Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 10 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
- சேர நாடு
- சோழ நாடு✓
- பாண்டிய நாடு
- கலிங்க நாடு
-
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
- ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது✓
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது
- ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது
-
உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை- வேகம்
- வளம்
- மதில்✓
- மேகம்
-
திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் 'திருவிளையாடல் புராணம்'
II. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன- I மற்றும் III சரியானவை
- II மற்றும் III சரியானவை✓
- III மற்றும் IV சரியானவை
- I மற்றும் IV சரியானவை
-
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
- மு.சி. பூர்ணலிங்கம்
- சி.வை. தாமோதரனார்✓
- மறைமலையடிகள்
- திரு.வி. கலியாண சுந்தரனார்
-
விடை தேர்க :
பொருளை வைவரப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல நில்லை பொருள்.
– இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி- சொற்பொருள் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- உவமையணி
- சொற் பின்வருநிலையணி✓
-
டூப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
- வீரராகவர்
- ஆனந்த ரங்கர்✓
- பரஞ்சோதி முனிவர்
- தருமி
-
கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைனிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குணமில்லாதவன் எனப் புகழ்ந்தவர்
- கோசலை✓
- கைகேயி
- மந்தரை
- லசிஷ்டர்
-
செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
- செய்தீர்
- செய்வாய்
- செய்தவன்✓
- செய்தான்
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) மூன்று காலங்களில் ஒன்றை உணர்த்துவது 1. பெயரெச்சம் (b) முக்காலத்தையும் உணர்த்துவது 2. வினைமுற்று (c) படித்தல், கற்பித்தல், எழுதுதல் 3. வினையெச்சம் (d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது 4. தொழிற்பெயர் பட்டியல் இரண்டு
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
அகர வரிசைப் படி அமைந்துள்ளனவைக் கண்டறிக
- செப்பு, சென்னை, செல்வம், செடி
- செடி, செப்பு, செல்வம், சென்னை✓
- செப்பு, செல்வம், சென்னை, செடி
- செடி, செல்வம், செப்பு, சென்னை
-
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
- தன்வினை வாக்கியம்
- செய்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்✓
- செயப்பாட்டுவினை வாக்கியம்
-
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்- இளங்கோவடிகள்
- சீத்தலை சாத்தனார்
- கம்பர்✓
- வால்மீகி
-
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
- சார்பு
- மருந்து
- கஃசு
- பசு✓
-
சரியிப்பிடைபுறந்த தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலை பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதியில மலைப் பயிர்களும் நில பகுதிகளின் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.✓
-
பொருத்துக.
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை (b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை (c) கலிப்பா 3. செப்பல் ஓசை (d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
காலங்களில் தெருவில் மழை வைக்காதீர் காலை – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக
- மழைக்காலங்களில் வைக்காதீர் காலை தெருவில்
- தெருவில் வைக்காதீர் காலை மழைக்காலங்களில்
- மழைக்காலங்களில் தெருவில் காலை வைக்காதீர்✓
- வைக்காதீர் காலை காலங்களில் மழைபூ தெருவில்
-
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
- உமறுப்புலவர்
- கம்பர்✓
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
-
வரலாற்றியலில் 'Whitehall' – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
- வெள்ளை மாளிகை – அமெரிக்கா
- ரஷ்ய – மாளிகை
- வாடிகன் – மாளிகை
- பிரிட்டானிய அரசு அலுவலகம்✓
-
''அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு''.
– எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.- அன்பு - குழந்தை, அருள் - தாய், பொருள் – வளர்ப்புத்தாய்
- அன்பு - தாய், அருள் – குழந்தை, பொருள் – வளர்ப்புத்தாய்✓
- அன்பு - வளர்ப்புத்தாய், அருள் – குழந்தை, பொருள் - தாய்
- அன்பு - தாய், அருள் – வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
-
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்று(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர், தண்ணீர் (b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் 2. இசைநூல் (c) கோமல் சுவாமிநாதன் 3. கருணாமிர்த சாகரம் (d) முதுநாரை 4. மானவிஜயம் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல்(a) பெருமாள் திருமொழி 1. காரைக்கால் அம்மையார் (b) திருத்தொண்டத் தொகை 2. ஆண்டாள் (c) அற்புதத் திருவந்தாதி 3. சுந்தரர் (d) நாச்சியார் திருமொழி 4. குலசேகர ஆழ்வார் நூலாசிரியர்
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
திறம்போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?
- வினை உவமை
- பயன் உவமை
- வடிவ உவமை
- ஒரு உலகம✓
-
வெண்பா-வுக்குரிய ஓசை
- துள்ளல்
- தூங்கல்
- அகவல்
- செப்பல்✓
-
சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
- பள்ளு
- தூது✓
- குறவஞ்சி
- கலம்பகம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →