Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 27 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 27 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
'அம்மானை' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர்
III. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்' ஆகும்
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்- I மற்றும் III
- II மற்றும் I✓
- III மற்றும் IV
- IV மற்றும் I
-
'பாரதியாரின் கடிதங்கள்' எனும் நூலைப் பதிப்பித்தவர் யார்?
- பரலி. சு. நெல்லையப்பர்
- பாரதிதாசன்
- ரா.அ. பத்மநாபன்✓
- சுத்தானந்த பாரதியார்
-
மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
- லாச. ராமாமிருதம்
- சி. சு. செல்லப்பா
- ந. பிச்சமூர்த்தி✓
- தி. ஜானகிராமன்
-
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக :
(a) நிகழ்காலப் பெயரெச்சம் 1. இல்லாத பொருள் (b) உடன்பாட்டுப் பெயரெச்சம் 2. அறிந்த பையன் (c) குறிப்புப் பெயரெச்சம் 3. ஓடுகிற குதிரை (d) ஈறுகெடாத பெயரெச்சம் 4. அறியாத குழந்தை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
- 1. தமிழ் எழுத்தாளர்
- 2. திறனாய்வாளர்
- 3. வழக்கறிஞர்
- 4. பேராசிரியர்
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்
- (4) மட்டும்✓
-
இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர்
- பாரதிதாசன்
- பாரதியார்✓
- திரு.வி.க.
- முடியரசன்
-
உறுதிக் கூற்று : சுட்டெழுத்துகளை இடைக்கட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் : அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகிறது.- உறுதிக்கூற்று சரி காரணம் தவறு
- இரண்டும் தவறு
- உறுதிக்கூற்று தவறு காரணம் சரி
- இரண்டும் சரி✓
-
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ——————— நூலாகும்.
- இரட்டைமணிமாலை
- மும்மணிக்கோவை
- தெய்வமணிமாலை✓
- மனுமுறைகண்டவாசகம்
-
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
- பொய்கையாழ்வார்
- நம்மாழ்வார்✓
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
-
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைழுத் தெரிவு செய்க
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தேசபக்தன்✓
- தமிழ் திலம்
-
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை – தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக :
(a) போர்ச்சுக்கீசிய மொழி 1. 34 (b) தெலுங்கு மொழி 2. 486 (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி 3. 06 (d) ஆங்கில மொழி 4. 411 - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்– யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- சரதா
- கவிமணி
-
சரியான தொடரைத் தேர்வு செய்க.
- மாடுகள் மேய்ந்தது
- பறவைகள் பறந்தது
- மரம் வளர்ந்தன
- செடி கொடிகள் காற்றில் அசைந்தன✓
-
பொருத்துக :
(a) அலெக்சாண்டர் பெயின் 1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல் (b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம் (c) ஜான் – ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம் (d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?- மேற்கதுவாய் மோனை✓
- கீழ்க்கதுவாய் மோனை
- கூழை மோனை
- ஒரூஉ மோனை
-
பொருத்துக :
- (a) என்றல் 1. முற்றும்மை
- (b) நுந்தை 2. குறிப்பு வினைமுற்று
- (c) யாவையும் 3. மரூஉ
- (d) நன்று 4. தொழிற்பெயர்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
- பாரதியார்
- சுரதா
- பாரதிதாசன்✓
- வாணிதாசன்
-
பொருட்பாலின் இயல்கள்
- பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
- அரசியல், அங்கவியல், ஒழிபியல்✓
- களவியல், கற்பியல்
- பாயிரவியல், அரசியல், களவியல்
-
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன- மேற்கோள்குறிகள் வராது
- தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது✓
- அது, அவை - அங்கே என மாறும்
- காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
-
பிழை திருத்துக :
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் "ஓர்" பயன்படுத்த வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி✓
- காரணம், கூற்று – இரண்டும் சரி
- கூற்று, காரணம் – இரண்டும் தவறு
-
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
- நற்றிணை
- கலித்தொகை
- ஐங்குறுநூறு✓
- குறுந்தொகை
-
"பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்" – இவ்வடியில் பூவையும் என்பது ————— குறிக்கும்.
- மயில்கள்
- பெண்கள்
- நாகணவாய்ப் பறவைகள்✓
- மரங்கொத்திப் பறவைகள்
-
"ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி✓
- பழமொழி நானூறு
- இன்னா நாற்பது
-
விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையை கூறுவது.
III. பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடைய்து.- II, III சரி I தவறு
- I, II, III சரி✓
- I, II சரி III தவறு
- I, III சரி II தவறு
-
“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
- ரழ வரும்✓
- தந வரும்
- நன வரும்
- யத் தோன்றும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →