Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 8 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
பிழையற்ற வாக்கியம் எது?
- ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
- ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
- ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்✓
- ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
-
ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நிலைமண்டில ஆசிரியப்பா
- நேரிசை ஆசிரியப்பா✓
-
இலக்கணம் குறிப்பு அறிதல்.(A) வேற்று, உலக்காறு – வினைகள்ச்சொல்கள். மேலும் மென்தொடர்.
(R) முற்று பெறாத வினைச்சொல் வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். குறிப்புகரம் என்று அழைக்கப்படுகின்றன. மென்தொடர் இறந்த காலத்தை உணர்த்தும்.- (A) சரி, (R) தவறு
- (A) சரி, (R) – (A)க்கு சரியான விளக்க மன்று
- (A) தவறு (R) சரி
- (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (A)க்கு (R) சரியான விளக்கமல்ல✓
-
தொழிற் பெயரைக் கண்டறிக.
'வா' –- வருதல்✓
- வந்து
- வந்தான்
- வந்த
-
பிரித்து எழுதுக :
'நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.- நீளு + உழைப்பு
- நீண் + உழைப்பு
- நீண்ட + உழைப்பு
- நீள் + உழைப்பு✓
-
அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
- மலர்கள் மலர்ந்தன✓
- மக்கள் கூடினர்
- மாணவர்கள் விளையாடினர்
- ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
-
பதிசெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
- அகவலோசை
- தூங்கலோசை
- செப்பலோசை✓
- துள்ளலோசை
-
வேர்ச்சொல் கண்டறிக.
வறுத்தான்- நஞ்ச
- எறத்து✓
- நஞ்சன்
- ஐம்து
-
அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக.
- மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம், மனத்துயர்
- மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு✓
- முந்நீர், மீமிசை, மனத்துயர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்
- மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை, மொழிபெயர்ப்பு
-
படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
- படித்து✓
- படித்தல்
- படித்த
- பாடுதல்
-
பிழையான தொடரைக் கண்டறிக?
- கட்டெழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும்
- ஒரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்
- உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
- இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகும்✓
-
“பட்டியுள காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்”
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.- அடிமறிமாற்றுப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்✓
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
-
கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக.
- பாத்திமா தமிழ் கற்றாள்
- பாத்திமா தமிழ் கற்பித்தாள்✓
- பாத்திமா மாணவர்களிடம் கூறினாள்
- பாத்திமாவிடம் மாணவன் தான் மழைகர்க்குச் செல்வதாகக் கூறினான்
-
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.- மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
- மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க✓
- மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
- மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்- நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
- நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
- இங்கு நகரப்பேருந்து நிற்குமா?✓
- இங்கு நகரப்பேருந்து வருமா?
-
"அறியாத பையன்" – என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
- இறந்தகாலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
- தெரிநிலைப் பெயரெச்சம்✓
-
'வலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு ———————
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
- எதிர்மறை வினையெச்சம்✓
-
தொடரமைக்க :
விரிந்தது – விரித்தது- மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
- மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
- மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
- மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது✓
-
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
- செல்வி பாடினாள் – திணை வழு
- என் மாமா வந்தது – திணை வழா நிலை
- நான் வந்தேன் – இட வழு
- நாய் கத்தும் – மரபு வழு✓
-
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். – பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
- அயற்கூற்று வாக்கியம்✓
- நேர்க்கூற்று வாக்கியம்
- கலவை வாக்கியம்
- எதிர்மறை வாக்கியம்
-
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்- I மற்றும் III
- II மற்றும் IV
- III மற்றும் IV✓
- II மற்றும் III
-
பின்வருவனவற்றுள் 'வினைத்தொகை' என்னும் இலக்கணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க
- கொலைப்புலி✓
- பொங்கு கடல்
- பொழிதருமணி
- செய்கொல்லன்
-
குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?
- ஒன்று
- இரண்டு
- ஒன்றரை
- அரை✓
-
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) விரிநகர் 1. பண்புத்தொகை (b) மலரடி 2. வினைத்தொகை (c) மா பலா வாழை 3. உவமைத்தொகை (d) முதுமரம் 4. உம்மைத்தொகை - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
னல முன்னும் ணள முன்னும் தங்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
- னல முன் டணவும் ணள முன் நனவும்
- னல முன் றடவும் ணள முன் ணணவும்
- னல முன் றனவும் ணளமுன் டணவும்✓
- னல முன் றணவும் ணளமுன் டனவும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →