11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 6 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
With reference to Tamilnadu, Nisha : 2008 is similar as P : 2015. Then P points out toதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நிஷா : 2008 என்பது P : 2015, என்பதற்கு ஒத்ததாகும், எனில் P என்பது எதைக் குறிக்கும்?
- BOB09(BOB09) பாப்09
- Madiமாடி
- HudHudஹூத்ஹூத்
- Roanuரோஐனு✓
-
Consider the following statements :
According to the first stage of Demographic transition.
I. Death rates are high.
II. Low birth rate.
III. Absence of medical aid.
Select the correct answer using the code given below :கீழ்கண்ட கூற்றை ஆராய்க :
மக்கள் தொகை மாற்றத்தின் முதல் நிலையின் படி
I. அதிகமான இறப்பு வீதம்
II. குறைவான பிறப்பு வீதம்
III. மருத்துவ உதவி இல்லாமை
கீழ்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க :- I and III onlyI மற்றும் III மட்டும்✓
- I and II onlyI மற்றும் II மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- I, II and IIII, II மற்றும் III
-
Headquarter of West Central Railwayமேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம்
- Mumbaiமும்பை
- Hubliஹூப்ளி
- New Delhiபுது டெல்லி
- Jabalpurஜபல்பூர்✓
-
The dam constructed across the river Sutlej isசட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
- Bhakra-Nangalபக்ரா நங்கல்✓
- Hirakudஹிராகுட்
- Damodar damதாமோதர் அணை
- Stanley Reservoirஸ்டான்லி நீர்த்தேக்கம்
-
Golden Quadrilateral distance between Chennai and Kolkatta isசென்னை - கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு?
- 1684 Km1684 கி.மீ.✓
- 1453 Km1453 கி.மீ.
- 1290 Km1290 கி.மீ.
- 1419 Km1419 கி.மீ.
-
The Hindustan Shipyard is located atஇந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
- Kochiகொச்சி
- Kolkattaகொல்கத்தா
- Mumbaiமும்பை
- Visakapatnamவிசாகப்பட்டினம்✓
-
The rivers merge in Mukoodal areமுக்கூடலில் சேரும் ஆறுகள்
- Manimutharu, Koraiyaru, Pandiyaruமணிமுத்தாறு, கோரையாறு, பாண்டியாறு
- Vazhutha Nadhi, Shanmuga Nadhi, Varaaga Nadhiவழுதா நதி, சண்முக நதி, வராக நதி
- Than Porunai, Sitraru, Kothandarama Aaruதண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம ஆறு✓
- Vaigai, Porunai, Thamirabaraniவைகை, பொருனை, தாமிரபரணி
-
Largest area in the ocean floor is occupied byகடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது
- Continental shelfகண்டத்திட்டுக்கள்
- Continental slopeகண்டச்சரிவுகள்
- Deep sea plainஆழ்கடல் சமவெளி✓
- Ocean deepsகடல் ஆழிகள்
-
Which one of the following is the right bank tributary of Narmada River?பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.
- Hiranஹிரன்✓
- Burhnerபர்னர்
- Banjarபஞ்சர்
- Tawaதவா
-
"The Detroit of Asia" is'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
- Hyderabadஹைதராபாத்
- Chennaiசென்னை✓
- Mumbaiமும்பை
- Suratசூரத்
-
Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to reduce transportation costs and simplify storage. This method is used inஅடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பதற்கு எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?
- Composting of degradable waste in MSWMSW இல் மக்கும் குப்பைகளை உரமாக்குதல்
- Transportation and Transfer station storage of MSWMSW இன் போக்குவரத்து மற்றும் பரிமாற்ற நிலைய சேமிப்பு
- Construction of Landfill site for MSWMSW க்கான நிலம் நிரப்பும் தளத்தின் கட்டுமானம்
- Processing and the Recovery of waste components from MSWMSW விருந்து கழிவு வுருகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்✓
-
Which of the following statements are true about population growth of India?இந்தியாவின் மக்கட் தொகை வளர்ச்சி பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
- (i) Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 44% of the total population of India in 1996.
- (ii) Bihar, Uttarpradesh, Madhya Pradesh, Rajasthan and Orissa, which constitute 48% of the total population of India in 2016.
- (iii) These states contributed 70% of the total increase in population of the country during the period of 1996-2016.
- (i) பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 1996ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 44 சதவீதம் ஆகும்.
- (ii) பீகார், உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் ஒரிசா, 2016ல் இந்தியாவின் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதம் ஆகும்.
- (iii) 1996-2016 ஆம் கால கட்டத்தில் நாட்டின் மொத்த மக்கட் தொகை அதிகரிப்பில் இந்த மாநிலங்கள் 70 சதவீதம் பங்களித்தன.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Ox-bow lakes are formed in theகுதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
- Valley regionபள்ளதாக்கு பகுதி
- Mountain regionமலைப் பகுதி
- Plain regionசமவெளிப் பகுதி✓
- Delta regionடெல்டா பகுதி
-
Fill in the blanks :
In 2008, India had the world's ———— largest fishing industry.கோடிட்ட இடத்தை நிரப்புக :
2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீன் வளத்தொழில் உலகில் ———— இடத்தைப் பெற்றது.- Tenthபத்தாவது
- Eighthஎட்டாவது
- Fifthஐந்தாவது
- Thirdமூன்றாவது✓
-
Alluvial soil is rich inவண்டல் மண் —————— மூலம் வளமானதாக உள்ளது.
- Humus, Phosphoric acid, Lime and Organic matterமக்கிய, பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, கரிமப்பொருள்✓
- Iron, Lime, Calcium, Potash, Aluminium and Magnesium Carbonatesஇரும்பு, சுண்ணாம்பு, கால்சியம், பொட்டாஷியம், அலுமினியம் மற்றும் மக்னீஷியம் கார்பனேட்
- Iron and Aluminiumஇரும்பு மற்றும் அலுமினியம்
- Highly Saline and rich in organic matterமிகுந்த உப்புத்தன்மை மற்றும் அதிக கரிமப்பொருள்கள்
-
Which of the following is incorrectly matched?கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
- 1. Trans Siberian Railway line — It connects Baltic Sea and Pacific Ocean
- 2. Trans Caspian Railway line — It connects Central Asia and Japan
- 3. Canadian Pacific Railway line — It connects Atlantic Ocean and Indian Ocean
- 4. Trans-Continental Railway line — It connects Buenos Aires with Valparaiso
- 1. டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை — இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
- 2. டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை — இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
- 3. கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை — இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
- 4. டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை — இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது
- (1) only(1) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (3) only(3) மட்டும்✓
- (4) only(4) மட்டும்
-
Pick out the effect that is not related to the impacts of Earthquake.பூகம்ப பாதிப்புகளோடு தொடர்புற்ற விளைவை தேர்வு செய்க.
- Fissuresவெடிகள்
- Collapseதகைமட்டாகல்
- Tsunamisசுனாமிகள்
- Depression zone formationதாழ்வு மண்டலம் உருவாதல்✓
-
As per 2011 census the total urban population in the state of Tamil Nadu is2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை
- 27.48 million27.48 மில்லியன்
- 34.95 million34.95 மில்லியன்✓
- 36.04 million36.04 மில்லியன்
- 42.50 million42.50 மில்லியன்
-
Choose the right answer :
Which of the four metropolitan cities connecting the six lanes super highways?சரியான விடை எழுது :
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?- Chennai, Delhi, Kolkata and Nagpurசென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்
- Chennai, Delhi, Nagpur and Kochiசென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி
- Mumbai, Delhi, Chennai and Kochiமும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி
- Chennai, Mumbai, Delhi and Kolkataசென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா✓
-
In which hills of Mehalaya, 'Geological Survey of India' (GSI), discovered ancient fossils?இந்திய புவியியல் ஆய்வு மையம், மேகாலயாவில் எந்த மலையில் பழமையான புதைப்படிவுகளை கண்டறிந்தது?
- South Garo hillsதெற்கு கேரோ மலைகள்✓
- East Khasi hillsகிழக்கு காசி மலைகள்
- West Khasi hillsமேற்கு காசி மலைகள்
- Jaintia hillsஜைண்டியா மலைகள்
-
Match the following :
Shifting cultivationகீழ்கண்டவற்றை பொருத்துக :
இடப்பெயர்வு வேளாண்மை(a) Ladang 1. Malaysia (b) Milpa 2. Vietnam (c) Roca 3. Brazil (d) Ray 4. Mexico Region
(a) லடாங் 1. மலேசியா (b) மில்பா 2. வியட்நாம் (c) ரோக்கா 3. பிரேசில் (d) ரே 4. மெக்ஸிகோ பகுதி
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Which of the following is/are not situated in Rajasthan?கீழ்காணப்படும் எது/எவை ராஜஸ்தானில் அமைந்திருக்கவில்லை?
- (a) Dilwara Temples
- (b) Mehrangarh fort
- (c) Bara Imambara
- (d) Purana Qila
- (a) தில்வாரா கோயில்கள்
- (b) மெஹ்ரான்கர் கோட்டை
- (c) பரா இமாம்பரா
- (d) புரானா கிலா
- (a) and (b)(a) மற்றும் (b)
- (a) and (c)(a) மற்றும் (c)
- (c) and (d)(c) மற்றும் (d)✓
- (b) and (d)(b) மற்றும் (d)
-
Which country does Crimea belongs to?க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
- Georgiaஜியார்ஜியா
- Belarusபெளாரஸ்
- Russiaரஷ்யா✓
- Latviaலத்வியா
-
Why Chennai is called as " Detroit of Asia"?"ஆசியாவின் டெட்ராய்ட்" என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?
- Due to the presence of Textile Industryஜவுளித் தொழில் இருப்பதனால்
- Due to the presence of Automobile Industryமோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால்✓
- Due to the presence of Leather Industryதோல் தொழில் இருப்பதனால்
- Due to the presence of Film Industryதிரைப்படத் தொழில் இருப்பதனால்
-
What percentage of total cultivation area in Tamilnadu is rainfed (Manavari)?தமிழ்நாட்டில் எவ்வளவு சதவீதத்தில் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் மானாவாரிப் பகுதியில் பயிரிடப்படுகிறது?
- 55%55%
- 57%57%✓
- 54%54%
- 52%52%
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →