Tamilதமிழ்
Tamil GK — 70 previous-year questions — page 1 of 3
Every Tamil GK question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 70questionsவினாக்கள்
-
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
- (a) யுனெஸ்கோ விருது - 1. 21,400
- (b) அஞ்சல் தலை - 2. 10,700
- (c) பங்கேற்ற கூட்டங்கள் - 3. 1970
- (d) உரையாற்றிய மணிநேரம் - 4. 1978
- 4 3 1 2
- 3 4 2 1✓
- 2 3 4 1
- 1 3 4 2
-
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
- திலகவதி
- தில்லையாடி வள்ளியம்மை✓
- ஜான்சிராணி
- நாகம்மை
-
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
- தினத்தந்தி
- காஞ்சி✓
- முரசொலி
- தினமணி
-
பொருத்தமானதைக் கண்டெடுக்க
- இரானி மங்கம்மாள் கணவன்– சொக்கநாத நாயக்கர்
- இரானி மங்கம்மாள் மகன்– முத்து வீரப்பன்✓
- இரானி மங்கம்மாள் மருமகன்– கமலாம்மிகை
- இரானி மங்கம்மாள் பெயரன்– விஜயரங்கச் சொக்கநாதன்
-
கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
- [A] சரி [R] தவறு✓
- [A] மற்றும் [R] இரண்டும் சரி
- [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- [A] தவறு [R] சரி
-
பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
- ஆழ்வார்கள்
- சித்தர்கள்✓
- நாயன்மார்கள்
- புலவர்கள்
-
"தஞ்சாவூர்பட்டனையாள்பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்திச் சாற்படி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்யுவர் யார்".
- அன்னாதுரை
- இராஜாஜி
- பக்தவச்சலம்
- காமராஜர்✓
-
ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
- கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
- கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை✓
- கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
- கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
-
மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
- கீழ்க்காய்நெல்லி
- கீழாநெல்லி
- கீழ்வாய்நெல்லி
- இவை மூன்றும்✓
-
தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.
- ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
- இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்✓
- உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
- கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
-
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" – எனக் கூறியவர்
- இராணி மங்கம்மாள்✓
- அஞ்சலையம்மாள்
- வள்ளியம்மை
- வேலுநாச்சியார்
-
நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது
- தஞ்சை பெரிய கோயில்
- இராமேசுவரம் பெருங்கோயில்✓
- திருச்சி திருவாரங்கக் கோயில்
- காஞ்சி பெரிய கோயில்
-
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
- சாரதா அம்மாள்
- மூவலூர் இராமாமிர்தம்✓
- முத்துலெட்சுமி
- பண்டித ரமாபாய்
-
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
- ஆட்டையாம்பட்டி✓
- வேப்பனேரி
- புளியம்பட்டி
- புளியங்குடி
-
டூப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினில் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?
- வீரராகவர்
- ஆனந்த ரங்கர்✓
- பரஞ்சோதி முனிவர்
- தருமி
-
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
- கலீலியோ✓
- நிகோலஸ்கிராப்ஸ்
- சி.வி. இராமன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
-
திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது
- நாற்பது அடி உயரத்தில்
- அறுபது அடி உயரத்தில்
- ஆறு அடி உயரத்தில்
- நான்கு அடி உயரத்தில்✓
-
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- கன்னிமாரா நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்✓
-
இந்தியாவில் மட்டுமல்லாமல் ————, ———— ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.
- சிங்கப்பூர், மலேசியா
- சிங்கப்பூர், மொரிசியசு✓
- சிங்கப்பூர், இலங்கை
- சிங்கப்பூர், பினாங்கு
-
முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
- குதிரை✓
- நாய்
- பூனை
- மான்
-
ரோமானியர்க்கும், தமிழர்க்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
- அரிக்கமேடு✓
- பல்லாவரம்
- ஆதிச்சநல்லூர்
- அழகன்குளம்
-
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
- கரைவெட்டி
- கோவன்புத்தூர்✓
- வெள்ளோடு
- சித்திரங்குடி
-
பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள்(a) துளசி 1. இளைப்பு இருமல் போக்கும் (b) தூதுவளை 2. மார்புச் சளி நீங்கும் (c) கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும் (d) சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும் பயன்கள்
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
கோடிட்ட இடத்தை நிரப்புக.
யவனர் என்ற அழைக்கப்பட்டவர் ___________.- உரோமானியர், எகிப்தியர்
- கிரேக்கர், உரோமானியர்✓
- கிரேக்கர், சீனர்
- சீனர், எகிப்தியர்
-
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
- அன்னி பெசன்ட்
- பண்டித ரமாபாய்
- சாலிந்திரிபாப் பூலே
- டாக்டர். முத்துலெட்சுமி✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →