Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 36 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 36 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
தற்போது மதுரை என்று அழைக்கப்படும் ஊர் கல்வெட்டுகளில் ———— எனக் காணப்படுகிறது.
- மருதை
- மதிரை✓
- கூடல்
- மருதூர்
-
"பாவலரேறு பெருஞ்சித்திரனார்" எழுதாத நூல் எது?
- பாவியக் கொத்து
- பள்ளிப் பறவைகள்
- கொய்யாக் கனி
- குறிஞ்சித் திட்டு✓
-
'சலவரைச் சாரா விடுதல் இனிதே'
'சலவர்' – என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்- Sorrow full person
- Importer
- Violent person
- Deceit full person✓
-
நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்
- சங்கரதாச சுவாமிகள்
- பரிதிமாற்கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
- ஆர்.எல். மனோகர்
-
'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- தலைவன்
- நெருப்பு
- அரண்
- அம்பு✓
-
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ"
– இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?- நற்றிணை
- கலித்தொகை
- குறுந்தொகை✓
- புறநானூறு
-
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
- எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு✓
- எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- இவை எதுவும் இல்லை
-
ஒரு பொருட் பன்மொழியில் "மீமிசை ஞாயிறு" என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
- பக்கப்பகுதி
- கீழ்ப்பகுதி
- நடுப்பகுதி
- மேல்பகுதி✓
-
மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
- தமிழிலக்கிய வரலாறு
- தமிழின்பம்
- கள்ளர் சரித்திரம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு✓
-
“Assailant” - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
- தாக்குபவர்✓
- முன் மரியாளர்
- உதவியாளர்
- புனைவை நயர்
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
இன்புற்று வாழும் இயல்புடையார் எங் ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.- துன்பத்தின் நிலைபாடு என்ன?
- எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?✓
- அரிது என்பதன் பொருள் கூறுக
- இயல்புடையாருக்கு இன்னல் வருமா?
-
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
- சிங்கவல்லி✓
- கீழாநெல்லி
- குப்பைமேனி
- வல்லாரை
-
'செப்பு திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
- சோழர் காலம்✓
- சேரர் காலம்
- பாண்டியர் காலம்
- நாயக்கர்கள் காலம்
-
'அங்கவியல்' திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
- அறத்துப் பால்
- பொருட் பால்✓
- காமத்துப் பால்
- எதுவுமில்லை
-
'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
- கிளி, மயில்
- நாரை, அன்னம்
- புறா, பருந்து✓
- கடற்காகம்
-
கோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ––––––––.- தூதுவளை✓
- துளசி
- அகத்திக்கீரை
- கீழாநெல்லி
-
மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
- சிவகாமியின் சரிதம்✓
- சிவகாமியின் செல்வன்
- சிவகாமியின் வரலாறு
- சிவகாமியின் சபதம்
-
அரசமைப்பிற்குக் கஞ்சிக்கு அல்லற்படும் மக்களின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
- காந்தி
- பாரதியார்
- அம்பேத்கார்✓
- திரு.வி.க
-
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
- பாலசரஸ்வதி
- வைஜெயந்திமாலா
- தஞ்சை கிட்டப்பா
- நர்த்தகி நடராஜ்✓
-
இவருக்கு வீடு ஒன்று ———— இரண்டு இருக்கிறது.
- மற்றும்
- இல்லை
- அல்லது✓
- தான்
-
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்"
– இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.- தேவாரம்
- திருவாசகம்✓
- ஏர் எழுபது
- திருக்கோவை
-
பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II (a) திருஞானசம்பந்தர் 1. திருவாலூர் (b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர் (c) சுந்தரர் 3. திருவாரூர் (d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
"வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு"
- 1915
- 1917
- 1930✓
- 1932
-
'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
- தாலாட்டுப்பாட்டு
- கும்மிப் பாட்டு
- பள்ளுப்பாட்டு✓
- வில்லுப் பாட்டு
-
பொருத்துக
(a) மேதி 1. அள்ளம் (b) புள் 2. அலை (c) காசினி 3. எருமை (d) திரை 4. நிலம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →