Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 14 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 14 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- நாளும் இரண்டும் சொல்லுமக்குருதி
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி
- நானும் கிழமைஎய்ர் தலித்தோளர்க்கில்லை✓
-
"என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.- பவளம்
- முத்து
- மாணிக்கம்✓
- மரகதம்
-
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
- சாவி
- பொத்தான்
- சோப்பு
- பிண்டம்✓
-
'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்✓
- அழ. வள்ளியப்பா
- பாரதிதாசன்
- பாரதியார்
-
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்
- திலகவதி
- நீலாம்பிகை
- சிவகாமி
- புனிதவதி✓
-
ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?
- 10
- 12✓
- 14
- 16
-
‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
- தண் + அளிர் + பதம்
- தன்மை + தளிர் + பதம்
- தண்மை + தளிர் + பதம்✓
- தண்டளிர் + பதம்
-
'ஏலாதி' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், 'ஏலாதி'
II. 'ஏலாதி' நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன- II மற்றும் III
- III மற்றும் IV
- I மற்றும் III✓
- I மற்றும் IV
-
பிரித்து எழுதுக? வேறில்லை
- வே + இல்லை
- வேற்று + இல்லை
- வேறு + இல்லை✓
- வேற்றி + இல்லை
-
கண்ணதாசன் படைத்த நாடகம்
- மாங்கனி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- கல்லக்குடி மகா காவியம்
- இராசதண்டனை✓
-
பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- புறநானூறு
- நற்றிணை
- நாலடியார்✓
- பரிபாடல்
-
தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
- கதரின் வெற்றி✓
- தேசியக் கொடி
- தேச பக்தி
- தமிழ்தேசியம்
-
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
- சிவதொண்டர் புராணம்
- சிவனடியார் புராணம்
- திருத்தொண்டர் புராணம்✓
- தொண்டர்சீர் புராணம்
-
குன்றக்குடி அடிகளாரால் 'கவியரசு' என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
- வைரமுத்து
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- முடியரசன்✓
-
தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
- பாரதியார்
- தந்தை பெரியார்✓
- காந்தியார்
- அண்ணாதுரையார்
-
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
- வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
- தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது✓
- பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
- வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
-
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
- மரபியல்
- பொருளியல்
- மெய்ப்பாட்டியல்✓
- களவியல்
-
‘பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்
- கலித்தொகை
- பரிபாடல்
- அகநானூறு✓
- புறநானூறு
-
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்
- மறைமலையடிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- சுந்தரம் பிள்ளை
- திரு.வி.க
-
திருக்குறளுக்கும் ——————— என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.
- மூன்று
- எட்டு
- ஏழு✓
- ஐந்து
-
'செம்புலப் பெயல் நீர்போல' என்னும் அடி இடம்பெறும் நூல்
- நற்றிணை
- பரிபாடல்
- குறுந்தொகை✓
- பதிற்றுப்பத்து
-
குறவஞ்சி என்பது
- சங்க இலக்கியம்
- காப்பிய இலக்கியம்
- சிற்றிலக்கியம்✓
- உரைநடை இலக்கியம்
-
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
- தூது✓
- பள்ளு
- கலம்பகம்
- குறவஞ்சி
-
உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
- துக்காக்
- குரும்
- கல்கண்டு
- ஆனந்த விகடன்✓
-
'தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்' - எனக் கூறியவர்
- டாக்டர் கிரௌல்
- கால்டுவெல்✓
- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →