Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 7 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 7 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.180 செ.மீ. சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு காண்க.
- 1558.8 cm²1558.8 செ.மீ.²✓
- 1885.5 cm²1885.5 செ.மீ.²
- 1585.8 cm²1585.8 செ.மீ.²
- 1888.5 cm²1888.5 செ.மீ.²
-
On April 10, 1802, the Great Trignometrical Survey of India Commenced its work from __________ city.இந்திய முக்கோணவியல் ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 10, 1802 - ஆம் ஆண்டு --- நகரில் தனது ஆய்வினைத் தொடங்கியது.
- Delhiடில்லி
- Calcuttaகல்கத்தா
- Bombayபம்பாய்
- Madrasசென்னை✓
-
"Vendharkku Oli" - What is the meaning propounded in this Thirukkural?"வேந்தர்க்கு ஒளியாவது" என்று திருக்குறள் எதனைக் கூறுகின்றது?
- (i) Kodai (Donation)
- (ii) Ali (Kindness)
- (iii) Protective Sceptre (Sengol Kudiyombal)
- (i) கொடை
- (ii) அளி
- (iii) செங்கோல் குடியோம்பல்
- (i) only(i) மட்டும்
- (i), (iii) only(i), (iii) மட்டும்
- (i), (ii) only(i), (ii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Who said, Delegated legislation and administrative tribunals are the manifestation of "New despotism"?சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், "புதிய சர்வாதிகாரத்தின்" வெளிப்பாடு எனக் கூறியவர் யார்?
- John E. Kersellஜான். E. கெர்செல்
- Sir Cecil Carrசர். சிசில் கார்
- Lord Hewardலார்ட் ஹிவார்டு✓
- D.L. HewitD.L. ஹிவிட்
-
The first step in the seed germination is imbibition of water which induce theவிதை முளைத்தலின் முதல் நிலையாக நீர் உறிஞ்சப்படும் போது, இது எதை தூண்டுகிறது?
- Stimulation of plumuleமுளை குருத்து தூண்டப்படுகிறது
- Breaking dormancyவிதை உறக்கம் தடைபடுகிறது
- Growth of radicleவிதைவேர் வளர்கிறது
- Resumes metabolic activitiesசெல் இயக்கம் துவங்குகிறது✓
-
'Damin-i-koh' was the land given by the British to the'டாமின்-இ-கோஹ்' என்னும் நிலம் ஆங்கிலேயர்களால் ----க்கு வழங்கப்பட்டது
- Santhal tribesசந்தால் பழங்குடியினர்✓
- Kolu tribesகோல் பழங்குடியினர்
- Garo tribesகரோ பழங்குடியினர்
- Munda tribesமுண்டா பழங்குடியினர்
-
Find out the missing value in the given figure.
[Figure: circle divided into sections with values 4, 7, 2, 9, 3, 8, 11, 5 on outer ring and 1, 125, 27, ? in inner sections]கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க.- 88
- 6464
- 216216✓
- 2525
-
Which among the following statements is/are best explaining the objective of "Ennum Ezhuthum Scheme"?
I. The scheme is launched to help the children make up the loss of learning due to corona pandemic.
II. The scheme is launched with the purpose of education for all.
III. The scheme is launched with noble objective of fastening equality in society.
IV. The scheme is launched with the aim that all children below 8 years of age should be able to read, write and know numerals by 2025."எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுகளில் எது சிறப்பாக விளக்குகிறது?
I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது- I onlyI மட்டும்
- I, II and III onlyI, II மற்றும் III மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்✓
-
The next term of the Alphanumeric series C4X, F9U, I16R, isC4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு
- K25PK25P
- L25PL25P
- L25OL25O✓
- L27PL27P
-
Consider the statement of the Judicial power of the Governors of the States.
Choose the correct answer from the option given below :மாநில ஆளுநரின் "நீதிமன்ற அதிகாரம்" குறித்துக் கீழ்க்கண்ட கூற்றைக் கருதுக.
விருப்பத் தெரிவில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
துணிபு [A] : மன்னிப்பு அளிக்கும் அதிகாரம், 161-வது சட்ட உறுப்பின் கீழ், மிகவும் விரிவானது, அது எந்த எல்லையையும் கொண்டிருக்கவில்லை.
காரணம் [R] : அவளோ/அவரோ, அறிவை நன்கு செலுத்தி ஆராயாத பொழுதும், உரிய நம்பகமான ஆவணங்களைப் பரிசீலிக்காத பொழுதும் அத்துமீறும் உணர்வுக்கு ஆட்பட்டிருக்கும் போது நீதிப்புனராய்வு என்பது சாத்தியமானதாகும்.Assertion [A] : The power of granting pardon under article 161 is very wide and do not contain any limitation.
Reason [R] : Judicial review is possible, when he/she on the ground of non-application of mind and non-consideration of relevant material and suffers from arbitrariness.
- [A] is true [R] is false[A] சரி [R] தவறு
- [R] is true [A] is false[R] சரி [A] தவறு
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]-யும் [R]-யும் சரி ஆனால் [R] என்பது [A]-வுக்குச் சரியான விளக்கமாகாது✓
- Both [A] and [R] are true [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கமாகும்
-
Which of these actions cannot lead to Truth-Consciousness?கீழ்க்காண்பவற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?
- Porul Allavatrai Porul Endru Unarthalபொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்✓
- Saarbu Unarndhu Saarbu Keda Ozhugalசார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்
- Aiyathin Neengi Thelithalஐயத்தின் நீங்கித் தெளிதல்
- Sirappu enum semporul Kaanpadhuசிறப்பு என்னும் செம்பொருள் காண்பது
-
Why is the Himalayan region poor in mineral resources?இமயமலைப் பகுதியில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?
- Displacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complexபாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியது✓
- It is made up of crystalline rockஇது படிகப் பாறையால் ஆனது
- The terrain makes exploitation of minerals difficultநிலப்பரப்பு கனிமங்களை எடுப்பதை கடினமாக்குகிறது
- The climatic conditions are not suitable for exploitation of mineralsதட்பவெப்ப கனிமங்களை எடுப்பதற்கு ஏற்றதல்ல
-
Which Biodiversity park in India was announced as the 1st "Other Effective Area - based Conservation Measures" (OECMs) site?இந்தியாவில் உள்ள எந்த பல்லுயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு தளமாக (OECMs) அறிவிக்கப்பட்டுள்ளது
- Tilpath Valley Biodiversity Parkதில்பத் பள்ளத்தாக்கு பல்லுயிர்ப் பூங்கா
- Aravalli Biodiversity Parkஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா✓
- Yamuna Biodiversity Parkயமுனா பல்லுயிர்ப் பூங்கா
- Adayar Ecoparkஅடையாறு சுற்றுச்சூழல் பூங்கா
-
Read the following passage and answer the item that follows :
Agriculture continues to be the backbone of the state economy, as it provides livelihood security and food security. The overall crop yields in the state is bright. The South West monsoon rainfall was normal and its even distribution helped to recharge of groundwater considerably and kept the state with adequate storage. All these factors made the irrigation scenario in the state encouraging. As a result more area was brought under cultivation. The government also provided adequate and timely supply of inputs through its agricultural extention centres. Sufficient and timely crop loans were made available for the eligible farmers through primary Agricultural Cooperative Societies.
Which of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்கு விடையளி.
மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. மாநில பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழைப் பொழிவு இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க அளவு மீள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது. இவையனைத்தும் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன குழமை ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளை சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவும் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது.
பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?- Agriculture of the state still remain a lifeline for the peopleமாநில வேளாண்மையே மக்களுக்கு இன்றும் உயிர்ப்பாதையாக உள்ளது
- Due to proper rainfall and government effort to provide agricultural loan and inputs agriculture turned prosperityசரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மை செழிப்படைந்துள்ளது✓
- Primary agricultural cooperative banks play a crucial role in agricultural developmentவேளாண் அபிவிருத்தியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
- Over exploitation of ground water to agricultural sector will affect the growth of other sectorsவேளாண்மைக்கு நிலத்தடி நீரை மிகையாகப் பயன்படுத்துவது பிற துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்
-
Which of the following statements about the Guptha society is true?கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் குப்தர்கள் காலச் சமூதாயம் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
- 1. The Guptha emperors called themselves as Parama Bhagavatas
- 2. Trade with Rome and China flourished
- 3. Women were debarred from exercising public rights
- 4. The custom of Sati was practiced by them
- 1. குப்த அரசர்கள் தங்களைப் பரமபாகவதர் என்று அழைத்துக் கொண்டனர்
- 2. சீனாவுடனும், ரோமுடனும் வியாபாரம் செழித்தது
- 3. பொது நிகழ்ச்சிகளில் பங்குபெற பெண்களுக்குத் தடை இருந்தது
- 4. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
- Only 4 is correct4 மட்டும் சரி
- 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி✓
-
Which chapter in Thirukkural reflects the Northern Scholar's ideology of philosophical knowledge?வடநூலாரின் 'தத்துவ ஞானம்' என்னும் கருத்தை முன்னிறுத்தும் திருக்குறளின் அதிகாரத்தைக் கண்டறிக.
- Not Killingகொல்லாமை
- Instabilityநிலையாமை
- Renunciationதுறவு
- Understanding the truthமெய் உணர்தல்✓
-
Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Pitt's India Act, 1784 1. Decentralization of the legislative powers of Governor-General (b) Charter Act, 1813 2. Governor-General's Government was known as Government of India for the first time (c) Charter Act, 1833 3. Appointment of Board of control of six members (d) Indian councils Act, 1861 4. Deprivation of East Indies Company's monopoly of trade in India (a) பிட் இந்தியச் சட்டம், 1784 1. கவர்னர்-ஜெனரலின் சட்டமியற்றும் அதிகாரங்களை அதிகாரப் பரவலாக்கம் செய்தல் (b) சாசனச் சட்டம், 1813 2. முதன்முறையாக கவர்னர்-ஜெனரலின் அரசாங்கம் 'இந்திய அரசாங்கம்' என அழைக்கப்பட்டது (c) சாசனச் சட்டம், 1833 3. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்கப்படுதல் (d) இந்தியக் கவுன்சில் சட்டம், 1861 4. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக முற்றுரிமையைக் குறைத்தல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
The government has initiated the following key aspects for facilitating the MSME sector :MSME இன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது
- (i) Access to credit
- (ii) Access to market
- (iii) Technology upgradation
- (iv) Social security for MSME sector employers
Select the correct option :
- (i) கடன் அணுகல்
- (ii) சந்தை அணுகல்
- (iii) தொழில் நுட்ப மேம்படுத்துதல்
- (iv) MSME -இன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையினைக் காண்க.
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
__________ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி __________ ஆகும்.
- Solar Cities Programme (SCP)சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
- National Solar Mission (NSM)தேசிய சூரிய ஒளி பணி✓
- Solar Green Building (SGB)சூரிய ஒளி பச்சை கட்டிடம்
- Development of Solar Cities (DSC)சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
-
Which of the following are wrongly paired?பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டவை எவை?
- 1. Obligation for the state and individual to protect environment - Art 48A
- 2. Early childhood care and education for all children until they complete the age of fourteen years - Art 45
- 3. Separate judiciary from the executive in the public services of the state - Art 39
- 4. Voluntary formation, autonomous functioning of cooperative societies - Art 44
- 1. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரச மற்றும் தனிநபரின் கடமை - விதி 48A
- 2. அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி - விதி 45
- 3. மாநிலத்தின் பொதுச் சேவைகளின் நிர்வாகத்திலிருந்து தனி நீதித்துறை - விதி 39
- 4. தன்னார்வ உருவாக்கம், கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி செயல்பாடு - விதி 44
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (3) and (4) only(3) மற்றும் (4) மட்டும்✓
-
'Promoting soil health' and 'making rainwater harvesting compulsory' - These statements relates to'மண்வளத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்' - இக் கூற்றுடன் தொடர்புடையது
- Green revolutionபசுமைப்புரட்சி
- Blue revolutionநீலப் புரட்சி
- Evergreen revolutionபசுமையான புரட்சி✓
- Yellow revolutionமஞ்சள் புரட்சி
-
Nadaakondro! Kadaakondro!!
avazhi nallai vazhiya nilanse!
Whose character plays an important role in the shaping of the world Emancipation in Purananuru?"நாடாகொன்றோ காடாகொன்றோ
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
மேற்காணும் புறநானூற்றுப் பாடல் உலக மேம்பாட்டிற்கு யாரின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கூறுகின்றது?- Women (Pendir)பெண்டிர்
- Men (Aadavar)ஆடவர்✓
- King (Arasar)அரசர்
- Priest (Anthanar)அந்தணர்
-
Match the List I with List II :
List I (Hydrated Salt) List II (Uses)பட்டியல் Iயை பட்டியல் II உடன் பொருத்துக :
பட்டியல் I பட்டியல் II
(நீரேறிய உப்பு) (பயன்கள்)(a) FeSO₄ · 7H₂O 1. Textile Industry (b) Na₂CO₃ · 10H₂O 2. Laboratory Reagent (c) CuSO₄ · 5H₂O 3. Making of Mohr's Salt (d) ZnSO₄ · 7H₂O 4. Fungicide (e) BaCl₂ · 2H₂O 5. Manufacture of Glass (a) FeSO₄ · 7H₂O 1. ஜவுளித் தொழில் (b) Na₂CO₃ · 10H₂O 2. ஆய்வகக் காரணி (c) CuSO₄ · 5H₂O 3. மோர்ஸ் உப்புத் தயாரித்தல் (d) ZnSO₄ · 7H₂O 4. பூஞ்சைக் கொல்லி (e) BaCl₂ · 2H₂O 5. கண்ணாடி தயாரித்தல் - (a)-5 (b)-3 (c)-4 (d)-1 (e)-2(a)-5 (b)-3 (c)-4 (d)-1 (e)-2
- (a)-4 (b)-5 (c)-3 (d)-1 (e)-2(a)-4 (b)-5 (c)-3 (d)-1 (e)-2
- (a)-3 (b)-5 (c)-4 (d)-1 (e)-2(a)-3 (b)-5 (c)-4 (d)-1 (e)-2✓
- (a)-5 (b)-4 (c)-1 (d)-3 (e)-2(a)-5 (b)-4 (c)-1 (d)-3 (e)-2
-
Which is the stronger acid than phenol due to the presence of three same electron with drawing groupsபீனாலை விட வலிமை மிகு, மற்றும் மூன்று அதே எலக்ட்ரான் கவர் திறன் கொண்ட தொகுதிகள் பெற்றுள்ள அமிலம் எது?
- (i) O-Toluic Acid
- (ii) Benzoic acid
- (iii) Salicylic Acid
- (iv) Picric Acid
- (i) O-டொலியிக் அமிலம்
- (ii) பென்சாயிக் அமிலம்
- (iii) சாலிசிலிக் அமிலம்
- (iv) பிக்ரிக் அமிலம்
- (iii) only(iii) மட்டும்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
The compound interest on ₹ 16,000 for 9 months at 20% per annum compounded quarterly is20%, ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ₹ 16,000-க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது
- ₹ 2,599₹ 2,599
- ₹ 2,572₹ 2,572
- ₹ 2,522₹ 2,522✓
- ₹ 2,502₹ 2,502
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →