Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 3 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
சி.வை. தாமோதரனாரால் 'திராவிட சாஸ்திரி' என்று அழைக்கப்பட்டவர்
- உ.வே. சாமிநாதர்
- இராகவனார்
- பரிதிமாற்கலைஞர்✓
- பாகசுர சேதுபதி
-
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு✓
- அகநானூறு
- நற்றிணை
-
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel 1. மெய்யெழுத்து (b) Consonant 2. ஒரு மொழி (c) Homograph 3. உயிரெழுத்து (d) Monolingual 4. ஒப்பெழுத்து - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
- 120 பாக்கள்
- 204 பாக்கள்
- 80 பாக்கள்✓
- 67 பாக்கள்
-
கீழ்க்காணும் உயிரெழுஎகளுள் பொருந்தா உயிரெமெழுடைத் தொடரைச் சுட்டுக
- கேடுபடினும் கேட்டார்க்கு✓
- உழூஉள் உழவர்
- படாஉ தலா
- தூஉ மழை
-
பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
- ஐந்து கிலோ – எடுத்தல் அளவை ஆகுபெயர்
- நாலு லிட்டர் – முகத்தல் அளவை ஆகுபெயர்
- மூன்று மீட்டர் – நீட்டல் அளவை ஆகுபெயர்
- இந்தியா வென்றது – உலகமயமாகுபெயர்✓
-
தமிழகத்தின் முதல் அரசலைக் கவிஞராக விளங்கியவர்
- பாரதியார்
- லெ. இராமலிங்கனார்✓
- கண்ணதாசன்
- பாரிதாசன்
-
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
- நற்றிணை
- குறுந்தொகை✓
- அகநானூறு
- ஐங்குறுநூறு
-
எழுதப்படாத பாடல் ——————— எனப்படுகிறது
- நாட்டுப்புறப் பாடல்✓
- சங்கப்பாடல்
- புறப்பாடல்
- அகப்பாடல்
-
'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
- சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
- சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
- வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்✓
- வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
-
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
- திலகவதி
- தில்லையாடி வள்ளியம்மை✓
- ஜான்சிராணி
- நாகம்மை
-
பொருத்துக :
(a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார் (b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார் (c) பழமொழி நானூறு 3. காரியாசான் (d) சிறுபஞ்சமூலம் 4. மூன்றுறை அரையனார் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக :
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி (b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி (c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி (d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
'சின்னச்சீரா' என்ற நூலை எழுதியவர்
- பனு அகமது மரைக்காயர்✓
- உமறுப்புலவர்
- அப்துல் ரகுமான்
- சேக் மீரான்
-
கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
- 96✓
- 95
- 94
- 97
-
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- நற்றிணை
- குறிஞ்சிப்பாட்டு
- பரிபாடல்
- ஏலாதி✓
-
கூற்று : ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
காரணம் : எ, யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
- கூற்று – சரி; காரணம் – தவறு✓
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு
-
'மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்
- திருமூலர்✓
- அப்பர்
- சாத்தனார்
- தாயுமானவர்
-
உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல – இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
- கால்சுற்று
- கைச்சுற்று
- நகச்சுற்று✓
- திருமண்சுற்று
-
“பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்” – இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- நாவுக்கரசர்✓
-
பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?
- தினத்தந்தி
- காஞ்சி✓
- முரசொலி
- தினமணி
-
அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
- காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
- காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி✓
- கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
- கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
-
அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்
- குணப் பெயர்
- இடப் பெயர்
- காலப் பெயர்✓
- தொழில் பெயர்
-
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
- மிகும்✓
- மிகாது
- சில இடங்களில் வரும்
- சில இடங்களில் வராது
-
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
- ஆங்கில மொழி
- இலத்தீன் மொழி✓
- வட மொழி
- பிரெஞ்ச மொழி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →