Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 12 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
வழுஉச் சொல்லற்ற தொடர் எது?
- வலது பக்கம் கவறில் எழுதாதே
- வலப்பக்கச் கவறில் எழுதாதே✓
- வலப்பக்கச் கவற்றில் எழுதாதே
- வலதுபக்கச் கவற்றில் எழுதாதே
-
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
'பண்புப் பெயர்'- திட்டம்✓
- ஆட்டம்
- கோடல்
- பெறுதல்
-
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?- நிரல்நிறைப் பொருள்கோள்✓
- ஆற்றுநீர் பொருள்கோள்
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
-
பிழையான தொடரைக் கண்டறிக.
- காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
- மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
- காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது✓
- நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
-
கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் கட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ, யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
- கூற்று சரி; காரணம் தவறு
- கூற்று சரி; காரணம் சரி
- கூற்று தவறு; காரணம் சரி
- கூற்று தவறு; காரணம் தவறு✓
-
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
- மூன்றாம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
- ஆறாம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை✓
-
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
- உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
- உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்✓
- உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
-
பின்வரும் தொடரில் உள்ள பிழைகளை திருத்தி எழுதுக.
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்ல✓
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
- மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் இல்லை
-
எழுத்துவகை அறிந்து பொருத்துக :
(a) இயல் 1. உயிர் முதல் உயிரீறு (b) புதிது 2. உயிர் முதல் மெய்யீறு (c) ஆவி 3. மெய்ம்முதல் மெய்யீறு (d) வரம் 4. மெய்ம்முதல் உயிரீறு - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
– இதில் அமைந்து வரும் தொடைநயம்.- அடி முரண் தொடை✓
- அடி மோனைத் தொடை
- அடி இயைபுத் தொடை
- எதுவுமில்லை
-
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் ________- கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்✓
- பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
- முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
- அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
-
கூற்று : 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு
-
''ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு'' என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் 'பா' – எது?
- வெண்பா
- ஆசிரியப்பா✓
- கலிப்பா
- வஞ்சிப்பா
-
பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக.
பரிவ்ராதி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.- பரிவ்ராதி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றதா?
- பரிவ்ராதி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
- பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
- பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?✓
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
- சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு✓
- தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
- நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
- பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
-
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் – இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
- ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.✓
- ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
- ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
- ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
-
மோனைத் தொடை ——————— வகைப்படும்.
- ஆறு
- எட்டு✓
- ஐந்து
- மூன்று
-
பிரசினை வாக்கியத்திற்குப் பொருத்தமானதைக் கண்டறிக.
- ஆளியர் வழக்கப்படியில் வரையப்படுத்தகாண்சித்தார்
- கோவையில்லாது என் தாயமார் சென்னைக்கு வருவித்தேன்
- தேற்ற என் நண்பனுக்குப் பாடம் கற்பித்தேன்
- நான் உல்வலமிட, செவ்வாக்குன்னாயன் அல்லன்✓
-
பொருட்டன்று — பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக
- பொருட் + அன்று
- பொரு + அன்று
- பொருட்டு + அன்று✓
- பொருட் + டன்று
-
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?
- கொளல் வினா✓
- அறியா வினா
- ஐய வினா
- ஏவல் வினா
-
கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
- கூற்று – சரி, காரணம் – தவறு
- கூற்று – தவறு, காரணம் – சரி
- கூற்று – தவறு, காரணம் – தவறு
- கூற்று – சரி, காரணம் – சரி✓
-
'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
- சொல்லாமை✓
- சொல்லா
- சொல்லிய
- சொல்லுகின்ற
-
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக
- இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
- இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
- இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை✓
- செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
-
கரைபொரு – இலக்கணக் குறிப்பு வரைக.
- ஆறாம் வேற்றுமை தொகை
- இரண்டாம் வேற்றுமை தொகை✓
- உவமைத் தொகை
- பண்புத் தொகை
-
கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
- கலித்தளை
- வஞ்சித்தளை✓
- இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →