Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 2 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
- (a) காலப்பெயர் — செம்மை
- (b) சினைப்பெயர் — கண்
- (c) பண்புப்பெயர் — ஆண்டு
- (d) தொழிற்பெயர் — ஆடுதல்
- (a), (c)✓
- (a), (b)
- (c), (d)
- (a), (d)
-
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
– இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ———- இணை மோனை
- ஒருஉ மோனை
- பொழிப்பு மோனை✓
- கூழை மோனை
-
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'நான் திடலில் ஓடினேன்'- கட்டளை வாக்கியம்
- செய்வினை
- தன்வினை✓
- வினையெச்ச வாக்கியம்
-
எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?- செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது✓
- செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது
- தன்வினை பிறவினையாக மாறும்போது
- பிறவினை தன்வினையாக மாறும்போது
-
வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கம் கோடு :
- கொடுத்தல்
- கொடுத்த
- கொடுத்து
- கொடுத்தவன்✓
-
இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர் ————
- உவமை அணி
- சிலேடை அணி✓
- உருவக அணி
- தற்குறிப்பேற்ற அணி
-
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?- நன்றிக்கு விந்தரவது எது?
- என்றும் இடும்பை தருவது எது?✓
- தீயொழுக்கம் தருவது யாது?
- இடும்பை என்பதன் பொருள் யாது?
-
இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.
- ஆய்பத் தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- நெடில் தொடர்க் குற்றியலுகரம்✓
-
பொருத்துக :
(a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி (b) இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை (c) காரணப் பொதுப் பெயர் 3. காடு (d) காரணச் சிறப்புப் பெயர் 4. பனை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
தளையின் வகையறிக :
காய்முன் நிரை வருவது
– எத்தளை வகையின்பாற்படும் என்று கண்டறிக.- வெண்சீர் வெண்டளை
- ஒன்றிய வஞ்சித்தளை
- ஒன்றாத வஞ்சித்தளை
- கலித்தளை✓
-
மல்லிகை சூடினாள் என்பது
- பண்பாகு பெயர்
- தொழிலாகு பெயர்
- பொருளாகு பெயர்✓
- காலவாகு பெயர்
-
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்தொடராக்குதல்
- சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு✓
- இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
- சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
-
தன்மனல் – இலக்கணக் குறிப்பு தருக.
- பண்புப்பெயர்
- பண்புத்தொகை✓
- வினைத்தொகை
- வினைச்சொல்
-
பொருந்தாததை எடுத்து எழுதுக.
- அரசன் வந்தது – திணை வழு
- கபிலன் பேசினாள் – பால் வழு
- குயில்கள் கூவியது – எண் வழு
- கமலா சிரித்தாய் – கால வழு✓
-
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
- நான்காம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- முதல் வேற்றுமை✓
- ஆறாம் வேற்றுமை
-
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர் (b) பள்ளி 2. பண்புப்பெயர் (c) கிளை 3. இடப்பெயர் (d) இனிமை 4. பொருள்பெயர் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
'இனிய நண்ப' – இலக்கணக் குறிப்பு தருக
- குறிப்புப் பெயரெச்சம்✓
- தெரிநிலை பெயரெச்சம்
- எதிர்மறைப் பெயரெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
-
'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
- வந்தாள்✓
- வந்த
- வந்து
- வந்தவர்
-
பொருந்தா இணையைக் கண்டறிக :
- வெண்டமிழ் – பண்புத்தொகை
- இரைதேர்தல் – வினைத்தொகை✓
- நாழிகைவாரம் – உம்மைத் தொகை
- கயிலாய வெர்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
-
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
– இதில் அமைந்து வரும் மோனை.- இணை மோனை
- பொழிப்பு மோனை✓
- ஒரூஉ மோனை
- கூழை மோனை
-
பிரித்து எழுதுக.
"கங்கௌகம்" – என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.- கங் + கௌகம்
- கங்கு + ஓகம்
- கங்க + ஓகம்
- கங்கா + ஓகம்✓
-
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின்படி எவ்வாறு பிரியும்?
- ஆற்று + ஈர்
- ஆறு + ஈர்
- ஆ + இற்று + ஈர்
- ஆற்று + ஆ + ஈர்✓
-
'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
- படிக்கிறேன்
- படிதேன்
- படிப்போம்
- படிப்பேன்✓
-
வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை
ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனம் சொல்வேன்!
– எவ்வகை வாக்கியம்- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- வியப்பு வாக்கியம்✓
- கட்டளை வாக்கியம்
-
'அரியவற்றுள்' – இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
- நிரை நேர் நேர்
- நிரை நிரை நேர்✓
- நிரை நேர் நிரை
- நேர் நேர் நிரை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →