Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 45 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 45 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக :
(a) Nanotechnology 1. அறிவாளர் (b) Biotechnology 2. விண்வெளித் தொழில்நுட்பம் (c) Spacetechnology 3. உயிரித் தொழில்நுட்பம் (d) Intellectual 4. மீநுண் தொழில்நுட்பம் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
‘நான்மணிக்கடிகை’ என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
- நாயனார்
- நல்லந்துவனார்
- நாகனார்✓
- சேந்தனார்
-
விடைக்கேற்ற வினா அமைக்க.
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.- தல புராணங்கள் என்றால் என்ன?
- தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
- மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
- தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?✓
-
விடைக்கேற்ற வினா அமைத்தல்.
வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.- வணிக அறிவியல் என்றால் என்ன?
- எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?✓
- வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
- எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?
-
“உலகெலாம” என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?
- திருவிளையாடற் புராணம்
- திருவாசகம்
- திருத்தொண்டர் புராணம்✓
- திருமந்திரம்
-
பொருத்துக :
(a) எட்வர்டு மை பிரிட்ச் 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி (b) எடிசன் 2. இயக்கப்படம் (c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம் (d) பிரான்சிஸ் செங்கின்ஸ் 4. படசுருள் - (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
- அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
- அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
- அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது✓
- அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
-
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
- காம்ப்வெல்
- தேவநேயப் பாவாணர்✓
- ம.பொ.சி
- உ.வே.சா
-
பொருத்துக :
(a) விசுப்பு 1. தத்தம் (b) துலை 2. நெடுப்பு (c) கலம் 3. யானை (d) கலிறு 4. வானம் (e) மருப்பு 5. துலாக்கோல் - (a)-4 (b)-5 (c)-2 (d)-3 (e)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4 (e)-5
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1 (e)-5
- (a)-2 (b)-1 (c)-5 (d)-4 (e)-3
-
பொருந்தாத இணை எது?
- மேற்கு மலையில் இருந்து வந்தவை — சந்தனம், ஆரம்
- கீழ்க்கடலில் விளைந்தவை — பவளம்
- வடமலையில் இருந்து வந்தது — கறி (மிளகு)✓
- தென்கடலில் இருந்து கிடைத்தவை — முத்து
-
வழுஉச் சொல்லற்ற தொடர் எது?
- வலது பக்கம் கவறில் எழுதாதே
- வலப்பக்கச் கவறில் எழுதாதே✓
- வலப்பக்கச் கவற்றில் எழுதாதே
- வலதுபக்கச் கவற்றில் எழுதாதே
-
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
'பண்புப் பெயர்'- திட்டம்✓
- ஆட்டம்
- கோடல்
- பெறுதல்
-
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?- நிரல்நிறைப் பொருள்கோள்✓
- ஆற்றுநீர் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
-
பிழையான தொடரைக் கண்டறிக.
- காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
- மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
- காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது✓
- நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
-
பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
"தூற்றின் கண் தூவிய வித்து"- பழமொழி நானூறு
- மூதுரை
- நாலடியார்
- திரிகடுகம்✓
-
இளமையாக இருக்க உதவும் மலை எது?
- அகஅடைப் பயிற்சி
- புறஅடைப்பயிற்சி
- மருத்துவம்
- கவலி✓
-
"மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்" - எனப்பாடியவர்
- அரிசில் கிழார்
- மோசிகீரனார்✓
- ஓளவையார்
- பரணர்
-
கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் கட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ, யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
- கூற்று சரி; காரணம் தவறு
- கூற்று சரி; காரணம் சரி
- கூற்று தவறு; காரணம் சரி
- கூற்று தவறு; காரணம் தவறு✓
-
Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
- உண்மை உரு
- பொய் உரு
- கருத்துரு✓
- எண்ண உரு
-
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
- மூன்றாம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை✓
-
பல கற்றும் கல்லாதவராக கருதப்படுபவர் யார்?
- அறிவுள்ளவர்
- அறிவில்லாதார்
- கற்காதவர்
- உயர்ந்தாரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்✓
-
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
- உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
- உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்✓
- உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
-
பின்வரும் தொடரில் உள்ள பிழைகளை திருத்தி எழுதுக.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்ல✓
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் இல்லை
-
ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
- 1. சுக்கு
- 2. திப்பிலி
- 3. கண்டங்கத்திரி
- 4. சிறுநாவற்பூ
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்✓
- (4) மட்டும்
-
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Visual Scanner- காட்சிப் பக்கம்
- படப்பிடிப்பு
- கட்புலமேவி✓
- காட்சி உணர்தல்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →