44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 14 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 14 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Who issues the Voter Identity Card ?வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார் ?
- Election Commission of Indiaஇந்திய தேர்தல் ஆணையம்✓
- District Collectorமாவட்ட ஆட்சியர்
- Municipal Commissionerமாநகராட்சி ஆணையர்
- Chairmanதலைவர்
-
When was supreme court of India inaugurated?இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?
- Jan 26, 1950ஜனவரி 26, 1950
- Jan 28, 1950ஜனவரி 28, 1950✓
- Feb 28, 1950பிப்ரவரி 28, 1950
- April 26, 1950ஏப்ரல் 26, 1950
-
Assertion [A] : Attorney - General of India has the privilege of addressing both the houses of Parliament.கூற்று [A] : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் சிறப்புரிமை இந்திய தலைமை வழக்குரைஞருக்கு உண்டு.
Reason [R] : Attorney - General enjoys the same previleges and immunities as the members of Parliament.
காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்றே இந்திய தலைமை வழக்குரைஞரும் சிறப்பு சலுகைகளையும் விலக்களிப்புகளையும் கொண்டுள்ளார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கம்
- [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கமல்ல✓
-
In which of the following Amendment raised the age of retirement of a High Court Judges from 62 to 65 years.பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-லிருந்து - 65 வயது வரை உயர்த்திய சட்டதிருத்தம் எது?
- 104th Amendment104-வது சட்டதிருத்தம்✓
- 101st Amendment101-வது சட்டதிருத்தம்
- 102nd Amendment102-வது சட்டதிருத்தம்
- 103rd Amendment.103-வது சட்டதிருத்தம்.
-
Which one of the following statement is not with regard to powers of the Parliament?நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல?
- Parliament can approve three types of emergency provisionsநாடாளுமன்றம் மூன்று விதமான அவசர நிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
- It cannot abolish State Legislative Councilநாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது✓
- It can alter boundaries of the statesமாநிலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்
- It can establish a common High Court for two or more statesஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம்
-
Consider the following statements.
A high court has jurisdiction toஉயர்நீதிமன்ற அதிகாரம் தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்.- 1. Punish for its contempt
- 2. Tender advice on a legal question referred by President of India
- 3. Tender advice on a legal question referred by Governor of the State
- 4. Issue certain writs to protect fundamental rights
Which of the above statement(s) is / are correct?
- 1. நீதிமன்ற அவமதிப்புகளுக்கு தண்டனை வழங்குதல்
- 2. இந்திய குடியரச தலைவரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
- 3. மாநில ஆளுநரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
- 4. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக சில பேராணைகளை பிறப்பிக்கலாம்.
இவற்றில் எது சரியான கூற்று?
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்✓
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
-
By what name or names is our country mentioned in the Indian Constitution?இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?
- Indian and Hindustanஇந்தியன் மற்றும் இந்துஸ்தான்
- India and Bharatஇந்தியா மற்றும் பாரதம்✓
- Bharatபாரதம்
- India, Bharat, Hindustanஇந்தியா, பாரதம், இந்துஸ்தான்
-
Which of the following statements is true about Article 21?அரசியலமைப்பின் பிரிவு 21 ஐ பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) This article reminds us of one of the famous clauses in Magna Carta.
- (ii) The constitution does not confer right to die.
- (iii) Custodial death is perhaps one of the worst crimes in a civilized society governed by Administrative Law.
- (i) மகாசாசனத்தில் உள்ள உட்பிரிவுகளில் புகழ்பெற்ற ஒன்றை இந்த பிரிவு நமக்கு நினைவூட்டுகிறது.
- (ii) அரசியலமைப்பு சட்டம் இறக்கும் உரிமையை வழங்கவில்லை.
- (iii) நிருவாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமுதாயத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Article 63 of the Indian Constitution refers toஇந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
- Vice-Presidentதுணை குடியரசுத் தலைவர்✓
- Presidentகுடியரசு தலைவர்
- Prime Ministerபிரதம மந்திரி
- Governorஆளுநர்
-
Match the following:கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) The Consumer Protection Act 1. 1980 (b) The Legal Metrology Act 2. 1955 (c) The Essential Commodities Act 3. 2009 (d) The prevention of Black Marketing Act 4. 1986 (a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1980 (b) சட்ட அளவியல் சட்டம் 2. 1955 (c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 3. 2009 (d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் 4. 1986 - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
I. Money Bills can be introduced in the parliament without president's approval
II. The finance commission is appointed by the president
Which of the above statements are correct?I. நிதி மசோதா, குடியரசுத் தலைவர்யின் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்
II. இந்திய நிதி ஆணையம் குடியரசுத் தலைவர்யால் நியமிக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றில் எது சரியானது?- (I) only(I) மட்டும்
- (II) only(II) மட்டும்✓
- Both (I) and (II)(I) மற்றும் (II)
- None of the aboveமேற்கண்ட எவையுமில்லை
-
Which of the following statements are true about fundamental duties?அடிப்படைக் கடமைகள் குறித்தததில் கீழ்காணும் எந்த சொற்றொடர்கள் சரியானவை?
- (i) Fundamental duties are laiddown in Article 51-A of the Constitution.
- (ii) 86th amendment Act, 2002 added 11th fundamental duty to the list.
- (iii) To develop scientific temper is not a fundamental duty.
- (i) அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பின் விதி 51-A இல கொடுக்கப்பட்டுள்ளது
- (ii) 11வது அடிப்படை கடமையை 86வது திருத்தச்சட்டம் 2002ஆம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
- (iii) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஒரு அடிப்படை கடமையல்ல.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Arrange the following conventions in chronological order.பின்வரும் உடன்படிக்கைகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Convention on the Elimination of All Forms of Discrimination against women.
- 2. Convention on the prevention and punishment of the crime of Genocide.
- 3. Convention on the Elimination of All Forms of Racial Discrimination.
- 4. Convention on the Rights of the child.
- 1. பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்படிக்கை.
- 2. இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான உடன்படிக்கை.
- 3. அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை.
- 4. குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை.
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)✓
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
The recommendations of 15th Finance Commission will be effect from which date?15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
- January 1, 2018ஜனவரி 1, 2018
- April 1, 2018ஏப்ரல் 1, 2018
- April 1, 2020ஏப்ரல் 1, 2020✓
- January 1, 2020ஜனவரி 1, 2020
-
The writ of Habeas Corpus isஆட்கொணர் நீதி பேராணை என்பது
- To safeguard people from illegal arrestசட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்✓
- The Petitioner who requires legal help to get his work done by respective Public Authoritiesவிண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
- It probability a subordinate court from acting beyond its jurisdictionதுணை நீதி மன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல்
- It prevents usurpation of a public officeபொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
-
Consider the statement of the Judicial power of the Governors of the States.
Choose the correct answer from the option given below :மாநில ஆளுநரின் "நீதிமன்ற அதிகாரம்" குறித்துக் கீழ்க்கண்ட கூற்றைக் கருதுக.
விருப்பத் தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
துணிபு [A] : மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.
காரணம் [R] : அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.Assertion [A] : The power of granting pardon under article 161 is very wide and do not contain any limitation.
Reason [R] : Judicial review is possible, when he/she on the ground of non-application of mind and non-consideration of relevant material and suffers from arbitrariness.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு
- [R] is true [A] is false[R] சரி [A] தவறு
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]-யும் [R]-யும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது✓
- Both [A] and [R] are true [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கமாகும்
-
Match the following:பொருத்துக:
(a) First session of Constituent Assembly 1. 4th April 1957 (b) Date on which Drafting Committee was setup 2. 13th May 1952 (c) 1st sitting of Rajya Sabha 3. 29th August 1947 (d) Dissolution of the 1st Lok Sabha 4. 9th December 1946 (a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் 1. 4 ஏப்ரல் 1957 (b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி 2. 13 மே 1952 (c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் 3. 29 ஆகஸ்ட் 1947 (d) குடியரசு தினம் 4. 9 டிசம்பர் 1946 - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Consider the following statements about Union Public Service Commission. Which among the following statement is correct?மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து பின்வருவனவற்றுள் சரியானது எது?
- The expenses of the UPSC shall be charged on the consolidated fund of state.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய செலவினங்கள், மாநில திரள் நிதியத்திலிருந்து செலுத்தப்படும்
- It shall be the duty of the UPSC will present annually to the Parliament of the work done by the Commission.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் அளிக்கும்
- The Chairman and other members of the Commission shall be appointed by the Prime Minister.தலைவரும், இதர உறுப்பினர்களும் பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார்கள்
- A member of the UPSC shall be eligible for appointment as the Chairman of UPSC.மத்திய தேர்வாணைய உறுப்பினர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதி உள்ளது✓
-
Which is wrongly matched?தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும் :
- (a) Universal Declaration of Human Rights - (1) 1948
- (b) European Social Charter - (2) 1961
- (c) American Declaration of Rights and Duties of Man - (3) 1958
- (d) International Covenant Civil and Political Rights (ICCPR) - (4) 1966
- (a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் - (1) 1948
- (b) ஐரோப்பிய சமூக சாசனம் - (2) 1961
- (c) அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் - (3) 1958
- (d) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை (ICCPR) - (4) 1966
- (a)(a)
- (b)(b)
- (c)(c)✓
- (d)(d)
-
Which of the following statements about National Development Council is/are wrong?
I. National Development Council was set up in 1952
II. National Development Council is concerned with social and economic policy
III. It is a key institution in Centre-State relations
IV. It consists of principal secretaries of all the ministriesதேசிய மேம்பாட்டு குழுவை பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எது/எவை?
I. தேசிய மேம்பாட்டுக்குழு 1952 இல் அமைக்கப்பட்டது
II. தேசிய மேம்பாட்டுக்குழு சமூக மற்றும் பொருளாதார கொள்கையுடன் ஈடுபாடு கொண்டது
III. மத்திய-மாநில உறவுகளில் இது ஒரு முக்கிய நிறுவனமாகும்
IV. அனைத்து அமைச்சகங்களின் முதன்மை செயலாளர்களை இது பெற்றுள்ளது- II
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
- IVIV✓
-
Which authority conducts the Local Bodies Elections?உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
- State Election Commissionமாநிலத் தேர்தல் ஆணையம்✓
- Central Election Commissionமத்திய தேர்தல் ஆணையம்
- District Election Boardமாவட்ட தேர்தல் வாரியம்
- Observersபார்வையாளர்கள்
-
Which Union Territory has its own elected Legislative Assembly?கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
- Chandigarhசண்டிகர்
- Lakshadweepலட்சத்தீவுகள்
- Puducherryபுதுச்சேரி✓
- Daman and Diuடாமன் மற்றும் டியூ
-
The Indian President has a veto power over
I. Ordinary bill
II. Money bill
III. Constitutional amendment bill
IV. State legislation bill
Which statement given above are correctஇந்திய குடியரசு தலைவர் எதன் மீது ரத்து செய்கின்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார்
I. சாதாரண மசோதா மீது
II. நிதி மசோதா மீது
III. அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது
IV. மாநில சட்ட மசோதா மீது
மேற்கூறியவற்றுள் எது சரியானது?- (I) and (IV) only(I) மற்றும் (IV) மட்டும்✓
- (IV) and (III) only(IV) மற்றும் (III) மட்டும்
- (I), (III) and (IV) only(I), (III) மற்றும் (IV) மட்டும்
- (II) and (III) only(II) மற்றும் (III) மட்டும்
-
Consumer Courts are set up in ————— tier system.நுகர்வோர் நீதிமன்றங்கள் —————— அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
- Two2
- Three3✓
- Four4
- Five5
-
Assertion [A], Reason [R] Question Type :கருத்து [A] மற்றும் காரணம் [R] வினா வகை :
கருத்து [A] : தேசிய அளவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதியைத் தெரிந்து கொள்வது தவறானது இல்லை – உச்சநீதிமன்றம்.
காரணம் [R] : சாதியைத் தெரிந்து கொள்வதானது, எவ்வளவு மக்கள் நலத்திட்ட தேவைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதோடு, அது ஒரு பொதுக்கொள்கையுமாகும்.Assertion [A] : “Ascertaining Caste as part of the ongoing nation wide census exercise was nothing wrong” – Supreme Court.
Reason [R] : Ascertaining caste to know how many people are in need of welfare and it is a matter of public policy.
- [A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்.✓
- [A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமல்ல.
- [A] is true; [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
- [R] is true; [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →