Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 7 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
மாறியுள்ள சொற்களில் முறையானவதை எழுதுக.
- பொன்செய்யும் மருந்து மனமே என்ற போதும்
- போதும் என்ற மருந்து பொன் செய்யும் மனமே
- மனமே என்ற மருந்து பொன் செய்யும் போது
- போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து✓
-
வரை — இவ்வோர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
- வரைதல்
- வரைந்த
- வரைந்தவன்✓
- வரைந்து
-
தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
- வினாப் பொருள் தரும் வாக்கியம்
- ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்✓
- தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
- ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
-
வா என்ற சொல்லின் பெயரெச்சம் குறிப்பிடுக
- வந்தான்
- வந்து
- வருதல்
- வந்த✓
-
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதைவால் உரை படிக்கப்பட்டது- செய்வினை வாக்கியம்
- செயப்பாட்டுவினை வாக்கியம்✓
- தன்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
சொற்களின் வகைகளைப் பொருத்திடுக :
(a) காற்று, பலகை 1. பெயர்த் திரிசொற்கள் (b) எயிறு, நக்குரவு 2. வடசொற்கள் (c) கமலம், புஷ்பம் 3. பெயர் இயற்சொற்கள் (d) கேணி, பெற்றம் 4. திசைச் சொற்கள் - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.- பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
- பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்✓
- பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
- ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
-
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி- c
- d✓
- a
- b
-
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக :
(a) நிகழ்காலப் பெயரெச்சம் 1. இல்லாத பொருள் (b) உடன்பாட்டுப் பெயரெச்சம் 2. அறிந்த பையன் (c) குறிப்புப் பெயரெச்சம் 3. ஓடுகிற குதிரை (d) ஈறுகெடாத பெயரெச்சம் 4. அறியாத குழந்தை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
உறுதிக் கூற்று : சுட்டெழுத்துகளை இடைக்கட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் : அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகிறது.- உறுதிக்கூற்று சரி காரணம் தவறு
- இரண்டும் தவறு
- உறுதிக்கூற்று தவறு காரணம் சரி
- இரண்டும் சரி✓
-
சரியான தொடரைத் தேர்வு செய்க.
- மாடுகள் மேய்ந்தது
- பறவைகள் பறந்தது
- மரம் வளர்ந்தன
- செடி கொடிகள் காற்றில் அசைந்தன✓
-
"விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?- மேற்கதுவாய் மோனை✓
- கீழ்க்கதுவாய் மோனை
- கூழை மோனை
- ஒரூஉ மோனை
-
பொருத்துக :
- (a) என்றல் 1. முற்றும்மை
- (b) நுந்தை 2. குறிப்பு வினைமுற்று
- (c) யாவையும் 3. மரூஉ
- (d) நன்று 4. தொழிற்பெயர்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன- மேற்கோள்குறிகள் வராது
- தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது✓
- அது, அவை - அங்கே என மாறும்
- காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
-
பிழை திருத்துக :
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் "ஓர்" பயன்படுத்த வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி✓
- காரணம், கூற்று – இரண்டும் சரி
- கூற்று, காரணம் – இரண்டும் தவறு
-
“அண்ணம் நுனிநா வருட” எவ்வெழுத்துகள் தோன்றும்?
- ரழ வரும்✓
- தந வரும்
- நன வரும்
- யத் தோன்றும்
-
"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" எனக் குறிப்பிடும் நூல்
- தொல்காப்பியம்
- நன்னூல்✓
- அகப்பொருள்
- அகத்தியம்
-
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி – இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
- அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
- அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
- அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை✓
- அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
-
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.
- கண்ணன் நேற்று வருவான்
- அன்பு நாளை வந்தான்
- கவின்மொழி வருவாள்
- பூமி சுழல்கிறது✓
-
பிழையான தொடரைக் கண்டறிக.
- போர்க்களத்தில் வீரர்கள் வயிற்றில் நீர் அருந்தினர்.
- அரசாணையைக் கண்டதும் ஆனைகள் காட்டிற்குள் விடப்பட்டன.
- குறைவில்லாமல் உண்ட நாய் குரைத்தது.
- பெருமலையைக் கண்டதும் மக்கள் மலைத்து போய்விட்டனர்.✓
-
பிழை திருத்தம் செய்க.
- வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்✓
- வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
- வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
- வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
-
"வை" என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
- வைத்த
- வைத்து
- வைத்தது
- வைத்தாள்✓
-
தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்.
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோழுதும் காலம் காட்டு.
III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன.
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகா பெயர்ச்சொல் ஆகும்.- IV, III, I சரியானவை
- II, III, IV சரியானவை
- I, II, IV சரியானவை✓
- III, I, II சரியானவை
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமார் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்- பரிதிமார் கலைஞர் என்ன செய்தார்?
- பரிதிமார் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?✓
- பரிதிமார் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?
- பரிதிமார் கலைஞரின் தொண்டு யாது?
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
- கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
- கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
- கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை✓
- கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →