Tamilதமிழ்
Tamil GK — 70 previous-year questions — page 2 of 3
Every Tamil GK question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 70questionsவினாக்கள்
-
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்
- திருநெல்வேலி
- தஞ்சை
- திருச்சி
- மதுரை✓
-
புவியியல் மற்றும் சுரங்க ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறை சார்ந்ததென்று கண்டறிக?
- இயற்கை வளங்கள் துறை✓
- உயிர்கல்வித் துறை
- சுற்றுச்சூழல் துறை
- வளத்துறை
-
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
- ஆகஸ்டு ஒன்பதாம் நாள்✓
- ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
- ஆகஸ்டு ஒன்றாம் நாள்
- டிசம்பர் பதினைந்தாம் நாள்
-
தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
- வாணிதாசன்
- உவமைக் கவிஞர் சுரதா✓
- மு. மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
-
மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
- மூவகை
- இவகை✓
- நான்கு
- ஏழு
-
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
- போட்டி✓
- பொழுதுபோக்கு
- உடற்பயிற்சி
- உற்சாகம்
-
பொருத்துக :
(a) அலெக்சாண்டர் பெயின் 1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல் (b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம் (c) ஜான் – ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம் (d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?
- மு. வரதராசனார்
- பாரதியார்
- காமராசர்✓
- அண்ணா
-
கூற்று 1 : மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2 : அக்கூட்டத்தில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி. முழங்கினார்- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி✓
- கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- இரு கூற்றுகளும் தவறு
-
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
- நாடகக்கலை
- நாட்டியக்கலை
- இசைக்கலை✓
- ஓவியக்கலை
-
'தேவலுத்துப்' எந்த ஆட்டத்தற்குரிய இசைக் கருவி?
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்✓
- காவடியாட்டம்
-
‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
- மராட்டிய மாநிலம்✓
- குஜராத் மாநிலம்
- தமிழ்நாடு
- கர்நாடகம்
-
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
- ஓவிய எழினி
- சிற்பக்கலை
- மெய்க்கீர்த்தி✓
- பைஞ்சுதை
-
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
- பிள்ளையார்பட்டி✓
- கழுகு மலை
- திருப்பரங்குன்றம்
- ஆனைமலை
-
இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
- உ.வே. சாமிநாத அய்யர்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- சீர்காழி சீ. இரா. அரங்கநாதன்✓
- தஞ்சை வர்ணன்
-
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
- அம்பேத்கர்✓
- இராஜாஜி
- அண்ணா
- காமராசர்
-
'போரை ஒழிமின்' - என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
- நெடுங்கிள்ளி✓
- நலங்கிள்ளி
- அதியமான்
- சேரமான் நெடுமான் அஞ்சி
-
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
- கோலாமி
- பர்ஜி
- கொண்டா
- கண்ணெழுத்துகள்✓
-
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்னும் ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்
- நாயக்கர்கள்✓
- மராட்டியர்கள்
-
'செப்பு திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
- சோழர் காலம்✓
- சேரர் காலம்
- பாண்டியர் காலம்
- நாயக்கர்கள் காலம்
-
கோடிட்ட இடங்களை நிரப்புக.
சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ––––––––.- தூதுவளை✓
- துளசி
- அகத்திக்கீரை
- கீழாநெல்லி
-
நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை
- பாலசரஸ்வதி
- வைஜெயந்திமாலா
- தஞ்சை கிட்டப்பா
- நர்த்தகி நடராஜ்✓
-
"வட்ட மேசை மாநாடு நடந்த ஆண்டு"
- 1915
- 1917
- 1930✓
- 1932
-
'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
- அம்புஜத்தம்மாள்✓
- தில்லையாடி வள்ளியம்மை
- அஞ்சலையம்மாள்
- வேலு நாச்சியார்
-
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
- கி.பி. 1730✓
- கி.பி. 1880
- கி.பி. 1865
- கி.பி. 1800
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →