Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 2 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
கீழ்க்காணும் 'வல்லினம் மிகும் இடம்'
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.- அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
- ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
- உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்✓
- சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
-
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
- திருநாவுக்கரசர்✓
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
-
“வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?- பனையோலைப் பெட்டி✓
- வயல்
- வட்ட வடிவு
- எல்லை
-
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை✓
- குண்டலகேசி
- வளையாபதி
-
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்
- கடுவெளிச்சித்தர்✓
- பாம்பாட்டிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
-
தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?
- 40
- 72
- 43✓
- 52
-
பின்வரும் தொடரைக் கண்டறிக.
'பூங்குழலி யாழ் மீட்டினாள்'- எதிர்மறைத் தொடர்
- செய்வினைத் தொடர்✓
- செயப்பாட்டு வினைத் தொடர்
- விழைவுத் தொடர்
-
கீழே காணப்பெறுபவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' எனநும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.- I மற்றும் III சரியானவை✓
- I மற்றும் IV சரியானவை
- II மற்றும் III சரியானவை
- III மற்றும் IV சரியானவை
-
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
- (a) யுனெஸ்கோ விருது - 1. 21,400
- (b) அஞ்சல் தலை - 2. 10,700
- (c) பங்கேற்ற கூட்டங்கள் - 3. 1970
- (d) உரையாற்றிய மணிநேரம் - 4. 1978
- 4 3 1 2
- 3 4 2 1✓
- 2 3 4 1
- 1 3 4 2
-
"பிறகு விழிந்திறந்து பார்க்கையிலே
குழித்திருக்கும் பண்டைச் சுவடு எழுதுகோல்"
– இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?- தேன் மழை
- குயில் பாட்டு✓
- கொடி முல்லை
- மாங்கனி
-
நாட்டுப்புறப்பாடலின் வகைகள்
- 7✓
- 5
- 6
- 8
-
சமண மதத்தில் சில சிற்பங்கள் ——— உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.
- அளவுக்கு மீறிய உயரமும் அழகும்
- அளவுக்கு மீறிய உயரமும் தோர்த்தியம்
- ஒல்லியான உருவ அமைப்பும் அழகும்
- அளவுக்கு மீறிய உயரமும் பருமனும்✓
-
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?
- கம்பராமாயணம்
- இராமாயணம்
- இராமாவதாரம்✓
- இராம காதை
-
சரியான பொருள் தரும் ஒரெழுத்து ஒரு மொழியினைத் தேர்க.
- தே – தேடுதல்
- மீ – வாள்✓
- ஏ – ஏற்றம்
- தா – நான்
-
மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
(a) அடரடி படரடி 1. சித்தி அடைதல் (b) அகட விகடம் 2. உறுதியின்மை (c) ஈரொட்டு 3. தந்திரம் (d) கை கூடுதல் 4. பெருங்குழப்பம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
'ஊ' என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
- இறைச்சி✓
- உலகம்
- உயிர்
- உயர்வு
-
எதிர்ச்சொற்களைப் பொருத்துக :
(a) அணுகு 1. தெளிவு (b) ஐயம் 2. சோர்வு (c) ஊக்கம் 3. பொய்மை (d) உண்மை 4. விலகு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
- கீழ்க்கதுவாய்✓
- இணை
- கூழை
- மேற்கதுவாய்
-
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள் :- மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
- ஆசிரியரை 'ஐயா' என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
- அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு✓
- திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
-
"பிரிரந்தையாரி" எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
- பாலேந்திரா பாரதிதாசன்✓
- கவிஞர் வாணிதாசன்
- கவியரசர் கண்ணதாசன்
- கவிஞர் முடியரசன்
-
‘அறுமோ, நரி நக்கிற்று என்று கூடல்’? - இது பயின்று வந்த நூல் எது?
- பழமொழி✓
- நாலடியார்
- திருக்குறள்
- ஆசாரக்கோவை
-
சேர்த்து எழுதுக.
பலா + அருமை- பலாஅருமை
- பலஅருமை
- பலாவருமை✓
- பலாப்பழம் அருமை
-
உறுதிக் கூற்று : ஆ, ஒ, எ, ஏ, யா ஆகிய எழுத்துக்கள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும்.
காரணம் : ஏெனெனில் இவை வினாச்சொற்கள்.- உறுதிக்கூற்று சரி காரணம் சரி✓
- உறுதிக்கூற்று சரியன்று காரணம் சரி
- உறுதிக்கூற்று சரி காரணம் சரியன்று
- உறுதிக்கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
-
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு.
- பெய்ஜிங் நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்✓
- தேசிய நூலகம் – கொல்கத்தா
- கன்னிமரா நூலகம்
-
சொல்லைப்பிலே வாழைது, பலா, மாங்களின் குழங்கும். இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?
- எது குழங்கும்?
- எதைகள் குழங்கும்?
- சொல்லைப்பிலே குழங்குவன யாவை?✓
- எதுவும் குழங்கவில்லை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →