Group 4 / VAO · 2022குரூப் 4 / VAO · 2022
TNPSC Group 4 / VAO 2022 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 4 / VAO 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 200 questions from the TNPSC Group 4 / VAO 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 4 / VAO 2022 வினாத்தாளின் 200 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 200questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
The gas present in the pores of soft finely stratified sedimentary rock isமென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
- Shale gasஷேல் வாயு✓
- Gobar gasகோபர் வாயு
- Water gasநீர் வாயு
- Oxygen gasஆக்சிஜன் வாயு
-
சரியான இணையைத் தேர்வு செய்க.
- (a) துவரை — தாமரை மலர்
- (b) மரை — பவளம்
- (c) விசும்பு — வானம்
- (d) மதியம் — நிலவு
- (a) மற்றும் (b) சரி
- (b) மற்றும் (c) சரி
- (c) மற்றும் (d) சரி✓
- (d) மற்றும் (a) சரி
-
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
- 1. பகுத்தறிவுக் கவிராயர் — உடுமலை நாராயணக்கவி
- 2. உவமைக் கவிஞர் — பெருஞ்சித்திரனார்
- 3. காந்தியக் கவிஞர் — வெ. இராமலிங்கனார்
- 4. புரட்சிக் கவிஞர் — தாரா பாரதி
- 1ம் மற்றும் 2ம் சரி
- 2ம் மற்றும் 3ம் சரி
- 1ம் மற்றும் 3ம் சரி✓
- 2ம் மற்றும் 4ம் சரி
-
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
- கலம்பகம்
- பள்ளு✓
- குறவஞ்சி
- உலா
-
The birth rate is estimated in terms ofபிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
- (i) Number of births per one hundred population in a given year
- (ii) Number of births per one lakh population in a given year
- (iii) Number of births per one thousand population in ten years
- (iv) Number of births per one thousand population in a given year
- (i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
The length of a rectangle is (3x + 2) units and its breadth is (3x − 2) units. Find its area. (x = 20 units)ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x − 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
- 3596 sq. units3596 ச.அலகுகள்✓
- 3956 sq. units3956 ச.அலகுகள்
- 4256 sq. units4256 ச.அலகுகள்
- 5356 sq. units5356 ச.அலகுகள்
-
சரியான தொடரைக் கண்டறிக.
- தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
- என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
- நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
- “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்✓
-
ஈ.வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
- 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
- 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை
- 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்✓
- 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
-
If 18, a, b, − 3 are in Arithmetic progress, then what is the value of (a + b)?18, a, b, − 3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக் காண்க.
- 77
- 1111
- 1515✓
- 2121
-
தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்?
- தேவர்கள்
- அரசர்கள்
- சித்தர்கள்✓
- புலவர்கள்
-
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
- மெய்யப்பர்
- உ.வே. சாமிநாதனார்✓
- இலக்குவனார்
- மீனாட்சி சுந்தரனார்
-
'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
- நல்லாதனார்
- ஒட்டக்கூத்தர்
- காளமேகப் புலவர்✓
- குமரகுருபரர்
-
'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
- தணி✓
- தணிந்த
- தணிந்து
- தனி
-
Match the place of excavation with the district it is located :
Place of excavationஅகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள்(a) Keezhadi 1. Thoothukudi (b) Korkai 2. Ariyalur (c) Gangaikonda Cholapuram 3. Thanjavur (d) Kurumbanmedu 4. Sivagangai District
(a) கீழடி 1. தூத்துக்குடி (b) கொற்கை 2. அரியலூர் (c) கங்கை கொண்ட சோழபுரம் 3. தஞ்சாவூர் (d) குரும்பன்மேடு 4. சிவகங்கை மாவட்டம்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
The first surveyor of the Archaeological Survey of India (ASI) wasஇந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
- Charles Masonசார்லஸ் மேசன்
- Alexander Burnesஅலெக்சாண்டர் பர்ன்ஸ்
- Alexander Cunninghamஅலெக்சாண்டர் கன்னிங்ஹாம்✓
- Sir John Marshalசர் ஜான் மார்ஷல்
-
Mukesh can do 2/7 th of an work in one day. In how many days can he complete the same work?முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
- 2½ days2½ நாட்கள்
- 3½ days3½ நாட்கள்✓
- 4½ days4½ நாட்கள்
- 5½ days5½ நாட்கள்
-
Assertion (A) : According to Health and Family Welfare policy note 2021-2022, the state government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and services and other communicatable diseases and non-communicatable diseases.வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.Reason (R) : The doctor to patient ratio in Tamilnadu is one of the highest in India.
- (A) is true, (R) is false(A) உண்மை (R) தவறு
- Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
- (A) is false (R) is true(A) தவறு (R) உண்மை
- Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.✓
-
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
- உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
- உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்✓
- உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
-
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்- ஆத்திச்சூடி
- கொன்றைவேந்தன்
- நல்வழி
- மூதுரை✓
-
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
- எம்.ஜி. இராமச்சந்திரன்
- மூதறிஞர் இராஜாஜி
- பெருந்தலைவர் காமராசர்✓
- கலைஞர் கருணாநிதி
-
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்" – திருக்குறள் உணர்த்தும் கருத்து.
- ஏற்றுமதி
- ஏமாற்றுதல்
- நேர்மை✓
- முயற்சியின்மை
-
மோனைத் தொடை ——————— வகைப்படும்.
- ஆறு
- எட்டு✓
- ஐந்து
- மூன்று
-
Match the following:கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) The Consumer Protection Act 1. 1980 (b) The Legal Metrology Act 2. 1955 (c) The Essential Commodities Act 3. 2009 (d) The prevention of Black Marketing Act 4. 1986 (a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1980 (b) சட்ட அளவியல் சட்டம் 2. 1955 (c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 3. 2009 (d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் 4. 1986 - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
If product of given three numbers is 1875 and their HCF is 5, then their LCM isகொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
- 7575✓
- 125125
- 375375
- 450450
-
"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?
- மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
- உ.வே. சாமிநாதனார்
- திரு.வி. கலியாண சுந்தரனார்✓
- ஆறுமுக நாவலர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →