Group 1 · 2022குரூப் 1 · 2022
TNPSC Group 1 2022 — question paper with answers — page 8 of 8TNPSC குரூப் 1 2022 — வினாத்தாளும் விடைகளும் — page 8 of 8
All 195 questions from the TNPSC Group 1 2022 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2022 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2022exam yearதேர்வு ஆண்டு
-
Choose the correct chronological order :கால வரிசைப்படி சரியானவற்றை தேர்ந்தெடு/முறைப்படுத்துக :
- Rajadhiraja I, Parantaka I, Kulothunga I, Rajaraja Iஇராஜாதிராஜன் I, பரந்தகன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I
- Kulothunga I, Parantaka I, Rajadhiraja I, Rajadtiya Iகுலோத்துங்கன் I, பரந்தகன் I, இராஜாதிராஜன் I, இராஜாதித்தியா I
- Parantaka I, Rajaraja I, Rajadhiraja I, Kulothunga Iபரந்தகன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I, இராஜராஜன் I
- Parantaka I, Rajadhiraja I, Kulothunga Iபரந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I✓
-
Which is the international coalition of solar-resource rich countries that are collectively addressing common challenges on solar-energy applications?சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான - சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?
- International Solar Energy Society (ISES)சர்வதேச சூரிய ஆற்றல் சமூகம் (ISES)
- International Solar Alliance (ISA)சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)✓
- International Renewable Energy Agency (IRENA)சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை (IRENA)
- International Energy Agency (IEA)சர்வதேச ஆற்றல் முகமை (IEA)
-
In A.D. 1894, the Kashi Nagri Pracharini Sabha was founded inகி.பி. 1894 இல் காசி நகரி பிரச்சாரினி சபா __________ ல் நிறுவப்பட்டது
- Delhiடெல்லி
- Bombayபம்பாய்
- Madrasசென்னை✓
- Calcuttaகல்கத்தா
-
Which one of the following is NOT an objective of the Union Government's 'Beti Bachao Beti Padhao' scheme?கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?
- (i) Prevention of gender biased sex selective elimination
- (ii) Ensuring survival and protection of the Girl child
- (iii) Ensuring education and participation of the Girl child
- (iv) Creating a fixed deposit in the name of the Girl child concerned
- (i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
- (ii) பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
- (iii) பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
- (iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
- (i) only(i) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (iii) only(iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
Consider the following statement and find the incorrect answer:கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதவும், தவறான கூற்றுகளைக் கண்டறியும்.
- 1. The constitution imposes limits to President to give assent to the bill passed by the state legislature
- 2. The President may refer a reserved bill to the Supreme Court, under Article 143 for discussion
- 3. The power of the President assent to the bill passed by the State Legislature and Parliament are the same
- 4. The President cannot keep a bill of the Parliament pending at his hands for an indefinite period of time
- 1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசியலமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது
- 2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்
- 3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.
- 4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது.
- 1 and 4 only incorrect1 மற்றும் 4 மட்டும் தவறு
- 1 and 3 only incorrect1 மற்றும் 3 மட்டும் தவறு
- 2 and 3 only incorrect2 மற்றும் 3 மட்டும் தவறு
- 3 and 4 only incorrect3 மற்றும் 4 மட்டும் தவறு✓
-
Which one of the following is not correctly matched?கீழ்வருவனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
- (A) Arif Qandhari - Tarikh-i-Akbari
- (B) Nizamuddhin Ahmad - Tabaqat-i-Akbari
- (C) Abdul Qadir Badaoni - Muntakhab-ut-Tawarikh
- (D) Muhammad Khan - Khulasat Tawarikh
- (A) ஆரிப் குந்தாரி - தாரிக்-இ-அக்பரி
- (B) நிசாமுதீன் அகமது - தபகத்-இ-அக்பரி
- (C) அப்துல் காதர் படேளனி - முந்தகப்-உட்-தவாரிக்
- (D) முகமது கான் - குலாசத் தவாரிக்
- Arif Qandhariஆரிப் குந்தாரி
- Nizamuddhin Ahmadநிசாமுதீன் அகமது
- Abdul Qadir Badaoniஅப்துல் காதர் படேளனி
- Muhammad Khanமுகமது கான்✓
-
Need for a constitution for free India was first suggested byசுதந்திர இந்தியாவிற்கு ஓர் அரசமைப்புச் சட்டம் வேண்டும் என முதலில் பரிந்துரைத்தவர்
- Motilal Nehruமோதிலால் நேரு
- M.N. RoyM.N. ராய்✓
- Subash Chandra Boseசுபாஷ் சந்திர போஷ்
- Mahatma Gandhiமகாத்மா காந்தி
-
Assertion [A] : Federalism is merely an institutional arrangement for sharing power across multiple levels of government based on the principle of shared rule and self rule.கூற்று [A] : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.
Reason [R] : Federations, have constantly adjusted and adopted depending on political, social and economic situations.
காரணம் [R] : கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக் கொள்கின்றன.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல
-
The enzyme involved in unwinding of DNA isDNA-வை இரண்டு இழைகளாக பிரிப்பதில் ஈடுபடும் நொதி யாது?
- Telomeraseடெலோமரேஸ்
- Helicaseஹெலிகேஸ்✓
- Polymeraseபாலிமெரேஸ்
- Ligaseலிகேஸ்
-
Which of the following are correctly paired :பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
- (i) KVK - Kisan Vigyan Kendra
- (ii) SMAE - Sub Mission on Agriculture Extension
- (iii) NSDA - National Skill Development Agency
- (iv) ATMA - Agricultural Technology Management Agency
- (i) KVK - கிசான் விஞ்ஞான் கேந்ரா
- (ii) SMAE - வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை
- (iii) NSDA - தேசிய திறன் மேம்பாட்டு முகமை
- (iv) ATMA - விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
- (i), (iii) and (iv)(i), (iii) மற்றும் (iv)
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
Which of the following statement(s) is true about the union territories of India?இந்தியாவின் யூனியன் பிரதேசங்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- 1. From 26th Jan. 2020, Dadra and Nagar Haveli and Daman and Diu are combined to a single territory.
- 2. Articles 239 to 241 in Part VII of the constitution deal with union territories.
- 3. The two union territories from the former state of Jammu and Kashmir are Ladakh and Jammu and Kashmir.
- 4. The largest union territory of India is Andaman and Nicobar Islands.
- 1. 26 ஜனவரி 2020 முதல் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ஒரே பிரதேசமாக இணைக்கப்பட்டுள்ளன.
- 2. அரசியலமைப்பின் VII பகுதியில் உள்ள 239 முதல் 241 வரையிலான பிரிவுகள் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை.
- 3. முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்கள், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும்.
- 4. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
- 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி
- 3 and 4 are correct1 மற்றும் 3 சரி✓
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி
- 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 சரி
-
Akila scored 80% of marks in an examination. If her score was 576 marks. Find the maximum marks of the examination.அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க.
- 640640
- 680680
- 720720✓
- 700700
-
The Lowest Common Multiple (LCM) of two numbers is 6 times of their Highest Common Factor (HCF). If the HCF is 12 and one of the number is 36, then the other number isகொடுக்கப்பட்ட இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கின் மதிப்பானது, அவ்விரு எண்களின் மீப்பெரு பொதுக் காரணியின் மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். மேலும் அவ்விரு எண்களின் மீப்பெரு பொது காரணியின் மதிப்பு 12 மற்றும் அவ்விரு எண்களில், ஒரு எண்ணானது 36 எனில், மற்றொரு எண்ணின் மதிப்பு
- 4848
- 7272
- 2424✓
- 1212
-
Which one of following statement is correct about the aim of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY) இன் முக்கிய நோக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்த ஒன்று சரியானது?
- to provide Health Service and Clean Environment to Rural Womenசுகாதாரச் சேவை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை கிராமப்புற மகளிருக்கு வழங்க வேண்டும்
- to provide clean energy fuel of liquified petroleum gas to all rural householdsஅனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்✓
- to provide clean water and environmentசுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை வழங்க வேண்டும்
- to provide quality food and healthசுத்தமான உணவு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும்
-
Match the following constitutional articles related to Chief Minister of a State:
Subject Matter - Article No.மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக :
பொருள் - அரசமைப்பு விதி எண்- (a) Council of Ministers to aid and advice the Governor - 1. 164
- (b) Other provisions as to Ministers - 2. 166
- (c) Conduct of business of the Government of a state - 3. 167
- (d) Duties of Chief Minister with respect to furnishing of information to Governor etc. - 4. 163
- (a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு - 1. 164
- (b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் - 2. 166
- (c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் - 3. 167
- (d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் - 4. 163
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
"Nambikkai Inaiyam (NI)" a Tamil Nadu Government project about"Nambikkai Inaiyam (NI)" தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது
- Statewide Block chain infrastructureமாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு✓
- Source of resident data for Tamil Naduதமிழ்நாட்டிற்கான குடியுரிமை தரவுகளின் ஆதாரம்
- Unified access to e-services of different government departmentsபல்வேறு அரசாங்கத் துறைகளின் e-சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகல்
- Providing professional resources and training to decision makersமுடிவெடுப்பவர்களுக்கு தொழில்துறை வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்
-
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக
(a) Polyethyleneglycol 1. Herbicide (b) Bt Toxin 2. Stress Tolerance (c) Glyphosate 3. Insecticide (d) Proline 4. Cell Fusion (a) பாலி எதிலின் கிளைகால் 1. களைக்கொல்லி (b) Bt நச்சுகள் 2. அழுத்த சகிப்புத்தன்மை (c) கிளைபோசேட் 3. பூச்சிக்கொல்லி (d) புரோலின் 4. உயிரணு இணைவு - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Choose the correct answer :
The fundamental rights have been described asகீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அடிப்படை உரிமைகள் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது- (i) The Magna Carta of India
- (ii) The Conscience of the Constitution
- (iii) The soul of the constitution
- (iv) Inspiration from bill of rights of American constitution
- (i) இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்
- (ii) அரசியலமைப்பின் மனசாட்சி
- (iii) அரசியலமைப்பின் ஆன்மா
- (iv) அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)✓
-
Find the mismatched answer about the Indian Railway Zones.பின்வருவனவற்றுள் இந்திய ரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க.
- Southern - Chennaiதெற்கு - சென்னை
- Central - Jaipurமத்தியபகுதி - ஜெய்ப்பூர்✓
- Northern - New Delhiவடக்கு - புது தில்லி
- Eastern - Kolkataகிழக்கு - கொல்கத்தா
-
Kalaignarin Anaithu Grama Orunginaintha Velan Valarchi Thittam aims atகலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கம்
- 1. Increasing the cultivable area
- 2. Bringing fallow land under cultivation
- 3. Changing the crop pattern with introduction of new crops
- 4. Augmenting water resources
- 1. சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்தல்
- 2. தொடர்ந்து நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வருதல்
- 3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்
- 4. நீர் ஆதாரங்களை பெருக்குதல்
- 1, 2 and 3 are correct1, 2 மற்றும் 3 ஆகியவை சரி
- 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 ஆகியவை சரி
- 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 ஆகியவை சரி✓
- 1, 2, 3 and 4 are correct1, 2, 3 மற்றும் 4 ஆகியவை சரி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →