Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 16 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 16 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்
- திருவருட்பிரகாச வள்ளலார்✓
- திருஞானசம்பந்தர்
- அடியார்க்கு நல்லார்
- சிவஞான முனிவர்
-
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
- சைவத்திறவு
- நாயன்மார் வரலாறு
- மனுமுறை கண்ட வாசகம்✓
- தமிழ்ச்சோலை
-
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
- கரைவெட்டி
- கோவன்புத்தூர்✓
- வெள்ளோடு
- சித்திரங்குடி
-
பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள்(a) துளசி 1. இளைப்பு இருமல் போக்கும் (b) தூதுவளை 2. மார்புச் சளி நீங்கும் (c) கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும் (d) சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும் பயன்கள்
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
"ஆழு இட்டத்தான அகல் நெடுந்தெருவில்" – இத்தொடர் இடம்பெற்ற நூல்
- புறநானூறு
- பட்டினப்பாலை
- கலித்தொகை
- மதுரைக் காஞ்சி✓
-
"த்ராமிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
- ஹரோல்ட் பாதிரியார்
- அகத்தியவில்வம்
- குமரிவெடப்டர்✓
- ஹோர்க்கன்
-
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
- மறைமலையடிகள்
- உ.வே. சாமிநாத ஐயர்
- வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்✓
- வையாபுரிப்பிள்ளை
-
தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை✓
- வினைத்தொகை
- உவமைத்தொகை
-
பொருயான இணையைப்க் கண்டறிக.
- கல்வில நாள் உகித்தல் – ஆராயந்து பாராமம்✓
- ஆபிரங்கானத்துப் பயிர் – நீண்ட காலமாக இருப்பு
- கானகநீர் – இல்லாத ஒன்று
- கம்பி நீட்டுதல் – விரைந்து வெளியேறுதல்
-
'முட்டையிட்டது சேவலா பெட்டையா'? — இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
- பால் வழு
- திணை வழு
- வினா வழு✓
- மரபு வழு
-
நன்னூல் குறிப்பிடும் ஒரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
- 42
- 40
- 82
- 70✓
-
சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன- மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
- சிலப்பதிகாரமும், வளையாபதியும்
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும்✓
- மணிமேகலையும், வளையாபதியும்
-
சேர்த்து எழுதுக :
"அது + அன்று" என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.- அதுவன்று
- அதுஅன்று
- அதின்று
- அதான்று✓
-
திவ்வையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
- இந்தியன் போஸ்ட்
- தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
- இந்தியன் ஒப்பீனியன்✓
- இந்தியன் பிரண்ட்
-
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- ஒராயிரத்து முப்பத்து நான்கு
- ஈராயிரத்து முப்பத்து நான்கு✓
- மூவாயிரத்து முப்பத்து நான்கு
- நான்காயிரத்து முப்பத்து நான்கு
-
பொருந்தித்துப் பொருத்துக.
(a) EVOKE 1. வெளிப்படு (b) EVOLVE 2. அகற்று (c) EVINCE 3. அமழ (d) EVICT 4. திருபி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
அகர வரிசைப்படுத்துக
- மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
- முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
- மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை✓
- மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
-
ஆண்மையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
- வழிவருக்கு உதவுதல்
- பகைவருக்கு உதவுதல்
- தண்பணுக்கு உதவுதல்
- உறவினருக்கு உதவுதல்✓
-
குணவன் நடந்தான் – இத்தொடர் உணர்ச்சின் விளைவையக் கண்டறிக.
- தன்வினை✓
- பிறவினை
- பொதுவினை
- எதிர்மறை வினை
-
நோக்கினான் – வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
- நோக்குதல்
- நோக்கி
- நோக்கியவன்
- நோக்கு✓
-
குழல் கேட்டு மகிழ்ந்தான்
இது – எவ்வகை ஆகுபெயர்?- காரியவாகுபெயர்
- கருவியாகுபெயர்✓
- சுருத்தாகுபெயர்
- தானியாகுபெயர்
-
தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
- ஏவல் வினைமுற்று
- உரிச்சொல் தொடர்
- பண்புத்தொகை
- வினைத்தொகை✓
-
சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு✓
-
அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்- கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
- சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
- கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை✓
- கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
-
சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று
- கண்ணகி காதை
- சிலப்பதிகாரம்
- உரையிடைடிட்ட பாட்டுடைச் செய்யுள்✓
- இராமகாதை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →