36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 17 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 17 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Consider the following statements about Women Helpline. Which among the following statement is incorrect?பெண்கள் உதவி எண் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் காண்க. பின்வருவனவற்றில் எது சரியானதல்ல?
- Provide toll-free 24 hours telecom service to women affected by conflicts seeking support and informationமுரண்பாடுகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு மற்றும் தகவல்களைத் தேடும் 24 மணிநேர கட்டணமில்லா தொலைத் தொடர்பு சேவையை வழங்குதல்
- Facilitate crisis and non-crisis intervention through referral to the appropriate agenciesபொருத்தமான நிறுவனங்களுக்கு பரிந்துரைப்பதன் மூலம் நெருக்கடி மற்றும் நெருக்கடி அல்லாத தலையீட்டை எளிதாக்குதல்
- Provide information about appropriate support services, government schemes available to the women affected by violenceவன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்கும் பொருத்தமான ஆதரவு சேவைகள், அரசத் திட்டங்கள் பற்றிய தகவல்களை வழங்குதல்
- Provide integrated support and assistance to women affected by violence in public spaces onlyபொது இடங்களில் மட்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் உதவியை வழங்குதல்✓
-
Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :
Assertion [A] : RBI Act, 1934 was amended in 2016.
Reason [R] : To implement flexible inflation targeting framework.
கூற்று [A] : 1934 ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டம், 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
காரணம் [R] : நெகிழ்வான பணவீக்க இலக்கு நிர்ணயக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்காக.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
-
"Nambikkai Inaiyam (NI)" a Tamil Nadu Government project about"Nambikkai Inaiyam (NI)" தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது
- Statewide Block chain infrastructureமாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு✓
- Source of resident data for Tamil Naduதமிழ்நாட்டிற்கான குடியுரிமை தரவுகளின் ஆதாரம்
- Unified access to e-services of different government departmentsபல்வேறு அரசாங்கத் துறைகளின் e-சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகல்
- Providing professional resources and training to decision makersமுடிவெடுப்பவர்களுக்கு தொழில்துறை வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்
-
According to Tamil Nadu Industrial Policy 2014, among the Indian States, Tamil Nadu ranked first in terms of _______.
Choose the right answer:தமிழ்நாடு தொழில் கொள்கை 2014-இன் படி, இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு எதன் அடிப்படையில் முதலிடம் வகிக்கிறது?
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க.- (i) Number of factories
- (ii) Number of workers employed in the factories sector
- (iii) Gross industrial output
- (iv) Net value addition
- (i) தொழிற்சாலைகளின் எண்ணிக்கை
- (ii) தொழிற்சாலை துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
- (iii) மொத்த தொழில்துறை உற்பத்தி
- (iv) நிகர மதிப்புக் கூட்டல்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
A closed economy is one which
I. does not trade with other countries
II. does not impose and restrictions on international trade
III. does not have a coastal line
IV. is not a member of the United Nations Organisation.
Select the correct answer using the code given below :கீழ்கண்டவற்றில் எது ஒன்று மூடிய பொருளாதாரம்
I. பிற நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ளாத பொருளாதாரம்
II. பன்னாட்டு வாணிபத்தில் எந்த தடையும் விதிப்பது இல்லை
III. கடல் வழிப் பாதை இல்லாதது
IV. ஐக்கிய நாடுகளின் அமைப்பில் உறுப்பினர் இல்லாமல் இருப்பது.
கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :- I onlyI மட்டும் சரி✓
- I and II onlyI மற்றும் II சரி
- I, II and III onlyI, II மற்றும் III சரி
- all the aboveமேற்கண்ட அனைத்தும்
-
Arrange the following in the chronological order :பின்வருவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
- 1. Skills acquisition and knowledge awareness for livelihood promotion
- 2. Make in India
- 3. Tamil Nadu Corporation for Development of Women
- 4. National skill Development Mission
- 1. வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு
- 2. இந்தியாவில் தயார் செய்க
- 3. தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு ஆணையம்
- 4. தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்
- (3), (2), (4), (1)(3), (2), (4), (1)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (4), (2), (3), (1)(4), (2), (3), (1)
-
Match the criteria for devolution weight % in 15th Finance Commission.15வது நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்விற்கான சதவிகிதப் பகிர்வினைப் பொருத்தவும் :
(a) Tax efforts 1. 10.0% (b) Population (2011) 2. 2.5% (c) Forest and Ecology 3. 15% (d) Income Distance 4. 45% (a) வரி முயற்சி 1. 10.0% (b) மக்கட்தொகை (2011) 2. 2.5% (c) காடு மற்றும் சூழலியல் 3. 15% (d) வருமான அடிப்படை 4. 45% - (a)-2, (b)-3, (c)-1, (d)-4(a)-2, (b)-3, (c)-1, (d)-4✓
- (a)-3, (b)-2, (c)-4, (d)-1(a)-3, (b)-2, (c)-4, (d)-1
- (a)-1, (b)-2, (c)-3, (d)-4(a)-1, (b)-2, (c)-3, (d)-4
- (a)-4, (b)-2, (c)-3, (d)-1(a)-4, (b)-2, (c)-3, (d)-1
-
Assertion [A]: The Ministry of Education (Formerly Human Resource Development–MHRD) in India formulates education Policy in India and also undertakes Education Programs.கூற்று [A]: மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்–MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
Reason [R]: The centre is represented by the Ministry of Education decides the India's Education budget.
காரணம் [R]: மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
- Both [A] and [R] are true and [R] explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மற்றும் [R], [A] வை விளக்குகிறது✓
- Both [A] and [R] are true and [R] does not explains [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்கவில்லை
- [A] is correct and [R] is false[A] சரியானது மற்றும் [R] தவறானது
- [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
-
The first blue print for Indian planning came from an engineer administratorஇந்தியாவின் திட்டமிடலுக்கான வரைபடங்கள் முதலில் எந்த பொறியாளர் நிர்வாகியிடமிருந்து வந்தன
- M. VisvesvarayaM. விஸ்வேஸ்வரையா✓
- Nehruநேரு
- S.N. AgarwalS.N. அகர்வால்
- M.N. RoyM.N. ராய்
-
Which one of the following was not identified under the Basic Minimum Services (BMS) programme of the Ninth Five Year Plan?கீழ்வருபவில் எந்த ஒன்று, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச சேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?
- Provision of safe drinking waterஅனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
- Universalisation of Primary educationஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
- Development of renewable sources of energyபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்✓
- Availability of primary health facilitiesஆரம்ப சுகாதார வசதிகள் கிடைமுறை செய்தல்
-
Assertion [A] : There has been a significant rise in the percentage of labour force engaged in Industrial sector during 1990s and 2000s.கூற்று [A] : 1990கள் மற்றும் 2000களில் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.
Reason [R] : There has been a significant rise in employment in the construction sector between 1991 and 2011.
காரணம் [R] : 1991 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டுமானத் துறையில் வேலையாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்குச் சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்குச் சரியான விளக்கமல்ல
-
Which of the following is incorrectly attributed to the Highlights of MSMEs from Union Budget 2026-27?மத்திய பட்ஜெட் 2026-27இல் MSMEs (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தொடர்பான சிறப்பம்சங்களில் பின்வருவனவற்றுள் எது தவறானது?
- (i) Dedicated Support to MSMEs
- (ii) Strengthening financial and Market access
- (iii) Linking GeM with TReDS to standardize and expedite payments and working capital flow for MSMEs
- (iv) Double digital window for faster clearances reducing delays and compliance burdens
- (i) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரத்யேக ஆதரவு
- (ii) நிதி மற்றும் சந்தைக்கான அணுகுமுறைகளை வலுப்படுத்துதல்
- (iii) MSMEs-க்களுக்கான கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனப் பரிமாற்றத்தைச் சீராக்கவும் விரைவுபடுத்தவும் GeMஐ TReDS-உடன் இணைத்தல்
- (iv) இரட்டை இலக்க சாளர முறையால் தாமதங்களையும் இணக்கச் சுமையையும் குறைத்து, விரைவான அனுமதிக்கு உதவும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
- (i), (ii), (iii) only(i), (ii), (iii) மட்டும்
-
Arrange the following events in chronological orderபின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அடுக்குக.
- 1. Foreign Exchange Management Act
- 2. Bank Regulation Act
- 3. Factoring Regulation Act
- 4. Payment and settlement systems Act
- 1. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்
- 2. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்
- 3. காரணிப்படுத்தல் ஒழுங்குமுறைச் சட்டம்
- 4. செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
-
The Tamil Nadu Government implemented Kalaignar Magalir Urimai Thogai Scheme for the Welfare of Women. Which of the following is/are the rationale for the schemeபெண்களின் நலனுக்காக தமிழக அரச கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்த காரணம் இந்தத் திட்டத்திற்கான நியாயமான விளக்கம்.
- (i) Gender disparity in annual income according to the Global Gender Gap Report 2023
- (ii) Changing the poor social status of women
- (iii) Upliftment of rural women
- (iv) Recognize the countless hours of silent work put in by women
- (i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு
- (ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற
- (iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு
- (iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓
-
Kalaignarin Anaithu Grama Orunginaintha Velan Valarchi Thittam aims atகலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம்
- 1. Increasing the cultivable area
- 2. Bringing fallow land under cultivation
- 3. Changing the crop pattern with introduction of new crops
- 4. Augmenting water resources
- 1. சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்தல்
- 2. தொடர்ந்து நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல்
- 3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்
- 4. நீர் ஆதாரங்களை பெருக்குதல்
- 1, 2 and 3 are correct1, 2 மற்றும் 3 ஆகியவை சரி
- 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 ஆகியவை சரி
- 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 ஆகியவை சரி✓
- 1, 2, 3 and 4 are correct1, 2, 3 மற்றும் 4 ஆகியவை சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →