Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 11 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
பிறவினைத் தொடரைக் கண்டறிக.
- அன்பு பாடல் பாடினான்.
- கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
- அடிகள் மறை ஓதினார்.
- அரசன் மாலை அணிவித்தான்.✓
-
வழ்ச் விருத்தம் என்பது
- குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
- சிந்தடி நான்காய் ஒரு பொருளா மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது✓
- குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
- அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
-
"மாகதம்" எனப்படுவது
- மதுரகவி
- சித்திரகவி
- வித்தாரகவி✓
- ஆசுகவி
-
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
- யானையின் கண் சிறியது
- யானையின் கண்கள் சிறியது
- யானையின் கண்கள் சிறியன✓
- யானையின் கண் சிறியன
-
சரியான தொடரைக் கண்டறிக.
- தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
- என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
- நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
- “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்✓
-
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். – எவ்வகை வாக்கியம்?
- செயப்பாட்டுவினை
- செய்வினை
- பிறவினை
- தன்வினை✓
-
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
- அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
- அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.✓
- அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
- அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
-
சரியான எதுகையைத் தேர்க
'எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்'- எள்ளறு – வியப்ப
- புள்ளுறு – புன்கண்
- எள்ளறு – புள்ளுறு✓
- சிறப்பின் – புன்கண்
-
"மனக்குரங்கு" என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.
- உருவகம்✓
- வினையெச்சம்
- உவமைத்தொகை
- உரிச்சொற்றொடர்
-
கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று – தவறு; காரணம் – தவறு
-
செந்தமிழ் – இலக்கணக் குறிப்பு தருக.
- ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
- இரண்டாம் வேற்றுமைத் தொகை
- பண்புத் தொகை✓
- வினைத் தொகை
-
கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
-
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' – இக்குறளில் அடி எதுகையாவது.- குணமென்னும் – குன்றேறி
- குன்றேறி – நின்றார்
- குணமென்னும் – கணமேயும்✓
- கணமேயும் – காத்தல்
-
அரைப்புள்ளி அமையும் இடங்கள் :
கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
- கூற்று சரி; காரணம் சரியன்று
- கூற்று சரியன்று; காரணம் சரி
- கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
- கூற்று, காரணம் இரண்டும் சரி✓
-
தமிழெழுத்துக்களைக் கூட்டுக:
ருஅ + கூஅ = ?- கூகஉ
- ககூஉ
- கருக
- கஉகூ✓
-
நாட்டைக் காக்க இவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘இவர்’ என்பதன் இலக்கணம் யாது?
- ஒன்றொழிபொதுச் சொல்✓
- இனங்குறித்தல்
- தொடர்மொழி
- பொதுமொழி
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
படைமடம் பேசன் படான் கொடைமடம் படுதல் அல்லது- படைமடம் பேசன் படான் கொடைமடம் படுதல் அல்லது
- பேசன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்✓
- பேசன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்
- கொடைமடம் பேசன் படுதல் அல்லது படைமடம் படான்
-
'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
- தணி✓
- தணிந்த
- தணிந்து
- தனி
-
பொருத்துக :
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால் (b) ஐகாரக் குறுக்கம் 2. மரண்ம் (c) ஒளகாரக் குறுக்கம் 3. கூற்றீது (d) மகரக் குறுக்கம் 4. கடலை - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
பிறறைக் குறியை உள்ளடக்கம் பயன்படும் நிறுத்தக்குறியீடு எது ?
- விடுகுறி
- உடுக்குறி
- மேற்கோள் குறி
- பறர அடைப்புக் குறி✓
-
ழழுகல் – இலக்கணக் குறிப்பு தருக.
- தொழிற்பெயர்✓
- வினைபெய்ச்சம்
- வினையாலணைனும் பெயர்
- பண்புத்தொகை
-
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
- ஒன்றே கால் மாத்திரை
- ஒன்றரை மாத்திரை✓
- ஒன்றே முக்கால் மாத்திரை
- ஒரு மாத்திரை
-
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊண்பொழிபழிழா- ஊண் + பொழிய + விழா
- ஊண்பொதிய + விழா
- ஊண் + பொதி + விழா
- ஊண் + பொதி + அவிழா✓
-
விடைக்கேற்ற வினா அமைக்க.
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.- தல புராணங்கள் என்றால் என்ன?
- தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
- மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
- தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?✓
-
விடைக்கேற்ற வினா அமைத்தல்.
வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.- வணிக அறிவியல் என்றால் என்ன?
- எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?✓
- வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
- எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →