Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 4 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
பிரித்து எழுதுக :
"வேண்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.- வேண்மா + மை
- வேண் + அன்மை
- வேண் + நன்மை
- வேள் + நன்மை✓
-
வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
–எப்பாடல் வகையை சார்ந்தது- தொழிற் பாடல்✓
- விளையாட்டுப் பாடல்
- ஒப்பாரி பாடல்
- சடங்குப் பாடல்
-
'தீ' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருள் தேர்வு செய்க
- அறிவு
- இனிமை
- தீமை
- வலிமை✓
-
சிறுங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?
- நந்திவர்மன்
- குகன்✓
- அட்புதியடிகள்
- சிபி
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :
கலி, கழி- போர், மிகுதி✓
- கலித்தல், கழித்தல்
- மகிழ்ச்சி, களித்தல்
- கலித்தொகை, மாவு களி
-
இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக :
(a) Dark Fiber 1. பின்னணி நிரல் (b) Demon 2. அடர்த்தி (c) Darkest 3. மிகு இருள்மை (d) Density 4. இருட்டு இழை - (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
- கலம் + அகம்
- கலம் + பகம்✓
- கலம்பு + அகம்
- கல் + அம்பகம்
-
ஐஞ்சிறு காப்பியங்கள் – என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
- நாக குமார காவியம்
- நீலகேசி
- குண்டலகேசி✓
- சூளாமணி
-
வழங்கித்தலைக்குரிய சீர் அமைப்பு
- தேமா புளிமாங்காய்
- தேமாங்களி புளிமாங்காய்✓
- கருவிளம் கூவிளங்காய்
- கூவிளங்காய் தேமாங்களி
-
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
- அழுகை
- தொல்லை✓
- போக்கு
- தொழுகை
-
பொருத்தமானதைக் கண்டெடுக்க
- இரானி மங்கம்மாள் கணவன்– சொக்கநாத நாயக்கர்
- இரானி மங்கம்மாள் மகன்– முத்து வீரப்பன்✓
- இரானி மங்கம்மாள் மருமகன்– கமலாம்மிகை
- இரானி மங்கம்மாள் பெயரன்– விஜயரங்கச் சொக்கநாதன்
-
அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்ததா?
- குறிஞ்சி
- மருதம்✓
- முல்லை
- நெய்தல்
-
இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்- அகன்ற உலகம்✓
- நீர் சூழ் உலகம்
- மலை சூழ் உலகம்
- மழை தரும் உலகம்
-
'பொன் பிறந்து கொண்டு புகாவநர் நல்கினான்'
– பழமொழி நானூறு.
புகாவநர் என்பதன் பொருள்- நீர்
- உணவு✓
- காற்று
- பொருள்
-
கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
- [A] சரி [R] தவறு✓
- [A] மற்றும் [R] இரண்டும் சரி
- [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- [A] தவறு [R] சரி
-
கிலி, கிழி, கிசி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க?
- பயம், கிழித்தல்; ஒரு பறவை✓
- கிழித்தல், ஒரு பறவை, பயம்
- கிழித்தல், பயம், ஒரு பறவை
- ஒரு பறவை, பயம், கிழித்தல்
-
'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
- பகை
- வண்மை
- வன்மை
- கேண்மை✓
-
கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விநாதகராலனைச் சும்மா இரு என்று மண்டலபுருடா திருவடி உபதேசம் செய்தார்.
II. மணிக்கவாசகரை இறால்சேல அடியங்கம், முற்றுக் அல்லது அழகு, பெண்ணினில் பெருமை, பொதுமை பெருமைல உள ஆகிய நற்களைச் திரு.வி.க இயம்பினார்.
III. தமிழ் நாட்டில் எளிமையைப் புகுத்திய இயல்பினர் என்றும் வரிந்த தென்றமிழ் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரம வேலைப்பணிக்கு முதல் காப்பாலி ஆகி அவவை, 'கோகலா' எனும் உயரிலைக்கு உயர்த்திப் பெருமை வளமிய்பமுக்கு உண்டு- I மற்றும் IV பொருத்தமற்றவை
- II மற்றும் IV பொருத்தமற்றவை✓
- II மற்றும் III பொருத்தமற்றவை
- I மற்றும் III பொருத்தமற்றவை
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.- எத்தனை மாடுகள் மேய்ந்தன?✓
- எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
- மாடுகள் மேய்ந்தனவா?
- ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- மோனை
- எதுகை
- இசைவு✓
- இயைபு
-
"சான்றோர் பாலர் ஆய
சாவார் சாவார் பாலர் ஆகுப்பவே"
– இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்- குறுந்தொகை
- புறநானூறு✓
- நற்றிணை
- ஐங்குறுநூறு
-
பிறவினைச் சொற்களைக் கண்டறிக.
- நனைந்தான், படித்தான்
- திருத்தினான், நனைந்தான்
- வருவித்தான், திருத்தினான்✓
- படித்தான், வருவித்தான்
-
சென்னிப் பற்று மற்றும் விமரைக்க என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்?
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவியேந்தர் மு. மேத்தா
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்✓
- இரவீந்திரநாத் தாகூர்
-
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
- (a) காலப்பெயர் — செம்மை
- (b) சினைப்பெயர் — கண்
- (c) பண்புப்பெயர் — ஆண்டு
- (d) தொழிற்பெயர் — ஆடுதல்
- (a), (c)✓
- (a), (b)
- (c), (d)
- (a), (d)
-
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
– இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ———- இணை மோனை
- ஒருஉ மோனை
- பொழிப்பு மோனை✓
- கூழை மோனை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →