Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 11 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
- சமணத் துறவி✓
- பௌத்தத் துறவி
- இஸ்லாமியத் துறவி
- சைவ துறவி
-
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குழவளை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?- பாம்பாட்டி சித்தர்
- கடுவெளி சித்தர்✓
- பட்டினத்தடிகள்
- திருமூலர்
-
பொருத்துக.
(a) மணிமேகலை 1. சேக்கிழார் (b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார் (c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர் (d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
"தாதாசாகேப் பால்கே" விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
- 1965
- 1969✓
- 1990
- 1996
-
"நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம்" என்றவர்
- பெரியார்
- அறிஞர் அண்ணா
- அண்ணல் அம்பேத்கர்
- காந்தியடிகள்✓
-
"அண்ணா இனிராம் ஒர் இயற்கள் உறாறொம்"
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?- சீக்க சிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- பாஞ்சராச் சமயம்
- கம்பராமாயணம்✓
-
பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா (b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன் (c) தாலாட்டு 3. கி.வா. ஜகந்நாதன் (d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன் சரியான விடையைத் தெரிவு செய்க.
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
பொருத்துக.
(a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும் (b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும் (c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் (d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
- இபான்
- எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- தால் சுதாய்✓
- முனைவர் எமினோ
-
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
- புறஅடைப்பயிற்சி
- அகஅடைப்பயிற்சி✓
- வாசிப்புப்பயிற்சி
- ஒழுக்க நெறிகள்
-
'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
- மாறனலங்காரம்
- தண்டியலங்காரம்✓
- திவாகர நிகண்டு
- பிங்கல நிகண்டு
-
திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
- உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
- 220 தலங்கள் வழிப்பட்டார்
- திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
- அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்✓
-
உற்றறிதலும் + கலவத்தலும் + நுகர்தலும் – இம் மூன்றும் எய்ப் உயிர்க்கருக்கு உரியது
- சிப்பி – நத்தை
- கரையான் – எறும்பு✓
- பறவை – விலங்கு
- நத்தை – நண்டு
-
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
- பெரிய புராணம்
- திருவிளையாடற்புராணம்✓
- கந்தபுராணம்
- திருவாசகம்
-
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்
- கம்பர்
- திருவள்ளுவர்
- இளங்கோவடிகள்
- வள்ளலார்✓
-
'மட்லேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?
- திருமங்கையாழ்வார்✓
- திருமழிசையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
-
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
- 1. பகுத்தறிவுக் கவிராயர் — உடுமலை நாராயணக்கவி
- 2. உவமைக் கவிஞர் — பெருஞ்சித்திரனார்
- 3. காந்தியக் கவிஞர் — வெ. இராமலிங்கனார்
- 4. புரட்சிக் கவிஞர் — தாரா பாரதி
- 1ம் மற்றும் 2ம் சரி
- 2ம் மற்றும் 3ம் சரி
- 1ம் மற்றும் 3ம் சரி✓
- 2ம் மற்றும் 4ம் சரி
-
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
- கலம்பகம்
- பள்ளு✓
- குறவஞ்சி
- உலா
-
திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள்
- பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
- அரசியல், அங்கவியல், ஒழிபியல்✓
- அரசியல், இல்லறவியல், களவியல்
- பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
-
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.- நற்றிணை
- கலித்தொகை
- பரிபாடல்
- பத்துப்பாட்டு✓
-
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
- தம்மாழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- குலசேகராழ்வார்✓
-
பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று
- குடும்ப விளக்கு
- மருமக்கள் வழி மாண்மியம்
- குயில் பாட்டு✓
- சீறாப்புராணம்
-
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
- 1. அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்
- 2. அன்பு இல்லாதது உயிரற்ற உடல்
- 3. அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர்
- 4. அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
- (1) மட்டும்
- (2) மட்டும்✓
- (3) மட்டும்
- (4) மட்டும்
-
பொருந்தா ஒன்றைத் தேர்க : கண்ணதாசன் பாடல்கள்
- 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ'
- 'சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'✓
- 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா'
- 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'
-
"யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்" – என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
- வாணிதாசன்
- கணியன்
- பாரதியார்✓
- பாரதிதாசன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →