Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 7 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
"தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- ஜி.யு. போப்
- டாக்டர். கிரெளல்✓
- கால்டுவெல்
-
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
- ந. முத்துசாமி✓
- கலாப்ரியா
- சுரதா
- பாவாணர்
-
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்✓
- மணிமேகலை
- கம்பராமாயணம்
-
கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
- 596
- 599✓
- 593
- 597
-
எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- குறுந்தொகை
- அகநானூறு
- கலித்தொகை✓
- ஐங்குறுநூறு
-
"உடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ண வீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே"
– என்ற இறைவனின் திருவடிகளைப் பாடியவர்- குமரகுருபரர்
- தாயுமானவர்
- மாணிக்கவாசகர்
- இராமலிங்க அடிகள்✓
-
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
- தவத்திரு சங்கரதாஸ்
- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
- திண்டிவனம் ராமசாமிராஜா
-
"வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்" - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?- இராசேந்திரன்✓
- முதல் இராசராசன்
- இராசாதிராசன்
- இராசமகேந்திரன்
-
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. பழந்தமிழரது போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூறச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்கள் தொகுப்பே புறநானூறு
III. புறநானூறில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஔவையார்
IV. அறியாது முரசக் கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தறற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது- I, III, IV சரியானவை
- I, II, IV சரியானவை
- I, II, III சரியானவை✓
- IV, III, II சரியானவை
-
சித்தர்களில் ஆதி சித்தர் யார்?
- பாம்பாட்டிச் சித்தர்
- போகர்
- புலிப்பாணி
- திருமூலர்✓
-
கடற் பயணத்தின் சிறப்பை — அவை விளக்கும் நூலோடு பொருத்துக :
(a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
'முக்கூடற்பள்ளு' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூர்ப் பள்ளி 'இளைய மனைவி' என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், 'சதகம்'- IV மற்றும் I
- III மற்றும் IV
- I மற்றும் III✓
- II மற்றும் I
-
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
- தீண்டாமை
- ஒழுக்கமுடைமை
- கொல்லாமை✓
- அறிவுடைமை
-
புறத்திணைகள் _______ வகைப்படும்.
- பன்னிரெண்டு✓
- ஏழு
- ஐந்து
- ஒன்பது
-
'மீதூண் விரும்பேல்' – இவ்வடியின் பொருள்
- குறைவாள உணவு உட்கொள்ளுதல் கூடாது
- வயிறு புடைக்க உண்ணும் நோய்க்கு இடம் அளிக்கும்✓
- மிக அதிகமாக உண்ண வேண்டும்
- காலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்
-
உள்ளுந்தேவைகளுக்காக நம் முன் இருப்பவைகளை எவை?
- கவலி✓
- அதிலுசார் நூல்கள்
- அற நூல்கள்
- கலைக்கடங்கள்
-
'அம்மானை' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர்
III. பாடிக்கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்' ஆகும்
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்- I மற்றும் III
- II மற்றும் I✓
- III மற்றும் IV
- IV மற்றும் I
-
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ——————— நூலாகும்.
- இரட்டைமணிமாலை
- மும்மணிக்கோவை
- தெய்வமணிமாலை✓
- மனுமுறைகண்டவாசகம்
-
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
- பொய்கையாழ்வார்
- நம்மாழ்வார்✓
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
-
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்
- பாரதியார்
- சுரதா
- பாரதிதாசன்✓
- வாணிதாசன்
-
பொருட்பாலின் இயல்கள்
- பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
- அரசியல், அங்கவியல், ஒழிபியல்✓
- களவியல், கற்பியல்
- பாயிரவியல், அரசியல், களவியல்
-
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
- நற்றிணை
- கலித்தொகை
- ஐங்குறுநூறு✓
- குறுந்தொகை
-
"ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி✓
- பழமொழி நானூறு
- இன்னா நாற்பது
-
விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையை கூறுவது.
III. பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடைய்து.- II, III சரி I தவறு
- I, II, III சரி✓
- I, II சரி III தவறு
- I, III சரி II தவறு
-
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
- இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- மதி பெற்ற மைனர்
- மூப்பெண்மணிகள் வரலாறு
- நான் கண்ட பாரதம்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →