Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 9 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
- மு.சி. பூர்ணலிங்கம்✓
- தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
- கே. வி. சுப்பையா
- எல்.வி. இராமசுவாமி
-
பிறவரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை- எளிதாய் கேட்காதவர்
- எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை✓
- யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
- எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
-
'ஒற்றுமைக் காப்பியம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பெரியபுராணம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்✓
-
'தலை வணக்கினாள்' என்பது பின்வருவனவற்றுள் எது?
- ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- மூன்றாம் வேற்றுமைத் தொகை✓
- நான்காம் வேற்றுமைத் தொகை
- ஆறாம் வேற்றுமைத் தொகை
-
"நீரின் வந்த நிபிர்பிற் பவளியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
......... - என்னும் செய்யுளுகள் இடம்பெற்ற நூல்.- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை✓
- நெடுநல்வாடை
- மலைபடுகடாம்
-
'சேர்' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
- சேர்த்த✓
- சேர்க
- சேர்ந்த
- சேர்ந்து
-
"கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்" – பாரதியார்.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- மரபு வழுவமைதி✓
- இட வழுவமைதி
-
ஐ – எனும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
- அரசன்
- வீரன்
- ஒற்றன்
- தலைவன்✓
-
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க :
- வெண்மதி = வெண் + மதி✓
- வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
- காடிதனை = காடு + இதனை
- கருமுகில் = கருமை + முகில்
-
வியாசர் பாரததத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
- பாகவத புராணம்
- பாஞ்சாலி சபதம்✓
- கண்ணன் பாட்டு
- கம்பராமாயணம்
-
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
- கொண்டு, உடன்
- பொருட்டு, நிமித்தம்✓
- இருந்து, நின்று
- உடைய
-
உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக :
(a) ஆண்டிகன் மடம் கட்டியது போல 1. போலி (b) ஆற்றில் கரைத்த புளி போல 2. மிக அரிது (c) கரடி பிறை கண்டது போல 3. பயனற்ற செயல் (d) உள்ளீடற்ற புதர் போல 4. உருவாகாத திட்டம் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க
- நடந்தான்✓
- நடத்தல்
- நடந்து
- நடந்த
-
பொருத்தமற்ற சொல்லைக் கண்டறிக :
கடலைக் குறிக்காத தமிழ்ச்சொல்- பௌவம்
- பரவை
- புணரி
- திமில்✓
-
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் “மிகுதி” என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.- பரியது
- கூர்✓
- கோட்ட
- யானை
-
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க :
பண்புத்தொகை- மென்கண்
- செய்வினை✓
- நன்கலம்
- அருவிலை
-
'விளக்குதல் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்
- ஜெயஹரிவாஸ் தேரு
- மியிலன் வாட்சன்✓
- கீட்ஸ்
- வோர்ட்ஸ் வொர்த்
-
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது – இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.
- திருமால் குன்றம்
- உயர்ந்து ஓங்கிய✓
- ஓங்கி நிற்கும்
- குன்றம் உயர்ந்து
-
உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காலியம் எது?
- பெரிய புராணம்✓
- கம்ப இராமாயணம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
-
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
- மீரா
- முடியரசன்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்✓
-
துறை மாணிக்கம் – என்பது இவரது இயற்பெயராகும்
- சுரதா
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- முடியரசன்
- பாரிதாசன்
-
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்
- கோயிலாத்து
- தாவீது
- இயேசுபெருமான்
- சூசை மாமுனிவர்✓
-
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
- மனோன்மணீயம்✓
- அகத்தியம்
- முறுவல்
- குணநூல்
-
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?
- பேரறிஞர் அண்ணா
- அன்னை இந்திராகாந்தி
- மு. வரதராசனார்✓
- திரு.வி.க.
-
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
- பத்து
- ஆறு
- ஏழு✓
- ஐந்து
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →