Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 53 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 53 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
பொருத்துக :
(a) தாங்குறுதம் 1. ஒரு பொருட் பன்மொழி (b) வல்லிகரந்து 2. இன்னிசையளபெடை (c) ஓரிஇ 3. உரிச்சொற்றொடர் (d) மல்லல் மதுரை 4. சொல்லிசையளபெடை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?- செய் வினை✓
- செயப்பாட்டு வினை
- தன் வினை
- பிற வினை
-
பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு
- தே – சோலை
- வீ – கடவுள்
- வை – வைக்கோல்✓
- கா – மலர்
-
நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?
- கூத்துக் கலை✓
- நாட்டியக் கலை
- பரதக் கலை
- சிற்பக் கலை
-
பொருத்துக:
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார் (b) கைந்நிலை 2. பொய்கையார் (c) கார் நாற்பது 3. புல்லங்காடனார் (d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு :
செரு செறு- சண்டை – வயல்✓
- போர் – சிறிய
- போர்க்களம் – குளம்
- கோபப்படு – போரிடு
-
'புரட்சி முழக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- மறைமலையடிகள்
- தேவநேயப்பாவாணர்
- சாலை இளந்திரையன்✓
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
- தேவநேயப்பாவாணர் – தமிழர் திருமணம்
- திரு.வி.க. – சைவத்திறவு
- பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை✓
-
பைந்நினம் – பிரித்தெழுதுக
- பை + நினம்
- பை + இனம்
- பசுமை + நினம்✓
- பசுமை + இனம்
-
கவித்தொலையைத் தொகுத்தவர்
- உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
- நல்வந்துவனார்✓
- நன்னன் சேய் நன்னன்
-
'சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' – என்று கூறியவர்
- அண்ணா✓
- காந்தி
- அம்பேத்கர்
- மு. வரதராசனார்
-
பொருத்துக : பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் 1. இருள் (b) இந்து 2. புன்னகை (c) முறுவல் 3. கண்கள் (d) அல் 4. நிலவு - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
- துறைமுகம்
- சுவரும் சுண்ணாம்பும்
- தேன்மழை✓
- சுரதாவின் கவிதைகள்
-
கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
- மதுரை சொக்கநாதாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள்
- இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டிண மூத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்
- இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
- பட்டயப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பழமுவம்✓
-
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
- பாரதம் பாடிய பெருந்தேவனார்✓
- பெருங்குன்றூர்க் கிழார்
- பொருந்தில் இளங்கீரனார்
- காக்கைப் பாடினியார்
-
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலையை" அமைத்தவர்
- தேவநேயப்பாவாணர்
- இரா. இளங்குமரனார்✓
- ம.பொ. சிவஞானம்
- காயிதே மில்லத்
-
பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- முறுக்கு உண்டார்✓
- தண்ணீர் குடித்தார்
-
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்✓
- சோழர்கள்
- நாயக்கர்கள்
-
பெறு – இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
- பெற்றான்✓
- பெற்றவன்
- பெற்று
- பெற்றவர்
-
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
- செந்தமிழ் ஞாயிறு
- செந்தமிழ்ச் செல்வர்
- இலக்கியச் செம்மல்✓
- தமிழ்ப்பெருங்காவலர்
-
தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் —————
- தந்து
- தந்த
- தந்தது
- தந்தவர்✓
-
போற்று, அரசினர் இயலகனிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான தேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவைதிரிந்தது தயங்கமேல்லாமல் விடைபன் அனுப்புவதைத் கவனிப்பதற்கு இது ஏற்படட்டது. இது இணைப்பு 'ஆ' – XVI என படியெடுத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை தோர்முக உதவியாளர் வைத்துவருவார், கடினுடைய இதன கடிதங்களையும் இதத்தைப் கடிதக் குறிப்புகளுக்கும் தினையெடுத்தும் விடை செலவைத அவ்வா தோர்முகமாகக் கவனித்து வருவார். மாயைடட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அறைப்பந் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்பட்ட வேண்டும்.- வருகைப் பதிவேடு
- தாபத வருகைப் பதிவேடு
- கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு✓
- சத்த நகல் பதிவேடு
-
'பெரிய புராணம்' எழுதிடத் துணை நின்ற நூல் எது?
- திருத்தொண்டத் தொகை✓
- திருவாசகம்
- தேவாரம்
- திருவெம்பாவை
-
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர்
- கி.வா.ஜ.
- கி.ஆ.பெ.வி.✓
- திரு.வி.க.
- உ.வே.சா.
-
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
- சுரதா✓
- மு. மேத்தா
- தாரா பாரதி
- அப்துல் ரகுமான்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →