Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 29 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 29 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
- சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்
- தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்
- ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்✓
- பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை
-
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- தேவநேய பாவாணர்
- பரிதிமாற்கலைஞர்
- இளங்கோவடிகள்
-
பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான் (b) பால் 2. உண்டான் (c) பழம் 3. பருகினான் (d) நீர் 4. தின்றான் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
பிழை திருத்தம் செய்க.
- வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்✓
- வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
- வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
- வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
-
'தேவலுத்துப்' எந்த ஆட்டத்தற்குரிய இசைக் கருவி?
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்✓
- காவடியாட்டம்
-
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) டெலிகேட் 1. கருத்துரு (b) சாம்பியன் 2. மரபுத்தகவு (c) புரபோசல் 3. பேராளர் (d) புரோட்டோகால் 4. வாகைகுடி - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமானதைத் தேர்வு செய்க.
- கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
- கம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு ‘காண்டம்’ என்று பெயர்
- கம்பராமாயணத்தின் உட்பிரிவு ‘காதை’ என அழைக்கப்படுகிறது✓
- கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்
-
உயிரியியலில் "Abulomania" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான சொல்லைக் காண்க :
- படுகுழி
- மிகுதியான கட்டுப்பாடின்மை
- உண்ணிபோன்ற
- மனதோய்✓
-
"வை" என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
- வைத்த
- வைத்து
- வைத்தது
- வைத்தாள்✓
-
‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
- மராட்டிய மாநிலம்✓
- குஜராத் மாநிலம்
- தமிழ்நாடு
- கர்நாடகம்
-
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
- ஆவாரம், ஆதாரம், ஆசாரம், ஆகாரம்
- ஆகாரம், ஆதாரம், ஆவாரம், ஆசாரம்
- ஆசாரம், ஆவாரம், ஆதாரம், ஆகாரம்
- ஆகாரம், ஆசாரம், ஆதாரம், ஆவாரம்✓
-
யார் காப்பயர் என்று தமிழென்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுத்தர் ஒருவர். அவர் யார்?
- உ.வே. சாமிநாதர்✓
- மீனாட்சி சத்தனார்
- கம்பவாண சத்தனார்
- சத்தரம் பிள்ளை
-
தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்.
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோழுதும் காலம் காட்டு.
III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன.
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகா பெயர்ச்சொல் ஆகும்.- IV, III, I சரியானவை
- II, III, IV சரியானவை
- I, II, IV சரியானவை✓
- III, I, II சரியானவை
-
மங்கம்மாள் அன்னச்சத்திரம் கட்டிய இடம் எது?
- சென்னை
- மதுரை✓
- கோவை
- தஞ்சை
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமார் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்- பரிதிமார் கலைஞர் என்ன செய்தார்?
- பரிதிமார் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?✓
- பரிதிமார் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?
- பரிதிமார் கலைஞரின் தொண்டு யாது?
-
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
- காலடுவெல்
- பெஸ்கி
- ஜி.யு. போப்✓
- செல்லி
-
உதகை – என்ற மரூஉ. சொல்லின் நார்ப் பெயரைக் கண்டறிக.
- ஒரு கை மண்டலம்
- உதக மண்டலம்✓
- ஊழ்த்துக் கோட்டை
- மலைராடு
-
பொருந்தா இணையைத் தேர்க:
சொல் - பொருள்- மா - அழுகு
- மீ - உயர்ச்சி
- மூ - மூப்பு
- மை - மேம்பாடு✓
-
கூடைக முத்துப் புலவரின் மாணவர் யார்?
- அப்துல் காதர்
- உமறுப்புலவர்✓
- அகமது மரைக்காயர்
- ஆயுக்கர்
-
'இராசராச சோழனுலா' வைப் பாடியவர்
- ஒட்டக்கூத்தர்✓
- புகழேந்திப் புலவர்
- காளமேகப் புலவர்
- குமரகுருபரர்
-
பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
சொல்பட்டியல் I பட்டியல் II (a) தேதீர் 1. மூன்று நாள் (b) முந்நான் 2. தென்போலும் இனிய நீர் (c) தேனீர் 3. முற்தைய நாள் (d) முன்னாள் 4. தேயிலை நீர் பொருள்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
“Irrigation Technology” – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
- தகவல் தொழில்நுட்பம்
- சூழலியல் தொழில்நுட்பம்
- நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்✓
- வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
-
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க :
- பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
- நகை, அழுகை, உவகை, பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்
- தேர், யானை, குதிரை, காலாள் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடல்கள்
- நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, 'காவடிச் சிந்து' திகழ்கிறது✓
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
- கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
- கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
- கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை✓
- கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
-
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக :
(a) வலை 1. பொந்து (b) வளை 2. மீன்வகை (c) வாளை 3. மரவகை (d) வாழை 4. மீன்பிடி வலை - (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →