Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 1 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
- கூழை எதுகை
- மேற்கதுவாய் எதுகை✓
- கீழ்க்கதுவாய் எதுகை
- பொழிப்பு எதுகை
-
பொருத்துக.
(a) பொருட்பெயர் 1. மாலை, இரவு (b) இடப்பெயர் 2. முகம், கை (c) காலப்பெயர் 3. நாற்காலி, புத்தகம் (d) சினைப்பெயர் 4. வேலூர், நாமக்கல் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.
- (I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
- (II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
- (III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்
- (I) சரி (II) சரி (III) தவறு
- (I) சரி (II) தவறு (III) சரி✓
- (I) சரி (II) தவறு (III) தவறு
- (I) தவறு (II) சரி (III) சரி
-
பிறவினை வாக்கியத்தை கண்டறிக :
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
- அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்
- அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்✓
- ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
-
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்
- பகுதி, சந்தி
- இடைநிலை, சாரியை
- பகுதி, விகுதி✓
- விகுதி, சாரியை
-
சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.- கடலலையின் மிக வேகம் அதிகமாகவுள்ளது இன்று
- அதிகமாகவுள்ளது வேகம் கடலலையின் இன்று மிக
- இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது✓
- மிக இன்று வேகம் கடலலையின் அதிகமாகவுள்ளது
-
கீழ்க்காணும் 'வல்லினம் மிகும் இடம்'
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.- அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
- ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
- உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்✓
- சால, தல என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
-
பின்வரும் தொடரைக் கண்டறிக.
'பூங்குழலி யாழ் மீட்டினாள்'- எதிர்மறைத் தொடர்
- செய்வினைத் தொடர்✓
- செயப்பாட்டு வினைத் தொடர்
- விழைவுத் தொடர்
-
'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
- கீழ்க்கதுவாய்✓
- இணை
- கூழை
- மேற்கதுவாய்
-
சேர்த்து எழுதுக.
பலா + அருமை- பலாஅருமை
- பலஅருமை
- பலாவருமை✓
- பலாப்பழம் அருமை
-
உறுதிக் கூற்று : ஆ, ஒ, எ, ஏ, யா ஆகிய எழுத்துக்கள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும்.
காரணம் : ஏெனெனில் இவை வினாச்சொற்கள்.- உறுதிக்கூற்று சரி காரணம் சரி✓
- உறுதிக்கூற்று சரியன்று காரணம் சரி
- உறுதிக்கூற்று சரி காரணம் சரியன்று
- உறுதிக்கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
-
சொல்லைப்பிலே வாழைது, பலா, மாங்களின் குழங்கும். இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?
- எது குழங்கும்?
- எதைகள் குழங்கும்?
- சொல்லைப்பிலே குழங்குவன யாவை?✓
- எதுவும் குழங்கவில்லை
-
கீழ்க்காணும் உயிரெழுஎகளுள் பொருந்தா உயிரெமெழுடைத் தொடரைச் சுட்டுக
- கேடுபடினும் கேட்டார்க்கு✓
- உழூஉள் உழவர்
- படாஉ தலா
- தூஉ மழை
-
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
- ஐந்து கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர்
- நாலு லிட்டர் – முகத்தல் அளவை ஆகுபெயர்
- மூன்று மீட்டர் – நீட்டல் அளவை ஆகுபெயர்
- இந்தியா வென்றது – உலகமயமாகுபெயர்✓
-
கூற்று : ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
- கூற்று – சரி; காரணம் – தவறு✓
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு
-
அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
- குணப் பெயர்
- இடப் பெயர்
- காலப் பெயர்✓
- தொழில் பெயர்
-
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
- மிகும்✓
- மிகாது
- சில இடங்களில் வரும்
- சில இடங்களில் வராது
-
பிரித்து எழுதுக :
"வேண்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.- வேண்மா + மை
- வேண் + அன்மை
- வேண் + நன்மை
- வேள் + நன்மை✓
-
'தீ' என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருள் தேர்வு செய்க
- அறிவு
- இனிமை
- தீமை
- வலிமை✓
-
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
- கலம் + அகம்
- கலம் + பகம்✓
- கலம்பு + அகம்
- கல் + அம்பகம்
-
வழங்கித்தலைக்குரிய சீர் அமைப்பு
- தேமா புளிமாங்காய்
- தேமாங்களி புளிமாங்காய்✓
- கருவிளம் கூவிளங்காய்
- கூவிளங்காய் தேமாங்களி
-
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
- அழுகை
- தொல்லை✓
- போக்கு
- தொழுகை
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.- எத்தனை மாடுகள் மேய்ந்தன?✓
- எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
- மாடுகள் மேய்ந்தனவா?
- ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
-
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
- மோனை
- எதுகை
- இசைவு✓
- இயைபு
-
பிறவினைச் சொற்களைக் கண்டறிக.
- நனைந்தான், படித்தான்
- திருத்தினான், நனைந்தான்
- வருவித்தான், திருத்தினான்✓
- படித்தான், வருவித்தான்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →