Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
51.Choose the correct statement from the following.இவற்றில் சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
- (i) The flavour in yogurt is due to acetaldehyde.
- (ii) Yogurt is produced by bacterial fermentation of milk.
- (iii) Penicillin is produced by bacteria.
- (iv) Spirulina is a non edible unicellular microorganism.
- (i) யோகர்டின் சுவைக்கு அதில் உள்ள அசிட்டால்டிஹைட் காரணமாகும்.
- (ii) பாலில் இருந்து யோகர்ட் பாக்டீரியா நொதித்தல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
- (iii) பாக்டீரியா பென்சிலின் உற்பத்தி செய்கின்றது.
- (iv) ஸ்பைருலினா ஒற்றை செல் நுண்ணுயிரி உண்பதற்கு ஏற்றவை அல்ல.
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
- (i) and (iv) are correct(i) மற்றும் (iv) சரியானவை
-
52.The Indian Institute of Technology – Madras has developed a technology called AMRIT. This technology is integrated into the "Jal Jeevan Mission" to provide a highly effective solution forஇந்திய தொழில்நுட்பக் கழகம் – சென்னை, 'AMRIT' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கீழ்கண்ட எந்த தீர்வை வழங்குவதற்காக 'ஜல் ஜீவன் இயக்கத்தில்' ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது?
- the desalination of sea waterகடல்நீரை நன்னீராக்குதல்
- the removal of arsenic and heavy metals from water using nano technologyநானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் கன உலோகங்களை நீக்குதல்✓
- the water softening processநீரின் கடினத்தன்மையைக் குறைக்கும் செயல்முறை
- increasing the ground-water levelநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல்
-
53.One of the following is true about the Reservoirs and Source river.கீழே குறிப்பிடப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் தொடர்புடைய நதிகள் குறித்த சரியான கூற்றுக்கள் எவை?
- (i) Tehri on the River Bhagirathi.
- (ii) Rajghat on the Betwa.
- (iii) Dudhganga on the Godavari.
- (i) டெக்ரி நீர்த்தேக்கம் – பாகீரதி நதி.
- (ii) ராஜ்காட் நீர்த்தேக்கம் – பெட்வா நதி.
- (iii) தூத்கங்கா நீர்த்தேக்கம் – கோதவரியாறு.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
-
54.Which of the following infrastructure components are included in the Zojila Tunnel Project?பின்வருவனவற்றுள் சோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தில் அடங்கியுள்ள உள்கட்டமைப்புக் கூறுகள் எவை?
- 1. Snow galleries
- 2. Avalanche protection structures
- 3. Bi-directional horse shoe passage
- 4. Inland waterways
- 1. பனி வழிப்பாதைகள்
- 2. பனிச்சரிவு பாதுகாப்புக் கட்டமைப்புகள்
- 3. இருவழி குதிரை லாட வடிவப்பாதை
- 4. உள்நாட்டு நீர்வழிகள்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்
-
55.Match the following :பொருத்துக :
(a) Veerashaivam 1. Ramanujar (b) Visistadvaitham 2. Kumarila Bhatta (c) Thuvaitham 3. Basavar (d) Advaitam 4. Mathuvar (a) வீரசைவம் 1. ராமானுஜர் (b) விசிஷ்டாத்வைதம் 2. குமரிலபட்டர் (c) துவைதம் 3. பசவர் (d) அத்வைதம் 4. மத்துவர் - (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2✓
- (a)-3, (b)-2, (c)-1, (d)-4(a)-3, (b)-2, (c)-1, (d)-4
- (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
- (a)-4, (b)-1, (c)-3, (d)-2(a)-4, (b)-1, (c)-3, (d)-2
-
56.Choose the right matches among the following.கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்வு செய்யவும்.
- 1. Champaran Satyagraha – Financial Troubles
- 2. Ahmedabad Satyagraha – Mill Strike
- 3. Kheda Satyagraha – Peasants
- 4. Bardoli Satyagraha – Indigo planters
- 1. சம்பாரன் சத்தியாகிரகம் – நிதிச் சிக்கல்கள்
- 2. அகமதாபாத் சத்தியாகிரகம் – ஆலை வேலை நிறுத்தம்
- 3. கேதா சத்தியாகிரகம் – விவசாயிகள்
- 4. பர்டோலி சத்தியாகிரகம் – இண்டிகோ தோட்டக்காரர்கள்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
57.Reason and Assertion Type.கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Dr. Ambedkar observed that the rise of Buddhism was as significant as the French revolution.
Reason [R] : Dr. Ambedkar delivered a speech at Colombo, Srilanka on "The Rise and fall of Buddhism in India".
கூற்று [A] : பௌத்த மதத்தின் எழுச்சி பிரெஞ்சுப் புரட்சியைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.
காரணம் [R] : டாக்டர் அம்பேத்கர் இலங்கையின் கொழும்பில் "இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
- [A] is true; but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
58.Why was Subhas Chandra Bose called as Netaji?சுபாஷ் சந்திர போஸ் 'நேதாஜி' என்று அழைக்கப்படுவது ஏன்?
- (i) Encourage Indians for Education.
- (ii) Strong Leadership and dedication to the cause of India's Freedom.
- (iii) To follow the principle of Ahimsa.
- (i) இந்தியர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவது.
- (ii) இந்திய சுதந்திரத்துக்கான வலுவான தலைமைத்துவம்.
- (iii) அகிம்சை கொள்கையைப் பின்பற்றுவது.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
-
59.Which of the following correctly correspond to the reasons for the decline of the Mughal Empire?பின்வருவனவற்றுள் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
- (i) Invasion of Nadir Shah and Ahmed Shah Abdali.
- (ii) Weak rulers after Aurangazeb.
- (iii) Changed character of Later Mughal Nobility.
- (iv) Frequent famines.
- (i) நாதிர் ஷா மற்றும் அகமது ஷா அப்தாலியின் படையெடுப்புகள்.
- (ii) அவுரங்கசீப்பிற்கு பிறகு பலவீனமான ஆட்சியாளர்கள்.
- (iii) முகலாய அரசவை மேட்டு குடியினரின் மனநிலை மாற்றம்.
- (iv) அடிக்கடி ஏற்பட்ட பஞ்சங்கள்.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
60.Which of the following statement(s) is / are true about the Madurai Bench of the Madras High Court?கீழ்க்கண்டவற்றுள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- (i) It was started functioning on 24th June 2004.
- (ii) It was inaugurated by the Chief Justice of India, R.C. Vijaya Kamalesh Tahil Ramani.
- (iii) The Madurai Bench Currently (2026) covers 14 Judicial districts.
- (i) 24 ஜூன் 2004-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
- (ii) இந்தியாவின் தலைமை நீதிபதி R.C. விஜயா கமலேஷ் தஹில் ரமணி ஆல் தொடங்கப்பட்டது.
- (iii) உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது (2026) பதினான்கு நீதித்துறை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (iii) and (ii) only(iii) மற்றும் (ii) மட்டும்
-
61.Match the following :கீழ்க்கண்டவற்றைச் சரியாக பொருத்துக :
(a) Union of India Vs Naveen Jindal 1. Reservation in promotion for SC/ST's (b) Prakash Singh Vs Union of India 2. Women entry into Sabarimala Temple (c) M. Nagaraj Vs Union of India 3. Right to fly the National flag (d) Indian Young Lawyers Assn. Vs State of Kerala 4. Police Reforms (a) இந்திய யூனியன் Vs நவீன் ஜிந்தால் 1. SC/ST மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது (b) பிரகாஷ் சிங் Vs இந்திய ஒன்றியம் 2. சபரிமலை கோவிலுள் பெண்களை அனுமதிப்பது (c) M. நாகராஜ் Vs இந்திய ஒன்றியம் 3. தேசியக் கொடியை பறக்கவிடும் உரிமை (d) இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் Vs கேரள மாநிலம் 4. காவல்துறைச் சீர்திருத்தம் - (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2✓
- (a)-2, (b)-4, (c)-1, (d)-3(a)-2, (b)-4, (c)-1, (d)-3
- (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3
- (a)-1, (b)-4, (c)-3, (d)-2(a)-1, (b)-4, (c)-3, (d)-2
-
62.Which of the following features are true about a federal system?கூட்டாட்சி அமைப்பு குறித்த கீழ்க்காணும் எக்கூற்றுகள் சரியானவை?
- (i) Distribution of Powers
- (ii) Separation of Powers
- (iii) Dual Government
- (iv) A strong Union Government
- (i) அதிகாரங்களின் பகிர்வு
- (ii) அதிகாரப் பிரிவினை
- (iii) இரட்டை அரசாங்க முறை
- (iv) மிக வலிமையான மத்திய அரசு
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
63.Match correctly the Articles with the subject matter :அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை அவற்றின் பொருளமைப்புகளோடு பொருத்துக :
(a) Article 40 1. Living wage for workers (b) Article 42 2. Just and humane conditions of work (c) Article 43 3. Uniform Civil Code (d) Article 44 4. Organisation of village panchayats (a) பிரிவு 40 1. தொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஊதியம் (b) பிரிவு 42 2. நியாயமான மனிதத்தன்மையுடைய பணிச்சூழல் (c) பிரிவு 43 3. பொது சிவில் சட்டம் (d) பிரிவு 44 4. கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்தல் - (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2
- (a)-2, (b)-4, (c)-1, (d)-3(a)-2, (b)-4, (c)-1, (d)-3
- (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3✓
- (a)-1, (b)-4, (c)-3, (d)-2(a)-1, (b)-4, (c)-3, (d)-2
-
64.Which of the following statements are not true about Speaker of Lok Sabha?மக்களவைத் தலைவரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மையல்ல?
- 1. The decision of the Speaker as to whether a Bill is Money Bill is final.
- 2. The Speaker of Lok Sabha shall be submit his resignation letter to the President.
- 3. A Non-Member of Lok Sabha shall be appointed as Speaker of Lok Sabha.
- 1. ஒரு மசோதா, பண மசோதாவா என்பது குறித்து மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது.
- 2. மக்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார்.
- 3. மக்களவை உறுப்பினரல்லாத ஒருவர் மக்களவைத் தலைவராக நியமிக்கப்படுவார்.
- (1) only(1) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்✓
-
65.Consider the following statements and choose the correct option from below :கீழ்க்காணப்படும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையினை தேர்வு செய்க.
Assertion [A] : Every state in India shall consist of Bicameral Legislature namely Legislative Assembly and Legislative Council.
Reason [R] : The members of Legislative Council are directly elected by the people.
கூற்று [A] : இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், சட்டபேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.
காரணம் [R] : சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு✓
- [A] true, but [R] falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
- [A] false, but [R] trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
-
66.Which of the following is/are not the recommendations of the committee on Panchayat Raj Finances, 1962?கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் நிதிக்குழு, 1962-ன் பரிந்துரை அல்லாதது எது/எவை?
- (i) The District Collector was to be a member of Zila Parishad.
- (ii) Financial Resources to Panchayat Samitis.
- (iii) Loans to Panchayat Raj bodies.
- (i) மாவட்ட ஆட்சியர் ஜில்லா பரிஷத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- (ii) பஞ்சாயத்து சமிதிக்கான நிதி ஆதாரங்கள்.
- (iii) பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான கடன்கள்.
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
67.Arrange the following "Human Rights" events in chronological order.பின்வரும் "மனித உரிமைகள்" நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Convention on the Elimination of all the forms of discrimination against women.
- 2. Universal Declaration of Human Rights (UDHR).
- 3. International Committee of Red Cross.
- 4. Magna Carta.
- 1. பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் களைவதற்கான உடன்படிக்கை.
- 2. மனித உரிமைகள் குறித்த அனைத்துலக பிரகடனம் (UDHR).
- 3. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
- 4. மேக்னா கார்டா (பெரிய சாசனம்).
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
68.Which of the following are correctly paired?கீழ்க்கண்ட இணைகளில் எவை சரியாக பொருந்தியுள்ளது?
- 1. Kesavananda Bharati Case – 1973
- 2. Indira Gandhi Vs. Raj Narain Case – 1970
- 3. Minerva Mills Case – 1980
- 4. Bachan Singh Case – 1984
- 1. கேசவானந்த பாரதி வழக்கு – 1973
- 2. இந்திராகாந்தி Vs. ராஜ் நாராயண் வழக்கு – 1970
- 3. மினர்வா மில்ஸ் வழக்கு – 1980
- 4. பசன் சிங் வழக்கு – 1984
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
-
69.Arrange the following conventions in chronological order.பின்வரும் உடன்படிக்கைகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Convention on the Elimination of All Forms of Discrimination against women.
- 2. Convention on the prevention and punishment of the crime of Genocide.
- 3. Convention on the Elimination of All Forms of Racial Discrimination.
- 4. Convention on the Rights of the child.
- 1. பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை.
- 2. இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான உடன்படிக்கை.
- 3. அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை.
- 4. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை.
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
70.Which of the following statements are true about Economic Infrastructure Investment?பொருளாதாரக் கட்டமைப்பு முதலீடு குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) It is generally aimed to realize relatively more direct benefits than in social infrastructure.
- (ii) It is generally smaller in size.
- (iii) It is generally invites from public sector as well as private sector.
- (i) இது பொதுவாக, சமூக உள்கட்டமைப்பை விட ஒப்பீட்டளவில் அதிக நேரடிப் பலன்களை அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- (ii) இது பொதுவாக அளவில் சிறியது.
- (iii) இது பொதுவாக, பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரிடமிருந்து கோரப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
-
71."An Indian farmer is born in debt, lives in debt, dies in debt and bequeaths debt" said by ________.'இந்திய விவசாயி கடனில் பிறந்து, வாழ்ந்து கடனில் இறந்து அந்த கடனையும் விட்டுச் செல்ல வேண்டியுள்ளது' – இது யாருடைய கூற்று?
- Adam Smithஆடம் ஸ்மித்
- Gandhiகாந்தி
- Amartya Senஅமர்தியா சென்
- Sir Malcolm Darlingசர் மால்கம் டார்லிங்✓
-
72.Assertion [A] : India adopted a mixed economic system after independence in order to combine economic growth with social justice and welfare objectives.கூற்று [A] : பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி, நலவாழ்வு ஆகிய நோக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டது.
Reason [R] : The mixed economy framework permits the co-existence of public and private sectors while allowing government intervention where necessary.
காரணம் [R] : கலப்புப் பொருளாதாரக் கட்டமைப்பானது பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட அனுமதிப்பதோடு தேவைப்படும் பொழுது அரசின் தலையீட்டிற்கும் வழிவகுக்கிறது.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரியானது ஆனால் காரணம் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறானது ஆனால் காரணம் [R] சரியானது
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
73.Match the criteria for devolution weight % in 15th Finance Commission.15வது நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்விற்கான சதவிகிதப் பகிர்வினைப் பொருத்தவும் :
(a) Tax efforts 1. 10.0% (b) Population (2011) 2. 2.5% (c) Forest and Ecology 3. 15% (d) Income Distance 4. 45% (a) வரி முயற்சி 1. 10.0% (b) மக்கட்தொகை (2011) 2. 2.5% (c) காடு மற்றும் சூழலியல் 3. 15% (d) வருமான அடிப்படை 4. 45% - (a)-2, (b)-3, (c)-1, (d)-4(a)-2, (b)-3, (c)-1, (d)-4✓
- (a)-3, (b)-2, (c)-4, (d)-1(a)-3, (b)-2, (c)-4, (d)-1
- (a)-1, (b)-2, (c)-3, (d)-4(a)-1, (b)-2, (c)-3, (d)-4
- (a)-4, (b)-2, (c)-3, (d)-1(a)-4, (b)-2, (c)-3, (d)-1
-
74.Which of the following are addressed in National Rural Health Mission?பின்வருவனவற்றில் எவை தேசிய கிராமப்புற சுகாதாரப் பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன?
- 1. Reduce Infant Mortality Rate
- 2. Ensure Population Stability
- 3. Reduce Total Fertility Rate
- 4. Control Communicable and Non-Communicable Diseases
- 1. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல்
- 2. மக்கள்தொகை நிலைத்தன்மையை உறுதி செய்தல்
- 3. மொத்த கருவுறுதல் விகிதத்தைக் குறைத்தல்
- 4. தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2), (3) and (4) only(1), (2), (3) மற்றும் (4) மட்டும்✓
-
75.Arrange chronological order of dam construction in Tamil Naduதமிழ்நாட்டில் கட்டப்பட்ட அணைகளை ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- 1. Mullai Periyar dam
- 2. Mettur dam
- 3. Vaigai dam
- 4. Bhavani Sagar dam
- 1. முல்லைப் பெரியார் அணை
- 2. மேட்டூர் அணை
- 3. வைகை அணை
- 4. பவானி சாகர் அணை
- (1), (4), (2), (3)(1), (4), (2), (3)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)✓
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →