Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 15 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 15 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
"கனலி" என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைைத் தேர்க.
- சூரியன்
- நெருப்பு
- பன்றி
- கரும்பு✓
-
சரியான தொடரைக் கண்டறிக.
- உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
- தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
- தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்✓
- உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
-
'தமிழ்ப் பெருங்காவலர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
- மறைமலையடிகள்
- பேரா. தனிநாயகம்
- தேவநேயப்பாவாணர்✓
- உ.வே. சாமிநாதர்
-
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
- கமில்சுவலபில்
- மாக்சு முல்லர்✓
- முனைவர் எமினோ
- வில்லியம் ஜோன்ஸ்
-
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
- கப்பல்
- அம்பி
- ஆழி✓
- திமில்
-
முதன் முதலில் இயக்கப்படமாக எடுக்கப்பட்ட விலங்கு
- குதிரை✓
- நாய்
- பூனை
- மான்
-
'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்'
எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?- காம்டுவெல்
- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்✓
- கீன் பால்ஸ் ஜாபர்
-
குண்டலகேசியின் கதைத் தலைவி – குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
- கைகேயி
- பத்தரை✓
- சுமத்திரை
- மாதவி
-
'விற்பெருந் தடந்தோள் வீர!'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?- இலக்குவன்
- இராமன்✓
- குகன்
- அனுமன்
-
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
- ஆறுமுக நாவலர்
- ஜோசப் கொன்ஸ்டான்
- ஜேம்ஸ் பிராங்கா✓
- ஜி.யு. போப்
-
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
- தேவாரம்
- திருவாசகம்✓
- திருக்கோவையார்
- திருப்பள்ளியெழுச்சி
-
'Presbyoesophagus' எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
- முதியோரின் கோளா நிலை
- உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்✓
- வெள்ளெழுத்து முதிர்வு அடைதல்
- மார்சனிக காய்ப்ச்சல்
-
ந. பிச்சமூர்த்தி என்ற கவிஞரின் இயற்பெயர் என்ன?
- கனகசபை
- வேங்கட மகாலிங்கம்✓
- இரசக் கோபால்
- அரங்க சாமி
-
ரோமானியர்க்கும், தமிழர்க்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
- அரிக்கமேடு✓
- பல்லாவரம்
- ஆதிச்சநல்லூர்
- அழகன்குளம்
-
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்பெறுபவர்
- சுரதா
- சிற்பி
- பாரதிதாசன்
- வாணிதாசன்✓
-
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுக்கூற்றிருக்கை✓
- திருநெடுந்தாண்டகம்
- திருவந்தாதி
-
புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
- டாக்டர். கால்டுவெல்
- ஜி.யு. போப்
- பெர்சிவல் பாதிரியார்
- ஜார்ஜ் எல். ஹார்ட்✓
-
சொல்லைப் பொருளோடு பொருத்துக :
சொல் பொருள்- (a) வனப்பு 1. காடு
- (b) அடவி 2. பக்கம்
- (c) மருங்கு 3. இனிமை
- (d) மதுரம் 4. அழகு
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
இணையதள பயன்பாடு அதிகரித்தது ; அதனால் உலகம் குறுகியது.
– எவ்வகைத் தொடர்?- கலவைத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
- தனிநிலைத் தொடர்
- தொடர் நிலைத் தொடர்✓
-
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
– இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?- படை கவசம்
- படை கருவிகள்
- கைப்பொருள்✓
- வலிமையான ஆயுதம்
-
"பலே, பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?
- நாமக்கல் கவிஞர்✓
- பாரதிதாசன்
- கவிமணி
- ச.து.சு. யோகியார்
-
பொருந்தாத இணையைக் கண்டறிக :
- பொதுவுடைமை – புதுமைப்பித்தன்✓
- தனித்தமிழ் – மறைமலை அடிகள்
- பேச்சுக் கலை – பேரறிஞர் அண்ணா
- புரட்சி – பாரதிதாசன்
-
பொருந்தா இணையைக் கண்டறிக
- பரவை – கடல்
- கரி – நரி✓
- பரி – குதிரை
- கணை – அம்பு
-
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
- சுவாமிநாத தேசிகர்✓
- வீரமாமுனிவர்
- சி. இலக்குவனார்
- மீனாட்சி சுந்தரனார்
-
பிழையான கூற்றைக் கண்டறிக
- உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
- வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →