Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 30 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 30 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
"எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" – என்று கூறிய தமிழறிஞர்
- மறைமலையடிகள்
- தேவநேயப்பாவாணர்✓
- ம.பொ. சிவஞானம்
- பரிதிமாற்கலைஞர்
-
பிழையற்ற வாக்கியம் எது?
- ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
- ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
- ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்✓
- ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
-
ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- நேரிசை ஆசிரியப்பா✓
-
பொருத்தமற் சொல்லைைக் கண்டறிக
- மலையூர்
- காட்டூர்
- மணிப்பூர்✓
- மருதூர்
-
தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை 'பரிதிமாற்கலைஞர்' என மாற்றி அமைத்துக் கொண்டவர்
- மறைமலையடிகள்
- சூரியநாராயண சாஸ்திரி✓
- ரா. இராகவையங்கார்
- சிங்கார வேலு முதலியார்
-
தேவநேயப்பாவாணர் ‘கூட்டுக்கிளவியம்’ புணர் வாக்கியம் என்று எதனைக் கூறுகிறார் ?
- மாறுபட்ட நிலைகளை
- ஒரு எழுத்தாய் பல பணிவளைகளைக் கொண்டு முடிவதலை
- சொற்பொருள் கூறுவது
- ஒப்புமைப்படுத்துதலை✓
-
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
- ஓவிய எழினி
- சிற்பக்கலை
- மெய்க்கீர்த்தி✓
- பைஞ்சுதை
-
BLOGGER–பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.
- வலைபொளி
- வலைப்பதிவர்✓
- காணொளி படைப்பாளர்
- தள வலைமப்பாளர்
-
எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்✓
- கலித்தொகை
- ஐங்குறுநூறு
-
'திருவிருத்தம்' என்ற நூலின் ஆசிரியர்
- நம்மாழ்வார்✓
- திருப்பாணாழ்வார்
- மதுரகவியாழ்வார்
- பேயாழ்வார்
-
.......... .......... உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.- மடவம் × மடந்தை
- உரவோர் ஆயின் × உரவோர் ஆக
- உரவோர் × மடந்தை
- உரவோர் × மடவம்✓
-
இலக்கணம் குறிப்பு அறிதல்.(A) வேற்று, உலக்காறு – வினைகள்ச்சொல்கள். மேலும் மென்தொடர்.
(R) முற்று பெறாத வினைச்சொல் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். குறிப்புகரம் என்று அழைக்கப்படுகின்றன. மென்தொடர் இறந்த காலத்தை உணர்த்தும்.- (A) சரி, (R) தவறு
- (A) சரி, (R) – (A)க்கு சரியான விளக்க மன்று
- (A) தவறு (R) சரி
- (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (A)க்கு (R) சரியான விளக்கமல்ல✓
-
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
- வ. உ. சிதம்பரம்
- டி. கே. சிதம்பரம்✓
- சிதம்பர சுவாமி
- சிதம்பர நாதன்
-
கீழே காணப்படுபவைவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
- கம்பக இலக்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்
- காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட நந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்
- நந்தி கலம்பகத்தால் மான்ட கைகை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வேண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன
- 'அறம் பாடுதல்' என்பது போர்த்தார்க்குத் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனைச் கையாளப்பட்டது✓
-
குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
- மதுரைக் கலம்பகம்
- நந்திக் கலம்பகம்✓
- கந்தர் கலிவெண்பா
- நீதிநெறி விளக்கம்
-
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
- இங்கிலாந்து
- சிங்கப்பூர்
- உருசியா✓
- இந்தியா
-
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
- முதுமொழி மாலை
- செந்தமிழ் இலக்கணம்
- கொடுந்தமிழ் இலக்கணம்
- தொன்னூல் விளக்கம்✓
-
குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
- முப்பத்து மூன்று
- ஐம்பது
- ஐம்பத்தொன்று✓
- ஐம்பத்து மூன்று
-
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.
- தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் – கவிக்கோ✓
- மண்புழுவல்ல மானிடனே – பாரதி
- கன்று குரல் கேட்ட பசு – தாராபாரதி
- தண்ணீர் போல பணத்தை செலவு செய்தல் – ஆலந்தூரார்
-
தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?
- முதல் தலைமுறை✓
- இரண்டாம் தலைமுறை
- மூன்றாம் தலைமுறை
- நான்காம் தலைமுறை
-
“செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?- திருமந்திரம்
- ஏலாதி
- திருவள்ளுவமாலை✓
- தேவாரம்
-
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் ! – மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?- சிலம்பு
- கம்ப இராமாயணம்
- மணிமேகலை✓
- பெரிய புராணம்
-
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
- பிள்ளையார்பட்டி✓
- கழுகு மலை
- திருப்பரங்குன்றம்
- ஆனைமலை
-
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சட்டிக் காட்டுக
- பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
- பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிச பெற்றவர்
- பாரதிதாசன் பிரெஞ்ச மொழியில் புலமை பெற்றவர்
- பாரதிதாசன் பெண்ணடிமைத்தனைதைப் போற்றியவர்✓
-
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது- I, III, IV மட்டும் சரி
- I, II மட்டும் சரி
- I, II, III மட்டும் சரி
- அனைத்தும் சரி✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →