Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 4 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 4 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
76.Mannuyir Kaathu Mannuyir Kaapoom Scheme major aim is :மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம் :
- Increasing the yield per hectareஒரு ஹெக்டேருக்கு மகசூலை அதிகரித்தல்
- Preserving the soil fertilityமண் வளத்தைப் பாதுகாத்தல்✓
- Improving irrigation facilitiesநீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல்
- Introducing modern farming methodsநவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்தல்
-
77.Employment projections for the Eleventh and Twelfth plans wereபதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது திட்டங்களுக்கான வேலைவாய்ப்புக் கணிப்புகள்
- Labour force participation rate is increased because of female participation rates increasedபெண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
- Labour force participation rate is increased because of male participation rates increasedஆண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது✓
- Labour force participation rate is increased because of demand exist in Indiaஇந்தியாவில் தேவை இருப்பதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
- Labour force participation rate is increased because of price increased in Indiaஇந்தியாவில் விலை அதிகரித்ததால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
-
78.Match the following :பொருத்துக :
(a) The R.B.I. was nationalised 1. 1973 (b) Foreign Exchange Management Act (FEMA) 2. 1935 (c) Foreign Exchange Regulation Act (FERA) 3. 1949 (d) The R.B.I was established in the year 4. 1999 (a) இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது 1. 1973 (b) அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 2. 1935 (c) அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 3. 1949 (d) இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்ட ஆண்டு 4. 1999 - 2 3 4 12 3 4 1
- 4 3 2 14 3 2 1
- 3 4 1 23 4 1 2✓
- 2 4 3 12 4 3 1
-
79.Which of the following are the objectives of the start up Tamil Nadu initiative?பின்வருவனவற்றில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு முன் முயற்சியின் நோக்கங்கள் எவை?
- (i) To promote innovation and Entrepreneurship by providing support and infrastructure.
- (ii) To simplify regulations and processes for startups to enhance ease of doing business.
- (iii) To increase Government control over the startup ecosystem in Tamil Nadu.
- (i) ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் புதுமை புகுத்துவோர் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்.
- (ii) தொழில் செய்வதை எளிதாக்குவதற்காக ஸ்டார்ட்அப்களுக்கான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை எளிதாக்குதல்.
- (iii) தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பின் மீது அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்தல்.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
80.Which among the following ministry is entrusted responsible person to the requirements of neglected and marginalised people?புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் எந்த அமைச்சகத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது?
- Ministry of Tribal Affairsபழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம்
- Ministry of Social Justice and Empowermentசமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்✓
- Ministry of Women and Child Developmentபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- Ministry of Minority Affairsசிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம்
-
81.Assertion [A] : Social reform movements encouraged women's education.கூற்று [A] : சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பெண் கல்வியை ஊக்குவித்தன.
Reason [R] : Educated women were considered essential for social progress.
காரணம் [R] : கல்வியறிவு பெற்ற பெண்கள் சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என கருதப்பட்டனர்.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் இல்லை
-
82.Assertion [A] : What is virtue? It is not to kill, for killing causes every ill.கூற்று [A] : அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம் [R] : அறங்கள் எல்லாவற்றும் தனிச் சிறப்புடையது கொல்லாமையாகும். அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும்.Reason [R] : All virtues the most excellent is non-killing. Next to that, the best is not lying.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் விளக்கம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி, மற்றும் கூற்று [A]–க்கு [R] சரியான விளக்கம்✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு விளக்கம் [R] சரி
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A] is correctகூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி; ஆனால் கூற்று [A]–க்கு சரியான விளக்கம் [R] இல்லை என்பது சரி
-
83.How can one feels or know about love according to Valluvar?அன்பை அறியச் செய்வது என வள்ளுவர் குறிப்பிடுவது
- Moneyபணம்
- Expensive Materialவிலையுயர்ந்த பொருள்
- Tearsகண்ணீர்✓
- Good Foodநல்ல உணவு
-
84.Who is the Disciple(s) of Pattinathar?பட்டினத்தாரின் சீடர் மற்றும் சீடர்களாய் அமைந்தவர் ______.
- 1. Idaikattu Siddhar
- 2. Pathirakiriyar
- 3. Pambatti Siddhar
- 4. Agappei Siddhar
- 1. இடைக்காட்டுச் சித்தர்
- 2. பத்திரகிரியார்
- 3. பாம்பாட்டிச் சித்தர்
- 4. அகப்பேய் சித்தர்
- Option (2) only correct(2) மட்டும் சரி✓
- Option (1) and (3) only correct(1) மற்றும் (3) சரி
- Option (2) and (4) only correct(2) மற்றும் (4) சரி
- Option (1) and (4) only correct(1) மற்றும் (4) சரி
-
85.The Military General, who suppressed the Vellore Mutiny was ______.வேலூர் கலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத் தளபதி ______ ஆவார்.
- George Carmichael Smythஜார்ஜ் கார்மிகெல் ஸ்மித்
- Colonel Robert Rollo Gillespieகர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி✓
- John Nicholsonஜான் நிக்கல்சன்
- William Hodsonவில்லியம் ஹாட்சன்
-
86.What are the causes for the defeat of Justice Party in the Madras Legislative Assembly Elections – 1937?1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?
- (i) The Justice Party could not match the new methods employed by the Congress.
- (ii) The hostility of the press towards Justice Party.
- (iii) The emotional appeal for Poorna Swaraj by the Congress.
- (iv) The entry of people's party of Maharaja of Pithapuram as a third force.
- (i) காங்கிரஸ் பின்பற்றிய புதிய முறைகளை நீதிக்கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை.
- (ii) நீதிக்கட்சியின் மீதான பத்திரிகைகளின் விரோதப்போக்கு.
- (iii) பூரண சுவராஜ்யத்திற்கான காங்கிரசின் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோள்.
- (iv) பிதாபுரம் மகாராஜாவின் 'மக்கள் கட்சி' மூன்றாவது சக்தியாக நுழைந்தது.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
87.Match the following leaders with the positions they held in Provincial Executive Committee of Tamil Nadu Harijan Sevak Sangh :பின்வரும் தலைவர்களோடு அவர்கள் தமிழகத்தில் ஹரிஜன சேவக் சங்கத்தின் செயற்குழுவில் வகித்த பதவியோடு பொருத்துக :
(a) C. Rajagopalachari 1. President (b) G. Ramachandran 2. Member (c) T. S. S. Rajan 3. Secretary (a) சி. இராஜகோபாலாச்சாரி 1. தலைவர் (b) ஜி. இராமச்சந்திரன் 2. உறுப்பினர் (c) டி.எஸ்.எஸ். இராஜன் 3. செயலாளர் - 1 2 31 2 3
- 2 3 12 3 1✓
- 3 1 23 1 2
- 3 2 13 2 1
-
88.Match correctly the Newspaper with their Year of Foundation :செய்தித்தாளை அவற்றின் தொடங்கப்பட்ட ஆண்டோடு சரியாகப் பொருத்தவும் :
(a) The Hindu 1. 1785 (b) Swadesamitran 2. 1925 (c) The Madras Courier 3. 1878 (d) Kudiyarasu 4. 1882 (a) தி இந்து 1. 1785 (b) சுதேசமித்ரன் 2. 1925 (c) தி மெட்ராஸ் கொரியர் 3. 1878 (d) குடியரசு 4. 1882 - 3 4 1 23 4 1 2✓
- 2 3 1 42 3 1 4
- 1 3 2 41 3 2 4
- 1 4 3 21 4 3 2
-
89.Name the author of Usliaparinayam, a Telugu work which mention about the grant of Madrasapatnam to English in 1639 A.D.கி.பி. 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு மதராஸ்பட்டணம் வழங்கப்பட்டதைப் பற்றி குறிப்பிட்டுள்ள தெலுங்கு படைப்பான உஸ்லியபரிணயம் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
- Raja Ramராஜா ராம்
- Anka Bhubalaஅங்கா பூபாலா✓
- Ravi Ramரவி ராம்
- Tulasiதுளசி
-
90.Choose the correct answers from the given options : Commentators on the Thirukkuralகொடுக்கப்பட்ட விடைகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
திருக்குறள் உரையாசிரியர்கள்- 1. Pariperumal
- 2. Perumal Murugan
- 3. Abdul Raguman
- 4. Parithiyar
- 1. பரிப்பெருமாள்
- 2. பெருமாள் முருகன்
- 3. அப்துல் ரகுமான்
- 4. பரிதியார்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
91.Assertion [A] : Cheran started to fan the Mosi Keeranar with the fan made of yac's hair.கூற்று மற்றும் காரணம் வகை :
Reason [R] : Because the best pleasure is the purest pleasure of being with classical Thamizh.
கூற்று [A] : சேரன் மோசிகீரனாருக்குக் கவரி வீசினான்.
காரணம் [R] : செந்தமிழ் இன்பமே சிறந்த இன்பம் என்பதனால்.
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
-
92.A and B together can complete a piece of work in 15 days and B alone can do it in 20 days. In how many days can A alone complete the work?A மற்றும் B இருவரும் இணைந்து ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர். B மட்டும் தனியாக அந்த வேலையை 20 நாட்களில் முடிப்பார் எனில், A மட்டும் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- 7070
- 8080
- 4040
- 6060✓
-
93.10 persons begin to work together on a job but after some days 4 persons leave. As a result, the job which could have been completed in 40 days is completed in 50 days. How many days after the commencement of the work did the 4 persons leave?10 நபர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்யத் தொடங்குகின்றனர். ஆனால் குறிப்பிட்ட தினங்களுக்குப் பின் 4 நபர்கள் வெளியேறிவிடுகின்றனர். அதன் விளைவாக 40 நாட்களில் முடிவடைய வேண்டிய வேலையானது 50 நாட்களில் முடிவடைகிறது, எனில் வேலை தொடங்கிய பின் எத்தனை நாட்கள் கழித்து நான்கு நபர்கள் வெளியேறினார்கள்?
- 20 days20 நாட்கள்
- 30 days30 நாட்கள்
- 35 days35 நாட்கள்
- 25 days25 நாட்கள்✓
-
94.A sum of Rs. 1,550 was lent partly at 5% and the remaining amount at 8% simple interest. The total interest received after 3 years was Rs. 300. The ratio of money lent at 5% to that lent at 8% is ______.ரூ. 1,550 ஆனது 5% தனிவட்டிக்கு ஒரு குறிப்பிட்ட பாகமும், 8% தனிவட்டிக்கு மீதத் தொகையும் கடனாகக் கொடுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்படும் மொத்த வட்டி ரூ. 300 எனில், 5% தனிவட்டிக்குக் கடனாகக் கொடுக்கப்படும் தொகை மற்றும் 8% தனிவட்டிக்குக் கடனாகக் கொடுக்கப்படும் தொகையின் விகிதம் ______ ஆகும்.
- 5 : 85 : 8
- 8 : 58 : 5
- 31 : 631 : 6
- 16 : 1516 : 15✓
-
95.If a% of "a" is "a". Then what is b% of "a"?"a" ன் a% ஆனது "a" எனில் "a" ன் b% ஆனது என்ன?
- aa
- bb✓
- cc
- None of theseஇவற்றில் எதுவும் இல்லை
-
96.If x + y + z = 0 then x^3 + y^3 + z^3 + 3xyz is equal to ______.x + y + z = 0 எனில் x³ + y³ + z³ + 3xyz என்பவற்றிற்குச் சமமானவை எவை?
- 00
- 6xyz6xyz✓
- 12xyz12xyz
- xyzxyz
-
97.A train Travels from Chennai to Delhi for 53 hours. If the train starts on Monday night 8.30 pm, find the day and time when the train would reach Delhi.ஒரு இரயில் சென்னையிலிருந்து டெல்லிக்கு 53 மணி நேரம் பயணிக்கிறது. அந்த இரயில் திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டால் அது சென்றடையும் நேரமும் நாளும் என்ன?
- Wednesday 1.30 amபுதன்கிழமை அதிகாலை 1.30
- Wednesday 1.30 pmபுதன்கிழமை பிற்பகல் 1.30
- Thursday 1.30 amவியாழக்கிழமை அதிகாலை 1.30✓
- Thursday 1.30 pmவியாழக்கிழமை பிற்பகல் 1.30
-
98.A store reduces the price of 1 product by 20%. How many % do you need to raise to the % to get the original price.ஒரு கடை, ஒரு பொருளின் விலையை 20% குறைத்தது. உண்மை விலையைக் கண்டறிய எத்தனை சதவீதம் உயர்த்த தேவையிருக்கும் (%) சதவிகிதத்தைக் காண்க.
- 30%30%
- 27%27%
- 25%25%✓
- 20%20%
-
99.Choose the right matches in the following pairs :பின்வரும் இணைகளில் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
- 1. Commensalism - One population benefits but second one is neither benefited nor affected.
- 2. Mutualism - Two populations living together but neither affects nor benefits.
- 3. Amensalism - One population prey on another at all times.
- 4. Competition - Populations are not affecting directly but fight for resources.
- 1. கம்மென்சலிசம் (Commensalism) – ஒரு இனத்தொகுப்பு நன்மையடைகிறது. ஆனால் மற்றவைக்கு நன்மை தீமை இரண்டுமில்லை.
- 2. மியுச்சுயாலிசம் (Mutualism) – இரண்டு இனத்தொகுப்புகள் ஒன்றாக வாழ்பவை. ஆனால் நன்மையோ, தீமையோ இல்லை.
- 3. அமென்சலிசம் (Amensalism) – எல்லா நேரங்களிலும் ஒரு இனத்தொகுப்பு மற்றொன்றை வேட்டையாடுகிறது.
- 4. போட்டி (Competition) – இனத்தொகுப்புகள் நேரடியாகப் பாதிக்கப்படாமல் வளங்களுக்காகப் போட்டியிடுகின்றன.
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானவை✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
100.Assertion and Reason Type.வலியுறுத்தல் [A] மற்றும் காரணம் [R] வகை.
வலியுறுத்தல் [A] : மெண்டலின் சார்பின்றி ஒதுங்கும் விதியின்படி ஒவ்வொரு பண்புகள் மரபணுக்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மற்ற பண்புகளின் மரபணுக்களில் இருந்து தனித்து ஒதுங்கும் கேமீட்டுகளை உள்ளிடுகின்றன.
காரணம் [R] : நெருக்கமாக அமைந்துள்ள மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்கும்.Assertion [A] : Mendel's law of independent assortment the genes for each character separate and enter the gametes independently of the genes of the others characters.
Reason [R] : Closely located genes assort independently.
- [A] is correct but [R] is not correct[A] சரி ஆனால் [R] தவறு✓
- [A] is not correct but [R] is correct[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are correct and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are correct but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →