Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 19 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 19 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
– எனப் பாடியவர்.- பாரதிதாசன்✓
- பாரதியார்
- சுரதா
- கண்ணதாசன்
-
தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.
- வாணிதாசன்
- உவமைக் கவிஞர் சுரதா✓
- மு. மேத்தா
- ஈரோடு தமிழன்பன்
-
"அழகர் கோவிலில் தந்தச் சிற்பங்கள் இல்லாமல் இல்லை" - எவ்வகைத் தொடர்.
- அயற்கூற்றுத் தொடர்
- பொருள் மாறா எதிர்மறைத் தொடர்✓
- பிறவினைத் தொடர்
- செய்வினைத் தொடர்
-
"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?
- பாரதியார்
- அம்பேத்கார்
- பெரியார்✓
- அறிஞர் அண்ணா
-
'பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்' – என்ற பாடலை இயற்றியவர் யார்?- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா✓
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
-
'முதுமொழிக் காஞ்சி' என்ற நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
- நீதி நெறி கோவை✓
- அறம் பாடும் கோவை
- அறவுரைக் கோவை
- நல்வழிக் கோவை
-
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டுபடுத்துக.
- யாழ்கோடு அன்ன வொளால் கனைகொள்ளு வினைபயடு பாலால் செய்வழி ஆங்கு
- கணைகொள்ளு செய்வழி ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளால்
- செய்வழி ஆங்கு அன்ன கணைகொள்ளு யாழ்கோடு, வினைபடு பாலால் கொளால்
- கணைகொள்ளு யாழ்கோடு செய்வழி ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளால்✓
-
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
- நான் வாங்கிய நூல் இது அல்ல
- நான் வாங்கிய நூல்கள் இது அன்று
- நான் வாங்கிய நூல் இது அன்று✓
- நான் வாங்கிய நூல் இவை அல்ல
-
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக. வந்தான்
- வருவான்
- வந்திலன்✓
- வருகிறான்
- வருகின்றான்
-
'புனையா ஓவியம்' என்பதன் பொருள்
- வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
- பூக்களால் வரைவது
- மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
- கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது✓
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'- இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
- இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
- இரட்டிற் பிரிந்திசையாதது எது?✓
- இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
-
'கொக்கொக்க கூம்பும் பருவத்து' – இவ்வெவலையால் விளக்கப்படும் பொருள் யாது?
- கொக்கைப் போன்ற வெள்ளை உள்ளம்
- காய்வரிந்து விரைந்து செயல்படுதல்✓
- பொறுமையோடு இருந்தல்
- எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தல்
-
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
- அ
- ஊ
- ஐ
- ஏ✓
-
கடியத்த கடியதொராார் செய்தார்க்கு அவை தாம்
முடியதானலும் மீஇழி தரும்.
இணை மோனையைக் கண்டறிக.- கடியத்த – கடியதொராார்✓
- கடியத்த – முடியத்த
- கடியத்த – செய்தார்
- இணை மோனை இல்லை
-
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுதுக.
'Omniscient'- திடுக்கிட்ட நிலை
- குழப்ப நிலை
- எதுவும் அறியாத நிலை
- எல்லாம் அறிந்த நிலை✓
-
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?
- பாவியக்கொத்து, ஐயை, கொய்யாக்கனி
- மணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்✓
- தமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு
-
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
- வ. ரா✓
- உ. வே. சா
- கி. ஆ. பெ. வி
- லா. ச. ரா
-
'நவ்வி' – இச்சொல்லின் பொருளை எழுதுக.
- மான்✓
- நாய்
- புலி
- பசு
-
ஓடையில் யானையும் யானைக் ——————— ம் நின்றன.
- யானைக் கன்று✓
- யானைக் குட்டி
- யானைக் குருளை
- யானைப் பிள்ளை
-
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
- கா
- வீ✓
- பூ
- மா
-
'எல்வகைச் செய்தியும் உலவஙக் காட்டி' எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை
- சிற்பக்கலை
- கட்டடக்கலை
- செப்புப்படிமக்கலை
- ஓவியக்கலை✓
-
சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'- தொழிற்பெயர்
- இரண்டாம் வேற்றுமை
- பண்ணப் பண்புப்பெயர்✓
- ஆகுபெயர்
-
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
- சி.வை. தாமோதரம்
- வ. சுப. மாணிக்கம்
- தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்✓
- சீனி. வேங்கடசாமி
-
'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' – என்று கூறியவர் யார்?
- அண்ணல் அம்பேத்கர்
- முனைவர். எமினோ
- காந்தியடிகள்✓
- ஜி.யு. போப்
-
"இயற்படு பொருளால் கண்டது மற்று
முடிதோ ருண்டெனக் கேட்டது தெளிதல்"
– இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை✓
- கம்பராமாயணம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →