Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Economics — 122 previous-year questions — page 1 of 5
Every Economics question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 122questionsவினாக்கள்
-
Assertion [A] : In India, the traditional small scale industries have greater employment potential than the modern small scale industries.கூற்று [A] : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
Reason [R] : The value of capital per worker in traditional small scale industries is smaller than the value of capital per worker in the modern small scale industries.
காரணம் [R] : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]க்கான சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are true but [R] is not a correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் இல்லை
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
-
Match the following:பின்வரும்வற்றைத் தொகுத்துக :
(a) Tax on income 1. Non tax revenue of State Government (b) Sales tax 2. Tax revenue of Central Government (c) Interest receipts from railways 3. Non tax revenue of Central Government (d) Court fees 4. Tax revenue of State Government (a) வருமான வரி 1. மாநில அரசின் வரியில்லா வருவாய் (b) விற்பனை வரி 2. மைய அரசின் வரி வருவாய் (c) இரயில்வேயிலிருந்து கிடைக்கும் வட்டி வரவுகள் 3. மைய அரசின் வரியில்லா வருவாய் (d) கோர்ட்டு கட்டணங்கள் 4. மாநில அரசின் வரி வருவாய் - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Assertion [A] : Goods and Services Tax in India is a comprehensive, multistage, destination-based tax that is levied on every value addition.கூற்று [A] : இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
Reason [R] : The moto is 'One Tax, One Market, One Nation'.
காரணம் [R] : இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு" ஆகும்.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல [A] என்பது சரி
-
The Period of Tenth Five Year plan isபத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
- 2002–20072002–2007✓
- 2007–20122007–2012
- 1997–20021997–2002
- 1992–19971992–1997
-
The classical economists believed in ________ policy.பழமைப் பொருளியல் அறிஞர்கள் ________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
- Free tradeதடையில்லா வாணிபம்✓
- Industrialதொழில்துறை
- Export and Importஏற்றுமதி மற்றும் இறக்குமதி
- Commerceவாணிகம்
-
Among the following taxes which is not considered as a direct tax ?கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?
- Income taxவருமான வரி
- Sales taxவிற்பனை வரி✓
- Gift taxவெகுமதி வரி
- Wealth taxசொத்து வரி
-
New Agricultural Price Policy was announced in the yearபுதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
- 19841984
- 19761976
- 19961996
- 19861986✓
-
Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
Reason (R) : Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
- (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
- (A) is false but (R) is true(A) தவறு; ஆனால் (R) சரி
- Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்✓
- Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
-
The first stage of the strategy related to Intensive Agricultural District Programme was started in the yearதீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
- 1951–521951–52
- 1960–611960–61✓
- 1965–661965–66
- 1990–911990–91
-
Which one of the following is not a function of the Reserve Bank of India ?பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
- Issue of currency notes of various denominationsபல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
- It is the banker to the Governmentஅரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
- It is bankers' bankவங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
- Issues credit to individualsதனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்✓
-
Reserve Bank of India was established in the yearஇந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
- 19351935✓
- 19491949
- 19501950
- 1957.1957.
-
Land reforms provideநிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
- Finance for improving fertility of land holdingநிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
- Incentives and encouragement to land ownersநில உடைமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
- Incentives and encouragement to the tillersநிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது✓
- Finance for starting petty shops for farmersவிவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது
-
Which among the following sectors has the largest contribution to the Gross Domestic Savings in India?பின் கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் எந்த துறை இந்தியாவின் மொத்த நாட்டு சேமிப்பில் மிக அதிக பங்களிப்பு செய்கிறது?
- Public sectorபொதுத் துறை
- Private sectorதனியார் துறை
- Unorganised sectorஅமைப்புசாரா துறை
- Household sectorகுடும்பங்களின் துறை✓
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Gold collar workers 1. Involved in quaternary activities (b) White collar workers 2. Involved in secondary activities (c) Red collar workers 3. Involved in quinary activities (d) Blue collar workers 4. Involved in primary activities. Codes :
பட்டியல் I பட்டியல் II (a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் (b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் (c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் (d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள். குறியீடுகள் :
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Which of the following statements are true about Micro, Small and Medium Enterprises (MSMEs) in Tamil Nadu?தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
- (i) Tamil Nadu ranks third in the country in Udyam Registrations.
- (ii) 30% of the state's entrepreneurs are women.
- (iii) Coimbatore has the most number of MSMEs in the state.
- (i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- (ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
- (iii) கோயம்புத்தூரில் தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டுமே
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டுமே✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டுமே
-
What was the cause for high inflation in India?இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்
- High demandஅதிக தேவை
- Weaken rupee against the dollarடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு✓
- Low productionகுறைவான உற்பத்தி
- Low money supplyகுறைவான பண அளிப்பு
-
Match the following:பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) First Five Year Plan 1. Economic stability (b) Second Five Year Plan 2. Growth with stability (c) Third Five Year Plan 3. Problems of refugees, food shortage and inflation (d) Fourth Five Year Plan 4. Self-generating economy (a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை (b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி (c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள் (d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
In the context of consumerism, the term 'Aparigraha' meansநுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
- limiting our wantsதேவைகளைக் கட்டுப்படுத்துதல்
- satisfying with minimum needsகுறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
- satisfying only what is necessaryஎது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
- all of these.இவை அனைத்தும்.✓
-
Consider the following statements :
Available primary energy sources in India are
I. Coal and Lignite
II. Oil and Gas
III. Oil alone
IV. Electricity.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள் :- I & II are correctI மற்றும் II சரியானவை
- II & III are correctII மற்றும் III சரியானவை
- III alone is correctIII மட்டும் சரியானது
- I, II & IV are correctI, II மற்றும் IV சரியானவை✓
-
Which among the following is correct regarding the target of literacy in Tenth Plan?பின்வருவனவற்றுள் பத்தாவது காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
- to increase of literacy to 75% within the plan periodதிட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு✓
- to increase of literacy to 80% within the plan periodதிட்டக்காலத்தில் 80 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
- to increase of literacy to 70% within the plan periodதிட்டக்காலத்தில் 70 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
- to increase of literacy to 85% within the plan periodதிட்டக்காலத்தில் 85 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
-
Arrange poverty eradication schemes in chronological order.வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.
- 1. National Rural Livelihood Mission
- 2. Rajiv Awas Yojana
- 3. Bharat Nirman Yojana
- 4. National Food Security Scheme
- 1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
- 2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா
- 3. பாரத் நிர்மான் யோஜனா
- 4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்
- 1 2 4 31 2 4 3
- 3 1 4 23 1 4 2
- 3 2 1 43 2 1 4✓
- 2 3 4 12 3 4 1
-
Assertion (A) : RBI controls the supply of money in the Economy.கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.
Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation.
காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
- (A) is false, (R) is true(A) தவறு; (R) சரி
- (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
- (A) is true, but (R) is not the correct explanation of (A)(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
- Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்✓
-
The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
- 20022002
- 20092009✓
- 20132013
- 20162016
-
Which of the following statement is/are correct about the NITI Ayog?
I. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Governing Council
II. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog.
III. Finance Minister of India acts as Vice Chairmanகீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது?
I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.- Only II and IIIII மற்றும் III மட்டும்
- Only IIII மட்டும்✓
- Only II மட்டும்
- Only I and III மற்றும் II மட்டும்
-
The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala wasS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
- Agricultural developmentவேளாண்மை வளர்ச்சி
- Growth of cottage and village industriesகுடிசை மற்றும் கிராமிய தொழில்களின் வளர்ச்சி
- To achieve equalityசமத்துவத்தை அடைதல்
- To raise the material as well as the cultural level of Indian massesஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →