Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 12 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 12 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
- கலீலியோ✓
- நிகோலஸ்கிராப்ஸ்
- சி.வி. இராமன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
-
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
- காற்புள்ளி
- அரைப்புள்ளி
- முக்காற்புள்ளி✓
- முற்றுப்புள்ளி
-
பொருத்துக :
(a) அணிகம் 1. காமன் (b) அநிகம் 2. சிவிகை (c) அனிகம் 3. படையில் ஓர் அளவு (d) அநங்கு 4. ஊர்தி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவர்
- சுந்தரர்
- கம்பர்
- சேக்கிழார்✓
- மாணிக்கவாசகர்
-
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
- 1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
- 2. பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
- 3. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
- 4. திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்✓
- (4) மட்டும்
-
'கிஇலம்' – இச்சொல்லின் பொருள்.
- முரசம்
- ஊண்றுகோய்
- சோம்பல்
- தலைப்பாகை✓
-
"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்"
என்று பாராட்டப்படுபவர்- முடியரசன்
- வாணிதாசன்
- சுரதா
- அப்துல் ரகுமான்✓
-
திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
- தீக்காயம் பட்டவர்
- தீயினால் சுட்டவர்
- பொருளைக் காக்காதவர்
- நாவைக் காக்காதவர்✓
-
"இரவில் மாட்டிய இலங்குகடர் தெய்தி
உரவநீர் அழுவத்து ஓடகலம் கரையும் துறை…," – இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.- உறையூர் முதுகொற்றனார்
- உறையூர் முதுகுற்றனார்
- உருத்திரங்கண்ணனார்✓
- உறையூர் இளம்பொன் வாணிகனார்
-
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்✓
- திருக்குறள்
-
பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பட்டியல் I பட்டியல் II (a) உடம்பார் அழிவின் உயிரார் அழிவர் 1. திருவள்ளுவர் (b) மீதான விரும்பேல் 2. திருமூலர் (c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 3. சித்தலைச் சாத்தனார் (d) நீர்நிறைமையாது உலகு 4. ஔவையார் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் ——— என்றழைப்பர்.
- Writ Petition
- Habeas Corpus
- Review Petition✓
- Revision Petition
-
'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
- இன்பம்
- வருமுன் காத்தல்
- மகிழ்ச்சி
- துன்பம்✓
-
"நினைபவாடி போதாச் சிறுபுந்தீர்" – என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.
- தெய்வப் புலவர்
- கவிஞர்✓
- தொல்காப்பியர்
- இளங்கோவடிகள்
-
உரிய விடையைத் தேர்வு செய்க.
சாலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்றக் காரணமானவர்?- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்✓
- தமிழ் முன்னேற்ற இயக்கம்
- உலகப் பண்பாட்டு இயக்கம்
- உலக ஒருமைப்பாட்டு இயக்கம்
-
வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்று(a) Internet 1. மின் இதழ் (b) Search Engine 2. மின் நூல் (c) E. Journal 3. இணையம் (d) E - Book 4. தேடுபொறி வரிசை இரண்டு
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
பொருத்துக :
(a) தட்டு 1. வேம்பு (b) கழி 2. மூங்கில் (c) கழை 3. சோளம் (d) அடி 4. கரும்பு - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.- சென்ற
- செல்ல
- செல்✓
- சென்று
-
திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது
- நாற்பது அடி உயரத்தில்
- அறுபது அடி உயரத்தில்
- ஆறு அடி உயரத்தில்
- நான்கு அடி உயரத்தில்✓
-
சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது✓
-
பொருந்தாத இணையைக் கண்டறிக.
- ஏ – எ
- த – ந
- ஐ – அ✓
- ற – ன
-
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை எக் கொண்டு வாழ்விடுவதே தருமம் – எனக் கூறியவர்
- இராணி மங்கம்மாள்✓
- அஞ்சலையம்மாள்
- வஞ்சியம்மை
- வேலுநாச்சியார்
-
'தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
- கண்ணதாசன்
- வாணிதாசன்✓
- பாரதிதாசன்
- முடியரசன்
-
"சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்
- திரு.வி.க.
- மறைமலையடிகள்
- உ.வே.சா.✓
- கவிமணி
-
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?- இல்லறவியல்✓
- துறவறவியல்
- ஊழியல்
- பாயிரவியல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →