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு மட்டும்
-
113.Which of the following was added to the Directive Principles list by 42nd Amendment Act of 1976?1976 ஆம் ஆண்டின் 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழிகாட்டும் நெறிமுறைகளின் பட்டியலில் பின்வருவனவற்றுள் எது சேர்க்கப்பட்டது?
- Equal justice and free legal aid (Art. 39 A)சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி (சரத்து 39-அ)✓
- Organisation of village Panchayats (Art. 40)கிராம ஊராட்சிகள் அமைப்புகள் (சரத்து 40)
- Uniform Civil code (Art. 44)குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம் (சரத்து 44)
- Provision for free and compulsory education for children (Art. 45)குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (சரத்து 45)
-
114.Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with respect to any of the matters enumerated in the state list.கூற்று [A] : நெருக்கடி நிலை செயல்பாட்டில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் துறைகள் குறித்தும் சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
Reason [R] : Article 1 of the Indian Constitution describes India as a Union of States.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் சரத்து 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.
- [A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
-
115.Which of the following statements is/are true about Governor's power for assent to Bill?மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் தொடர்புடைய ஆளுநரின் அதிகாரம் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
- (i) The Governor can reserve the Bill for the consideration of the President.
- (ii) He can assent the Bill but he cannot withhold the assent.
- (iii) When a Bill is likely to affect the powers of High Courts of state the Governor must reserve it for the consideration of President.
- (i) ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
- (ii) ஆளுநர் மசோதாவிற்கு இசைவு வழங்கலாம் ஆனால் இசைவிற்காக நிறுத்தி வைக்க இயலாது.
- (iii) ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பாதிக்கச் செய்யும் என ஆளுநர் கருதினால் அம்மசோதாவைக் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.
- (i) only(i) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
-
116.Which is/are the statement correct about the Money Bills?பின்வருவனவற்றுள் 'பண மசோதா' குறித்து எது/எவை சரியானதை தெரிவு செய்க?
- (i) A Money Bill cannot originate the Upper House.
- (ii) The Upper House has no power to amend or reject Money Bill.
- (iii) Constitution has a provision for resolving any deadlock between the two houses regarding Money Bills.
- (i) சட்ட மேலவையில் பண மசோதாவை அறிமுகம் செய்ய இயலாது.
- (ii) சட்ட மேலவை பண மசோதாவை திருத்தமோ/இரத்தோ செய்ய இயலாது.
- (iii) பண மசோதா குறித்து இரு அவைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் போது தீர்வு காண அரசமைப்பில் வழிவகை வாசகம் உள்ளது.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
117.Which of the following is/are true about the residuary powers under the Constitution?அரசமைப்புச் சட்டத்திலுள்ள எச்ச அதிகாரங்கள் குறித்து பின்வருவனவற்றுள் எது/எவை சரி?
- (i) It follows the precedent of Canada.
- (ii) The Constitution vests the residuary power in the Union Legislature.
- (iii) Residuary powers are conferred upon the courts.
- (i) இவை கனடா நாட்டின் அரசமைப்பின்படி உள்ளது.
- (ii) இவை இந்திய அரசியலமைப்பால் ஒன்றிய சட்டச்சபைக்கு வழங்கப்படுகின்றன.
- (iii) இவை இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
118.Find out the correct statements on the 104th Constitutional Amendment Act, 2019.2019 ஆம் ஆண்டு 104வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
- (i) This Amendment extended the reservation of seats for the SC's and ST's in the Lok Sabha and State Legislative Assemblies for a further period of ten years i.e. upto 2030.
- (ii) This Amendment eliminates the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and State Legislative Assemblies by nomination.
- (iii) This Amendment extended the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and state Legislative assemblies by nomination for a further period of 10 years i.e. 2030.
- (i) இந்தத் திருத்தமானது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை இடங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு (தனி) தொகுதிகளை மேலும் பத்தாண்டுகளுக்கு அதாவது 2030 வரை நீட்டித்தது.
- (ii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினர்களுக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவையில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்தது.
- (iii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்திய வகுப்பினருக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவை இடங்களில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டு அதாவது 2030ம் ஆண்டு வரை நீட்டித்தது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
119.Consider the following statements, choose the correct answer:கீழ்காணும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
- (i) The Right to Information Act enacted in the year 2005.
- (ii) It empowers the public officials.
- (iii) RTI Act makes the Democracy works for people in Real time.
- (iv) The Act also includes information relating to any private body which can be accessed by the General Public.
- (i) தகவல் அறியும் உரிமை சட்டமானது 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
- (ii) இது அரசாங்க ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
- (iii) தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் உண்மையான பொருளில், ஜனநாயகத்தை மக்களுக்காக வேலை செய்ய வைக்கிறது.
- (iv) இச்சட்டமானது எந்த ஒரு தனியார் அமைப்புகளிடம் குடிமக்கள் தகவல்களை பெறுவதையும் சட்டமாக கொண்டிருக்கிறது.
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
-
120.Assertion [A], Reason [R] Question Type :கருத்து [A] மற்றும் காரணம் [R] வினா வகை :
கருத்து [A] : தேசிய அளவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதியைத் தெரிந்து கொள்வது தவறானது இல்லை – உச்சநீதிமன்றம்.
காரணம் [R] : சாதியைத் தெரிந்து கொள்வதானது, எவ்வளவு மக்கள் நலத்திட்ட தேவைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதோடு, அது ஒரு பொதுக்கொள்கையுமாகும்.Assertion [A] : “Ascertaining Caste as part of the ongoing nation wide census exercise was nothing wrong” – Supreme Court.
Reason [R] : Ascertaining caste to know how many people are in need of welfare and it is a matter of public policy.
- [A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்.✓
- [A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமல்ல.
- [A] is true; [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
- [R] is true; [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
-
121.Planning in India focused at realising a high rate of growth of output in the long term. A basic assumption was that shortage of capital goods in relation to employable persons constituted a fundamental constraint on growth in the economy. Therefore the planning process made no focus on economic growth was viewed as essential for improving the employment situation.
Which are the following is best implied in the given passage?இந்தியாவில் திட்டமிடல் என்பது நீண்டகால உற்பத்தியில் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டது. வேலைவாய்ப்பு பெறக்கூடிய நபர்களுடன் ஒப்பிடும்போது, மூலதனப் பொருட்களின் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைத் தடையாக அமைகிறது என்பது ஓர் அனுமானம். எனவே, திட்டமிடல் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை, அது வேலைவாய்ப்பு நிலையை அதிகரிப்பதற்காகக் கவனம் செலுத்துகிறது என்று பார்க்கப்படுகிறது.
கொடுக்கப்பட்ட பத்தியின் மூலம் பின்வருவனவற்றுள் எது சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?- Independent employment strategy for economic growth.பொருளாதார வளர்ச்சிக்கான சுதந்திரமான வேலைவாய்ப்பு உத்தி.
- Growth of employment and its constraint.வேலையின் வளர்ச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு.
- Approach to employment in economic planning.பொருளாதார திட்டமிடலில் வேலை வாய்ப்புக்கான அணுகுமுறை.✓
- Economic Development and employment.பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு.
-
122.Which of the following has been suggested as a substitute for the Fiscal Responsibility and Budget Management (FRBM) Act by the Fourteenth Finance Commission?பதினான்காவது (14) நிதி ஆணையத்தால் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்திற்கு மாற்றாகப் பின்வருவனவற்றில் எது பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
- Fiscal consolidation fundநிதி ஒருங்கிணைப்பு நிதி
- Debt ceiling and fiscal responsibility legislationகடன் உச்சவரம்பு மற்றும் நிதிப் பொறுப்புச் சட்டம்✓
- Revenue and Debt managementவருவாய் மற்றும் கடன் மேலாண்மை முகமை
- Pool Account of the Centre and State of Indiaமத்திய மற்றும் மாநில இந்தியப் பொதுக்கணக்கு
-
123.Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Atmanirbhar Bharat Rojgar Yojana (ABRY) 1. 8th April, 2015 (b) Kousal Vikas Yojana (PMKVY) 2. 20th June, 2020 (c) Pradhan Mantri Mudra Yojana (PMMY) 3. 1st October, 2020 (d) Pradhan Mantri Garib Kalyan Rojgar Abhiyaan (PMGKRA) 4. 15th July, 2015 (a) ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கார் யோஜனா 1. 8 ஏப்ரல், 2015 (b) கௌசல் விகாஸ் யோஜனா 2. 20 ஜூன், 2020 (c) பிரதான் மந்திரி முத்ரா யோஜனா 3. 1 அக்டோபர், 2020 (d) பிரதான் மந்திரி கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் 4. 15 ஜூலை, 2015 - (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2✓
- (a)-1, (b)-2, (c)-3, (d)-4(a)-1, (b)-2, (c)-3, (d)-4
- (a)-2, (b)-1, (c)-4, (d)-3(a)-2, (b)-1, (c)-4, (d)-3
- (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3
-
124.The first National Health Policy formulated by the Government of India in the yearஇந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதல் தேசிய சுகாதாரக் கொள்கை எந்த ஆண்டில் வகுக்கப்பட்டது?
- 19531953
- 20232023
- 19931993
- 19831983✓
-
125.Given below are two statements
Statement I : One of the major characteristics of good governance is that it is autocratic.
Statement II : RTI (Right to Information) is one of the tool of good Governance.
In the light of the above statement choose the correct answer from the option given below.கீழே இரண்டு கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கூற்று I : முதல் கூற்று நல்லாட்சியின் முக்கிய குணாதிசயங்களை அது எதேச்சதிகாரம் கொண்டது.
கூற்று II : தகவல் அறியும் உரிமை என்பது (RTI) நல்லாட்சிக்கான ஒரு கருவியாகும்.
மேலே உள்ள கூற்றின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இவற்றில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.- Both Statement I and II are Trueஇரண்டு கூற்றும் சரியானது I மற்றும் II
- Both Statement I and II are Falseஇரண்டு கூற்றும் தவறானது I மற்றும் II
- Statement I is true but Statement II is Falseகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது
- Statement I is false but Statement II is Trueகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →