13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 9 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Which one is wrongly matched pair in their characters?கீழ்கண்ட பொருத்தங்களில் பண்புகளின் அடிப்படையில் எது தவறான பொருத்தமாகும்?
- Pancreas – Glucagonகணையம் – குளுக்ககான்
- Small intestine – Stomatostatinசிறுகுடல் – ஸ்டோமட்டேஸ்டேடின்
- Testis – Estrogenவிந்தகம் – ஈஸ்ட்ரோஜென்✓
- Adrenal gland – Glucocorticoidsஅட்ரீனல் சுரப்பி – குளுக்கோகார்டிகாய்ட்ஸ்
-
Match the type of respiration in insects in Column I with Column II and choose the correct answer :
Column Iகாலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I(a) Holopneustic 1. Spiracles are replaced by gills (b) Metapneustic 2. Only the prothoracic spiracles are open (c) Propneustic 3. All the spiracles are open (d) Branchipneustic 4. Prothoracic and posterior abdominal spiracles are open (e) Amphipneustic 5. Only last pair of spiracles are open Column II
(a) ஹோலோப்நியூஸ்டிக் 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல் (b) மெட்டாப்நியூஸ்டிக் 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது (c) புரோப்நியூஸ்டிக் 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது (d) பிராங்கிநியூஸ்டிக் 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது (e) ஆஃம்பிநியூஸ்டிக் 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது காலம் II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5(a)-2 (b)-1 (c)-4 (d)-3 (e)-5
- (a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4(a)-3 (b)-5 (c)-2 (d)-1 (e)-4✓
- (a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3(a)-5 (b)-1 (c)-2 (d)-4 (e)-3
- (a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1(a)-4 (b)-2 (c)-5 (d)-3 (e)-1
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
Assertion [A] : Simorgh (phoenix) launched two satellites.
Reason [R] : It is a satellite carrier rocket
Now select your answer scheme given below :
கூற்று [A] : சிமோர்க் (பீனிக்ஸ்) இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தியது
காரணம் [R] : இது செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகலம் ஆகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
- Both are trueஇரண்டும் சரியானது
- Both are falseஇரண்டும் தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது✓
- [A] is true and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
-
Which of the following statements about bases is /are true?
I. Base is a substance which releases hydroxide ions when dissolved in water
II. They change blue litmus to red
III. Zinc reacts with sodium hydroxide to form Sodium Zineate with the liberation of hydrogen gas
IV. They are colourless with phenolphthalein and pink with methyl orangeகாரங்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி.
I. காரங்கள் நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரும் சேர்மங்கள் காரங்கள் எனப்படுகின்றன
II. இவை நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுகின்றன
III. துத்தநாகம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியீட்டுச் சோடியம் ஜிங்கேட்டைத் தருகிறது
IV. இவை பினாப்தலினுடன் நிறமற்றதாகவும் மெத்தில் ஆரஞ்சுடன் இளஞ்சிவப்பு நிறத்தையும் தருகின்றன- I and IIII மற்றும் III✓
- II onlyII மட்டும்
- III and IVIII மற்றும் IV
- IV and IIIV மற்றும் II
-
Which one of the statements is correct for Li-ion batteries?Li-அயனி பேட்டரிகளுக்கு/மின்கலங்களுக்கு பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- While the battery is discharging, the anode releases lithium ion to the cathodeபேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது✓
- While the battery is discharging, the cathode releases lithium ion to the anodeபேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடுக்கு வெளியிடப்படுகிறது
- While the battery is charging, the anode releases lithium ion to the cathodeபேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது
- While the battery is charging, the cathode doesn't releases lithium ion to the anodeபேட்டரி மின்னேற்றம் அடையும்போது, Li-அயனிகள் கேத்தோடிலிருந்து ஆனோடுக்கு வெளியிடப்படுவதில்லை
-
What is the basic concept of Raman effect?ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
- reflectionபிரதிபலிப்பு
- incoherent scatteringஒத்தியல்பா ஒளிச்சிதறல்
- coherent scatteringஒத்த ஒளிச்சிதறல்✓
- refractionஒளி விலகல்
-
Projectile motion is a combination of horizontal motion with constant ———— and vertical motion with constant ————.எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ———— கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ———— கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
- Acceleration, velocityமுடுக்கம், திசைவேகம்
- Velocity, accelerationதிசைவேகம், முடுக்கம்✓
- Displacement, velocityஇடப்பெயர்ச்சி, திசைவேகம்
- Velocity, displacementதிசைவேகம், இடப்பெயர்ச்சி
-
If a simple pendulum with the mass of the bob as 'M' has a time period 'T', then if in the same pendulum another bob with mass 2M replaces the original bob. Now the time period is (It may be assumed that the string attached to the bob has no mass)M என்ற திறை கொண்ட ஒரு தனிலுலவின் (simple pendulum) அலைவு நேரம் 'T' என உள்ளது. பின் அத்தனிலுலவில் ஊஞ்சலின் முன்நிறையாகும் அதன் திறை 2M ஆக மாற்றிடது. தற்போது அதன் அலைவுநேரம் என்னவாக இருக்கும்? (ஊஞ்சலணைட் தாங்கும் இழை நிறையற்றதாகவே கருதலாம்)
- 2 T2 T
- T/2T/2
- TT✓
- 3T/23T/2
-
Which of the following fact is incorrect about monocotyledonous plants?பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- Seed has single cotyledonவிதை ஒருவித்திலையை கொண்டது
- Leaves have parallel venationஇலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
- Fibrous root system presentசல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
- Flowers are pentamerousஐந்தங்க மலர் காணப்படுகிறது✓
-
Which of the following statements is true about human races?பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?
- (i) The races is a group of people with more or less permanent distinguishing characteristics
- (ii) Human races are classified in 7 blood groups
- (iii) The races are identified and classified based on skin colour, stature, shape of head, face, nose, eye, type of hair and blood group
- (i) இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
- (ii) மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- (iii) தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
How much current is consumed for a tubelight which has 40W for domestic use ?வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
- 0.2 A0.2 ஆம்பியர்✓
- 0.5 A0.5 ஆம்பியர்
- 1 A1 ஆம்பியர்
- 5.75 A5.75 ஆம்பியர்
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Minamata disease 1. Nitrate (b) Itai-Itai disease 2. Mercury (c) Black foot disease 3. Cadmium (d) Blue baby syndrome 4. Arsenic (a) மினமாட்டா நோய் 1. நைட்ரேட் (b) இடாய்-இடாய் நோய் 2. பாதரசம் (c) கருப்புப் பாத நோய் 3. காட்மியம் (d) நீலக் குழந்தை நோய் 4. ஆர்சனிக் - (a) 4 (b) 3 (c) 2 (d) 1(a) 4 (b) 3 (c) 2 (d) 1
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1✓
- (a) 3 (b) 1 (c) 2 (d) 4(a) 3 (b) 1 (c) 2 (d) 4
- (a) 1 (b) 2 (c) 3 (d) 4(a) 1 (b) 2 (c) 3 (d) 4
-
Consider the following statements :
I. The Atomic Energy Commission was set up under the Chairmanship of Homi J. Bhaba to formulate a policy for all atomic energy activities in the country.
II. In 1956 India's first nuclear reactor in Trombay near Bombay began to function.
Which of the statements is/are correct ?கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/எவை சரி :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- Both I & III மற்றும் II✓
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
The Indian Institute of Technology – Madras has developed a technology called AMRIT. This technology is integrated into the "Jal Jeevan Mission" to provide a highly effective solution forஇந்திய தொழில்நுட்பக் கழகம் – சென்னை, 'AMRIT' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கீழ்கண்ட எந்த தீர்வை வழங்குவதற்காக 'ஜல் ஜீவன் இயக்கத்தில்' ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது?
- the desalination of sea waterகடல்நீரை நன்னீராக்குதல்
- the removal of arsenic and heavy metals from water using nano technologyநானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் கன உலோகங்களை நீக்குதல்✓
- the water softening processநீரின் கடினத்தன்மையைக் குறைக்கும் செயல்முறை
- increasing the ground-water levelநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல்
-
Which of the following ecological Pyramid is always upright?பின்வருவனவற்றில் எது நேரான சூழ்நிலையியல் கூம்பு?
- Pyramid of energyஆற்றல் கூம்பு✓
- Pyramid of numberஎண்ணிக்கை கூம்பு
- Pyramid of biomassஎடை கூம்பு
- (B) and (C)(B) மற்றும் (C)
-
The valve which regulates the blood flow from right ventricle to the pulmonary arteryவலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
- Semi-lunar valveபிறைசந்திர வால்வு✓
- Auriculo-ventricular valveஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு
- Bi Cuspid valveஈரிதழ் வால்வு
- Tri Cuspid valveமூவிதழ் வால்வு
-
Swine Flu is caused byபன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
- Rubella virusருபல்லா வைரஸ்
- Rhino virusரைனோ வைரஸ்
- H1N1 virusH1N1 வைரஸ்✓
- Alpha virusஆல்ஃபா வைரஸ்
-
The colour of the skin in ripened apple, tomato and grape fruits is due to accumulation ofபழுத்த ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சையின் தோலின் நிறத்திற்குக் காரணம்
- Carotenoidகரோட்டினாய்டு
- Lycopeneலைக்கோபீன்
- Anthocyaninஆந்தோசயானின்✓
- Ethyleneஎத்திலீன்
-
Silicon is one of the best known semi conducting material. As its temperature rises more, it becomes a better conductor. But the temperature at which the silicon gets permanently damaged isசிலிக்கான், சிறந்த அறியப்பட்ட குறைகடத்திகளில் ஒன்றாகும். அதன் வெப்பநிலை அதிகரிக்கையில் அது சிறந்த கடத்தியாகிறது. ஆனால் ஒரு வெப்பநிலையில் சிலிக்கான் நிரந்தரமாக சேதமடைகிறது. அது
- 100°C100°C ல்
- 150°C150°C ல்✓
- 200°C200°C ல்
- 250°C250°C ல்
-
The general molecular formula of alkynes isஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
- CnH2n+2CnH2n+2
- CnH2nCnH2n
- CnH2n-2CnH2n-2✓
- CnH2n+1CnH2n+1
-
The source of energy in any eco system areசுற்றுச்சூழலின் ஆற்றலின் முக்கிய ஆதாரம்
- Osmotrophsஆஸ்மோ மண்டலம்
- Autotrophsஆட்டோ மண்டலம்✓
- Lithotrophsஒளி மண்டலம்
- Heterotrophsவெவ்வேறு மண்டலம்
-
Which of the following is responsible for protecting humans from harmful ultraviolet rays?தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது பின்வருவனவற்றில் எது?
- UV-AUV-A
- UV-CUV-C
- Ozone layerஓசோன் படலம்✓
- None of the aboveமேல் உள்ளவை அல்ல
-
Which of statements are True?கீழ்கண்டவற்றில் எது சரியான கூற்று?
- (i) Octane number increases with chain length.
- (ii) Cycloalkanes have higher Octane number than straight chain alkanes.
- (iii) Alkenes and aromatic hydrocarbon have higher Octane number than straight chain alkanes.
- (iv) Branched chain alkanes have lower octane number than straight chain alkanes.
- (i) சங்கிலி தொடர் கூடும் போது ஆக்டேன் என் உயர்கிறது.
- (ii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் வளைய அல்கேன்களுக்கு உயர்ந்த ஆக்டேன் என் உண்டு.
- (iii) நேரான அல்கேன்களைக் காட்டிலும் அல்கீன்களும் அரோமாட்டிக் ஹைட்ரோ கார்பன்களும் அதிக ஆக்டேன் என் கொண்டது.
- (iv) நேரான அல்கேன்களைக் காட்டிலும் கிளைகள் உடைய சங்கிலித் தொடர் அல்கேன்கள் குறைவான ஆக்டேன் என் கொண்டது.
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
The time of reverberation of a hall can be decreased byஒரு அரையில் எதிர் முழுக்க நேரத்தைக் குறைப்பதற்கு
- having a number of loud speakersஅதிக எண்ணிக்கையில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தலாம்
- opening all windows and doorsஎல்லா ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்✓
- closing all windows and doorsஎல்லா ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும்
- speaking loudlyசத்தமாக பேச வேண்டும்
-
Galena is the ore of which of the following metals?கலீனா என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ள எந்த உலோகத்தின் தாதுப்பொருளுர்?
- Silverவெள்ளி
- Leadகாரீயம்✓
- Goldதங்கம்
- Ironஇரும்பு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →