Group 1 · 2026குரூப் 1 · 2026
TNPSC Group 1 2026 — question paper with answers — page 6 of 8TNPSC குரூப் 1 2026 — வினாத்தாளும் விடைகளும் — page 6 of 8
All 199 questions from the TNPSC Group 1 2026 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2026 வினாத்தாளின் 199 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 199questionsவினாக்கள்
- 2026exam yearதேர்வு ஆண்டு
-
126.Jal Jeevan Mission plays an important role for ________.
Choose the correct answer among the following.ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கியப் பங்கு ________
பின்வருவனவற்றுள் சரியான பதிலைத் தேர்வு செய்க.- (i) Women empowerment
- (ii) Water supply maintenance
- (iii) Providing adequate tap water connection
- (i) பெண்கள் அதிகாரமளித்தல்
- (ii) நீர் வழங்கல் பராமரிப்பு
- (iii) போதுமான குழாய் நீர் இணைப்பு வழங்குதல்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
127.The DANIDA-TNAHCP initiative of Tamil Nadu is related to which among the following sectors.தமிழ்நாட்டின் DANIDA-TNAHCP முன்முயற்சி பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
- Healthஆரோக்கியம்✓
- Infrastructureஉள்கட்டமைப்பு
- Industryதொழில்
- Educationகல்வி
-
128.Comparing the 14th and 15th Finance Commissions, which of the following statements are correct?பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (i) The weightage of income distance has increased
- (ii) The weightage of population (2011 census) has increased
- (iii) The weightage of area has remained the same
- (i) வருமானத்திற்கான புள்ளிகள் அதிகரித்துள்ளது
- (ii) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கான புள்ளிகள் அதிகரித்துள்ளது
- (iii) நிலப்பரப்பிற்கான புள்ளிகளில் மாற்றங்கள் ஏதும் இல்லை
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
-
129.In Tamil nadu Khilafat Day was observed onதமிழ்நாட்டில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள்
- 17 April 192217 ஏப்ரல் 1922
- 17 April 192117 ஏப்ரல் 1921
- 17 April 192017 ஏப்ரல் 1920✓
- 17 April 192317 ஏப்ரல் 1923
-
130.A cash price of Rs.________ is given to each of the two College students – One male and one female – who win the 'Bharathi Young Poet Award'.'பாரதி இளம் கவிஞர் விருது' பட்டத்தை வெல்லும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கல்லூரி மாணவருக்கு தலா ரூ. ________ ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
- Rs. 25,000ரூ. 25,000
- Rs. 50,000ரூ. 50,000✓
- Rs. 75,000ரூ. 75,000
- Rs. One lakhரூ. ஒரு லட்சம்
-
131.What is the Act of the Indian Constitution that has special provisions for the socio-economic development of SCs, STs and OBCs?SC, ST, OBC களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டம் எது?
- Article 220-225 of Part XVIஷரத்து 220-225; பகுதி 16
- Article 114-120 of Part XVIஷரத்து 114-120; பகுதி 16
- Article 330-342 of Part XVIஷரத்து 330-342; பகுதி 16✓
- Article 350-355 of Part XVIஷரத்து 350-355; பகுதி 16
-
132.Arrange the following in chronological order :பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துங்கள் :
- 1. Kudiyarasu Tamil weekly was started by Thanthai Periyar
- 2. System of Devadasi was abolished by an Act.
- 3. Staff Selection Board was established by Justice Party.
- 4. Ramalinga adigal was born near Chidambaram.
- 1. குடியரசு தமிழ் வார இதழ் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டது.
- 2. தேவதாசி முறை ஒரு சட்டத்தால் ஒழிக்கப்பட்டது.
- 3. பணியாளர் தேர்வு வாரியம் நீதிக்கட்சியால் நிறுவப்பட்டது.
- 4. இராமலிங்க அடிகள் சிதம்பரம் அருகே பிறந்தவர்.
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (4), (2), (1), (3)(4), (2), (1), (3)
- (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
- (4), (3), (1), (2)(4), (3), (1), (2)✓
-
133.South Indian Liberal Federation came into existence in the year 1917 mainly for the ________ of non-Brahmins.தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு 1917-ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதவர்களுக்காக ________ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
- Social Advancementசமூக முன்னேற்றம்
- Economic Advancementபொருளாதார முன்னேற்றம்
- Cultural Advancementகலாச்சார முன்னேற்றம்
- Political Advancementஅரசியல் முன்னேற்றம்✓
-
134.Assertion [A] : The more good things we hear the more noble we turn.கூற்று [A] : எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
Reason [R] : Listening skill/sense is subtler than any other sense. For effective education listening skill is the most effective.
(எத்துணை நல்லவற்றை நாம் கேட்கிறோமோ அத்துணை சிறப்புகள் நம்மைச் சேரும்).
காரணம் [R] : செவியறிவு என்பது மற்ற புலனறிவினை விட நுண்ணியது ஆகும். கற்றலில் கேட்டல் என்பது மிகச் சிறப்புடையதாக அமைகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்.✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
135.Among the following Congress Leaders who stated that "servants of people society was in reality a Hindu Reform Movement"?பின்வரும் காங்கிரஸ் தலைவர்களில் யார் “மக்கள் சேவகர்கள் சமுதாயம் உண்மையில் ஒரு இந்து சீர்திருத்த இயக்கமாக இருந்தது” என்று கூறினார்.
- Madan Mohan Malviyaமதன் மோகன் மாளவியா
- Lala Lajpat Raiலாலா லஜ்பத் ராய்✓
- Bal Gangadhar Tilakபால கங்காதர திலகர்
- Gopala Krishna Gokhaleகோபால கிருஷ்ண கோகலே
-
136.Which of the following statements are true about Perarignar Anna?கீழே கொடுக்கப்பட்டவற்றில் பேரறிஞர் அண்ணா பற்றிய சரியான பதிலை தேர்ந்தெடுக்க.
- (i) He supported Hindu Dharma principles.
- (ii) He protested against the atrocities done in the name of religion.
- (iii) He opposed the domination of Brahmins.
- (i) பேரறிஞர் அண்ணா, ஹிந்து தர்ம கொள்கைகளை ஆதரித்தார்.
- (ii) மதம் பெயரில் கொடுமைகள் நடப்பதை எதிர்த்தார்.
- (iii) பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
-
137.Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Dr. Subbarayan's Independent Cabinet.
- 2. Origin of Dravidian League.
- 3. First Conference of Self Respect Movement.
- 4. Conference of Non-Brahmins held in Madurai.
- 1. டாக்டர். சுப்பராயனின் சுயேட்சை அமைச்சரவை.
- 2. திராவிடர் கழகத்தின் தோற்றம்.
- 3. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு.
- 4. மதுரையில் நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடு.
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
-
138.Arranging Chronological Order/Event Type :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. The Madras Hindu Widow Marriage Association.
- 2. The Hindu Women's Remarriage Association.
- 3. Widow Remarriage Act XV.
- 4. Widow Remarriage Society.
- 1. மெட்ராஸ் இந்து விதவைகள் திருமண சங்கம்.
- 2. இந்து பெண்களின் மறுமண சங்கம்.
- 3. பதினைந்தாவது விதவைகள் மறுமண சட்டம்.
- 4. விதவைகள் மறுமண சங்கம்.
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (3), (4), (1), (2)(3), (4), (1), (2)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)✓
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
-
139.Which among the following statements are true in connection with the Vellore Revolt?வேலூர் கிளர்ச்சி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
- (I) The Vellore Revolt was held in 1801.
- (II) The family members of Tipu were imprisoned at Vellore Fort after the Fourth Mysore War.
- (III) At the time of Vellore Revolt, the Governor of Madras was Lord William Bentinck.
- (IV) The Victory of Revolt of Vellore against British was one of the significant event in the history of India.
- (I) வேலூர் கிளர்ச்சி 1801 இல் நடைபெற்றது.
- (II) நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
- (III) வேலூர் கிளர்ச்சியின் போது மெட்ராஸ் கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிக் பிரபு.
- (IV) ஆங்கிலேயருக்கு எதிராக வேலூர் கிளர்ச்சி பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
- (I) and (II) are correct(I) மற்றும் (II) ஆகியவை சரி
- (II) and (IV) are correct(II) மற்றும் (IV) ஆகியவை சரி
- (II) and (III) are correct(II) மற்றும் (III) ஆகியவை சரி✓
- (I), (II) and (IV) are correct(I), (II) மற்றும் (IV) ஆகியவை சரி
-
140.Which of the following statements are true about 'Porunai'?பின்வரும் கூற்றுகளில் 'பொருநை' குறித்த சரியான விடையைக் கூறுக.
- (i) India's First Excavation Research.
- (ii) 'Porunai' situated in Tanjoor District.
- (iii) Dr. Jakore discovered Porunai Research.
- (iv) This Excavation Research started in the year 1896.
- (i) இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் முதலானது ஆகும்.
- (ii) 'பொருநை' தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- (iii) முனைவர் ஜாகோர் என்பவர் முதன்முதலில் ஆய்விற்குத் திட்டமிட்டார்.
- (iv) இந்த அகழாய்வு கி.பி. 1896 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) சரி✓
- (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) சரி
- (i) only correct(i) மட்டும் சரி
- (ii) only correct(ii) மட்டும் சரி
-
141."Thiran Therinthu Therapadum"…. Thirukkural talks about“திறந் தெரிந்து தேறப்படும்” எனத் திருக்குறள் கூறுவது
- Aram, Porul, Inbam, Veeduperuஅறம், பொருள், இன்பம், வீடுபேறு
- Aram, Porul, Inbam, Uyirachamஅறம், பொருள், இன்பம், உயிரெச்சம்✓
- Aram, Porul, Veeduperu, Kamamஅறம், பொருள், வீடுபேறு, காமம்
- Thuravu, Aram, Porul, Inbamதுறவு, அறம், பொருள், இன்பம்
-
142.Which of the following statements are true about palm leaves?ஓலைச் சுவடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- (i) When writing on palm leaves, it is not customary to place a dot over consonants or a full stop at the end of a sentence.
- (ii) In inscriptions, a full stop is usually placed at the end of sentence.
- (iii) On some palm leaves, a vertical line is used to indicate the end of a sentence instead of a full stop.
- (i) பனை ஓலைகளில் எழுதும்போது மெய்யெழுத்திற்கு மேல் புள்ளியிடுவதும் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவதும் வழக்கில் இல்லை.
- (ii) கல்வெட்டுகளில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படும்.
- (iii) சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாக செங்குத்துக் கோடு பயன்படுத்தப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
143.Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : The increase in the consumption of Iron caused an increase in the iron production leading to the development of manufacturing industry which rose to the next level.
Reason [R] : This led to the emergence of various groups in the structure of society and the formation of states such as Kings, Vassals and Governors.
கூற்று [A] : இரும்பின் பயன்பாட்டினால் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம் மற்றும் உபரி உற்பத்தி சமூகத்தினை பல்வேறு வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் சென்றது.
காரணம் [R] : இது சமூகத்தின் கட்டமைப்பில் பல்வேறு குழுக்களின் எழுச்சிக்கும் மன்னர், வேளிர், வேந்தர் போன்ற அரச உருவாக்கத்திற்கு அடி கோலியது.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] is true, [R] is true[A] சரி, [R] சரி✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமல்ல
-
144.Find the difference in compound interest and simple interest for principal 8000 and the rate 5% in 3 years.அசல் 8000, ஆண்டு வட்டி விகிதம் r = 5% மற்றும் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காண்க.
- Rs. 12ரூ. 12
- Rs. 20ரூ. 20
- Rs. 61ரூ. 61✓
- Rs. 51ரூ. 51
-
145.Divya bought Rs. 30,000 from a bank to buy a car at 20% simple interest. If she paid Rs. 18,000 as interest while clearing the loan, find the time for which the loan was given.திவ்யா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ரூ. 30,000 ஐ 20% தனி வட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார். அவர் ரூ. 18,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில் வட்டியாக செலுத்தினார் எனில் கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக.
- 6 years6 வருடம்
- 5 years5 வருடம்
- 4 years4 வருடம்
- 3 years3 வருடம்✓
-
146.HCF of x^(a+9), x^(a+7), x^(a+5) is ________.x^(a+9), x^(a+7), x^(a+5) ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி ________.
- x^ax^a
- x^(a+9)x^(a+9)
- x^(a+7)x^(a+7)
- x^(a+5)x^(a+5)✓
-
147.The income of a person is increased by 20% and then decreased by 20%. Then the change in his income is ________.ஒரு நபரின் வருமானம் 20% அதிகரிக்கப்பட்டு பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.
- 1% increase1% அதிகரிப்பு
- 3% decrease3% குறைவு
- 5% increase5% அதிகரிப்பு
- 4% decrease4% குறைவு✓
-
148.How many dots are there on the dice face opposite to the dice face with three dots?
Four views (i), (ii), (iii), (iv) of the same die are shown, each displaying three visible faces with varying dot counts (ranging from 1 to 6 dots per face).3 புள்ளிகள் கொண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள பகடைப் பக்கத்தில் எத்தனை புள்ளிகள் இருக்கும்?
ஒரே பகடையின் நான்கு நிலைகள் (i), (ii), (iii), (iv) படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு படத்திலும் மூன்று பக்கங்கள் தெரிகின்றன (புள்ளிகள் 1 முதல் 6 வரை மாறுபடுகின்றன).- 22
- 44✓
- 55
- 66
-
149.
- (i) All jasmine in the garden are white.
- (ii) Some flowers are jasmine.
- (iii) All flowers in the garden are not white.
If the first two statements are true, the third statement is
- (i) தோட்டத்திலுள்ள அனைத்து மல்லிகைப் பூக்களும் வெண்மையானவை.
- (ii) சில பூக்கள் மல்லிகையாகும்.
- (iii) தோட்டத்திலுள்ள அனைத்து பூக்களும் வெண்மையானவை அல்ல.
முதல் இரண்டு கூற்றுகள் உண்மையாக இருந்தால், மூன்றாவது கூற்று
- Trueசரி
- Falseதவறு✓
- Uncertainநிச்சயமற்றது
- None of the aboveமேலே உள்ள எதுவும் இல்லை
-
150.What is the major environmental advantage in using Chitosan encapsulated nano-urea over conventional urea?சாதாரண யூரியாவிற்குப் பதிலாக கைட்டோசான் பூசப்பட்ட நானோ-யூரியாவைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியச் சுற்றுச்சூழல் நன்மை என்ன?
- It helps in maintenance of soil pH.இது மண்ணின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.
- It provides drought tolerance to the crops.இது பயிர்களுக்கு வறட்சி தாங்கும் தன்மையை அளிக்கிறது.
- It drastically reduce ground water contamination caused by nitrate leaching.இது நைட்ரேட் கசிந்தோடல் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கிறது.✓
- It speeds up the green house gas emissions from the soil.இது மண்ணிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டை வேகப்படுத்துகிறது.
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →