Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 39 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 39 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
- கண்ணதாசன்
- தஞ்சை இராமையாதாஸ்
- மருதகாசி✓
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
-
வினையெச்சம் – கண்டறிக.
- ஓடினாள்
- ஓடும்
- ஓடிய
- ஓடி✓
-
பொருந்தாத இணையினைக் காண்க
- "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" – பாரதிதாசன்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" – கணியன் பூங்குன்றனார்
- "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" – இளங்கோவடிகள்
- "அழுது அடியடைந்த அன்பர்" – திருமூலர்✓
-
இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.
- பண்புத் தொகை
- வினைத் தொகை✓
- வினையாலணையும் பெயர்
- வினைமுற்று
-
பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
- தொண்டி
- கொற்கை✓
- முசிறி
- தூத்துக்குடி
-
பொருந்தாத விடையைக் கண்டறிக.
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்- புளியமரத்தின் கதை
- பஞ்சும் பசியும்✓
- ஜே.ஜே. சில குறிப்புகள்
- குழந்தைகள் ஆண்கள் பெண்கள்
-
'பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி லவை' என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர்.
- சுப்பிரத்திணியாசன்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்✓
- புரட்சிக்கவி பாரதிதாசன்
- மகாகவி பாரதியார்
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
- வைகுதல் வைகறை வைகலும் வைகல்
- வைகறை வைகுதல் வைகல் வைகலும்
- வைகலும் வைகல் வைகுதல் வைகறை
- வைகல் வைகலும் வைகறை வைகுதல்✓
-
கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R] : அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
- [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
- [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது✓
- [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- [A] தவறு ஆனால் [R] சரி
-
பொருத்துக :
(a) துறு 1. காரணச் சிறப்புப்பெயர் (b) மரம் 2. இடுகுறிப் பொதுப்பெயர் (c) வளையல் 3. புதர் (d) மலை 4. இடுகுறிப்பெயர் - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
- நுபுவத்துக் காண்டம்✓
- விலாதத்துக் காண்டம்
- ஹிஜ்ரத்துக் காண்டம்
- மேற்கூறிய அனைத்தும்
-
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" –என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
- கற்றா
- கன்றா✓
- கறா
- கன்று
-
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக :
பட்டியல் ஒன்று(a) ஓரம் 1. வறுமை (b) வேற்றுமை 2. தீது (c) நன்று 3. மையம் (d) செழுமை 4. ஒற்றுமை பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க :
- உழவு, மண், ஏர், மாடு
- மண், மாடு, ஏர், உழவு✓
- உழவு, ஏர், மண், மாடு
- ஏர், உழவு, மாடு, மண்
-
பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II (a) என்னே, மயிலின் அழகு ! 1. எதிர்மறைத் தொடர் (b) கண்ணன் பாடம் படித்தான் 2. உணர்ச்சித் தொடர் (c) மணிமொழி பரிசு பெற்றாள் 3. கட்டளைத் தொடர் (d) உழைத்துப்பிழை 4. உடன்பாட்டுத் தொடர் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
- சமணத் துறவி✓
- பௌத்தத் துறவி
- இஸ்லாமியத் துறவி
- சைவ துறவி
-
ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?
- உயர்ந்தோங்கி
- நடு மையம்
- மீமிசை ஞாயிறு
- மாடு மனை✓
-
'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
- சி.சு.செல்லப்பா
- லா.ச.ராமமிருதம்
- ந.பிச்சமூர்த்தி✓
- தி.ஜானகி ராமன்
-
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடை தம் உரையில் குறிப்பிட்டவர்
- சிவஞான முனிவர்
- மயிலைநாதர்✓
- ஆறுமுகநாவலர்
- இளம்பூரணர்
-
'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஓரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
- கிரேக்கம்✓
- இலத்தீன்
- போர்ச்சுகீசியம்
- வடமொழி
-
"குறிக்கண்ட நோய்க்குக் குழாய் கொடு" இத்தொடரில் 'குழாய்' என்னும் மூலிகை
- கதிர்வேற்பிலை
- குப்பைமேனி
- தூதுவளை
- கற்றாழை✓
-
'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
– இப்பாடலில் பயின்று வரும் அணி- தீவக அணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- தற்குறிப்பேற்ற அணி✓
- உவமைய அணி
-
அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி- தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
- உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி✓
- படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
- நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
-
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
- மதுரை
- கரூர்
- தூத்துக்குடி✓
- கன்னியாக்குமரி
-
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குழவளை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?- பாம்பாட்டி சித்தர்
- கடுவெளி சித்தர்✓
- பட்டினத்தடிகள்
- திருமூலர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →