Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 35 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 35 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக :
- (a) வழிக்கரை – 1. வினைத்தொகை
- (b) கரகமலம் – 2. உரிச்சொற்றொடர்
- (c) பொங்குகடல் – 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
- (d) உறுவேனில் – 4. உருவகம்
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
அவன் பொன்னன்– எவ்வகைப் பெயர்
- பொருட் பெயர்✓
- இடப் பெயர்
- காலப் பெயர்
- தொழில் பெயர்
-
காமராசரை 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
- அறிஞர் அண்ணா
- மனிதருள் மாணிக்கம் நேரு
- மூதறிஞர் இராஜாஜி
- தத்தை பெரியார்✓
-
உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
- அலைவாய்க் கரையில்
- கரிப்பு மணிகள்✓
- ஒரு கடலோர கிராமம்
- சேற்றில் மனிதர்கள்
-
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?- முன்றுறை அரையனார்
- காரியாசான்
- மிளைகிழான் நல்வேட்டனார்✓
- கணிமேதாவியார்
-
'தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்'
என்ற தொடரால் குறிக்கப்படுபவர்- உமையொரு பாகனாம் சிவபெருமான்✓
- குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்
- மராமரம் ஏழினைத் துளைத்த இராமன்
- மாமரம் தடிந்த தணிகை வேலன்
-
பொருத்துக :
(a) வெண்பா 1. சயங்கொண்டான் (b) விருத்தப்பா 2. இரட்டையர்கள் (c) பரணி 3. புகழேந்தி (d) கலம்பகம் 4. கம்பர் - (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
- கோலாமி
- பர்ஜி
- கொண்டா
- கண்ணெழுத்துகள்✓
-
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
- மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
- நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது✓
- பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
-
'கூவா முன்னம் இளையோன் குறுகிநீ' கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
- பெயரெச்சம், வினையெச்சம்
- பண்புத்தொகை, பெயரெச்சம்
- ஏறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்✓
- வினைமுற்று, வினையெச்சம்
-
'ஞானக்கண்ணாடி' என்ற சமய நூலை எழுதியவர் யார்?
- வீரமாமுனிவர்✓
- கால்டுவெல்
- போப்
- வேத நாயகம் பிள்ளை
-
"ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
- ஓல்✓
- ஓலம்
- ஓலகம்
- ஒட்டோலக்கம்
-
“கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
- பெருமை
- கர்வம்
- குறைத்து மதிப்பிடாதே✓
- புகழ்
-
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்னும் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்
- நாயக்கர்கள்✓
- மராட்டியர்கள்
-
ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?
- தூது
- உலா✓
- பள்ளு
- அந்தாதி
-
“Monopoly Control” என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
- தனி ஆதிக்க விலை
- தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு✓
- தனி வல்லாளர்
- தனி வரைவு கட்டுப்பாடு
-
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
- சங்கரதாச சுவாமிகள்
- ந. முத்துசாமி✓
- பம்மல் சம்பந்த முதலியார்
- கோமல் சுவாமிநாதன்
-
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?
- ஜி.யு. போப்
- கால்டுவெல்✓
- பாரதிதாசன்
- பாரதியார்
-
செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு
- உவமை
- அடுக்குத்தொடர்
- எண்ணும்மை
- உருவகம்✓
-
கரகாட்டத்தின் துணையாடலாக ஆடப்படும் ஆட்டம் எது?
- மயிலாட்டம்✓
- காளியாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
-
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.- பொழிப்பு எதுகை
- கூழை எதுகை✓
- மேற்கதுவாய் எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
-
படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு
- 1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
- 2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
- 3. நீ தேட வேண்டுவது தொண்டு
- 4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்
- நேரு எழுதிய கடிதவரிகள்
- மு.வ. எழுதிய கடிதவரிகள்✓
- அண்ணா எழுதிய கடிதவரிகள்
- காந்தி எழுதிய கடிதவரிகள்
-
பதினென் என்றால்
- 18✓
- 20
- 11
- 17
-
உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
- எட்டடிச் செய்யுள்
- இரண்டடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்✓
- இவை எல்லாம் தவறானவை
-
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
- உருத்திரசன்மர்
- உக்கிரப் பெருவழுதி
- பூரிக்கோ
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →