Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 8 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
‘கோல்டு பிஸ்கட்’- வைரக்கட்டி
- அலுமினியக்கட்டி
- தங்கக்கட்டி✓
- தாமிரக்கட்டி
-
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
- அனுமதி
- ஈசன்
- குபேரன்
- மணிமுடி✓
-
''ஆர்கலி புலைத்து மக்கட் கெல்லாம்''
– எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?- முதுமொழிக் காஞ்சி✓
- ஏலாதி
- இனியவை நாற்பது
- இன்னா நாற்பது
-
‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல்?- அகன்ற உலகம்
- மேலான உலகம்
- சிறிய உலகம்✓
- கீழான உலகம்
-
"முந்தை இடுந்து நட்டோர் கொடுப்பின்தின் நஞ்சும் உண்டார் தனிநா கரிகர்"
- குறுந்தொகை
- நற்றிணை✓
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
-
'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?
- ஜெயகாந்தன்
- புதுமைப்பித்தன்
- அழ.வள்ளியப்பா
- சி.சு.செல்லப்பா✓
-
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
- கம்பர்
- குலசேகரர்✓
- ஆண்டாள்
- பெரியாழ்வார்
-
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்
- அகத்தியலிங்கம்
- ஹோக்கன்
- கால்டுவெல்✓
- பிரான்ஸிஸ் எல்லிஸ்
-
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின்படி எவ்வாறு பிரியும்?
- ஆற்று + ஈர்
- ஆறு + ஈர்
- ஆ + இற்று + ஈர்
- ஆற்று + ஆ + ஈர்✓
-
பொருத்துக :
(a) மருப்பு 1. வழிவந்தோன் (b) விரகு 2. தந்திரம் (c) மருகன் 3. சிறிய அடி (d) சீறடி 4. யானைத் தந்தம் - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
- மணிமேகலா தெய்வம்
- சுதமதி
- தீவதிலகை✓
- அறவண அடிகள்
-
'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
- படிக்கிறேன்
- படிதேன்
- படிப்போம்
- படிப்பேன்✓
-
திராவிட நாட்டின் வான்மம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்
- மு. மேத்தா
- முடியரசன்✓
- கண்ணதாசன்
- மருதகாசி
-
'வோர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
- வேர்க்குரு✓
- வேர்க்குறு
- வேர்வை
- வியர்வை
-
'தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு' – இக்கடிதப் பகுதி யாருடையது?
- திரு.வி. கலியாண சுந்தரனார்
- மு. வரதராசனார்✓
- பேரறிஞர் அண்ணா
- ஜவஹர்லால் நேரு
-
கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி
- கூற்று இரண்டும் சரி✓
- கூற்று இரண்டும் தவறு
-
'திரண்டெழு தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்' என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?
- அன்புடையோர்
- அறிவு முதிர்ச்சியுடையோர்✓
- ஆர்வமிகு தண்பர்கள்
- உற்றார்
-
'அழகு அடியவர்த்த அன்பர்' எனக் குறிப்பிடப் பெறுபவர்
- சந்தரமூர்த்தி
- மாணிக்கவாசகர்✓
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
-
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
- பரிபாடல்✓
- நற்றிணை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
-
'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
- மா. இராமலிங்கம்
- ப. சிங்காரம்✓
- ஜெயகாந்தன்
- பிச்சாமூர்த்தி
-
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவைஆவணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறன என்று ——— குறித்து ——— அறிவார்.
- சங்க இலக்கியம் – குமரிப்பாட்டர்
- ஆவணதாரகச் நாட்குறிப்பு – உ.வே. சாமிநாதர்✓
- புறநானூறு – பரிமேலகலகர்
- நன்னூல் – ஜி.யு. போப்
-
வெள்ளைக்காரர் சண்டையினால் விளைந்த அழிவினை
ஐயோ! என் ஒரு நாவினால் எங்ஙனம் சொல்வேன்!
– எவ்வகை வாக்கியம்- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- வியப்பு வாக்கியம்✓
- கட்டளை வாக்கியம்
-
திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் ————
- கணிமேதாவியார்
- கம்பர்
- நல்லாதனார்✓
- இளங்கோவடிகள்
-
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
- பெருங்கதை
- சீவகசிந்தாமணி
- பதிற்றுப்பத்து✓
- பரிபாடல்
-
'அரியவற்றுள்' – இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
- நிரை நேர் நேர்
- நிரை நிரை நேர்✓
- நிரை நேர் நிரை
- நேர் நேர் நிரை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →