Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 6 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- புறநானூறு✓
- ஆத்திச்சூடி
-
மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
- மதங்க சூளாமணி
- மத்தவிலாசம்
- சாகுந்தலம்✓
- மனோன்மணீயம்
-
அகநானூறு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- 1. அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- 2. இந்நூலினை தெடுந்தொகை என்றும் அழைப்பர்.
- 3. இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- 4. புலவர் பலராக் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
- 1, 2 மற்றும் 3 சரி
- 1, 2 மற்றும் 4 சரி✓
- 3 மற்றும் 4 சரி
- 2, 3 மற்றும் 4 சரி
-
"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
- முதலாம் குலோத்துங்கன்
- இராசராசன்
- கரிகாலன்✓
- பராந்தகன்
-
கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
- வெற்றி வேற்கை
- அருங்கலச்செப்பு
- நன்னெறி
- ஞானக்குறள்✓
-
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
- திருச்செங்குன்றம்
- திருவெண்ணெய் நல்லூர்✓
- திருச்செந்தூர்
- திருவாரூர்
-
‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
- மாக்சு முல்லர்
- கால்டுவெல்
- கெல்லட்
- எமினோ✓
-
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
- 1832
- 1812✓
- 1842
- 1852
-
பொருத்துக
பற்றேறுபத்து(a) மூன்றாம் பத்து 1. பெருங்குன்றூர் கிழார் (b) ஆறாம் பத்து 2. அரிசில்கிழார் (c) எட்டாம் பத்து 3. காக்கை பாடினியார் (d) ஒன்பதாம் பத்து 4. பாலைக் கௌதமனார் பாடியவர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'- தமிழர்க்குப் பெருமை தராதது எது?✓
- நமக்குள்ளே பேசுவது எது?
- பழங்கதைகளால் என்ன நன்மை?
- பழங்கதைகளின் மகிமை யாது?
-
கம்பராமாயணத்தில், "ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
- குகன்✓
- இராமன்
- இராவணன்
- கும்பகருணன்
-
"தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது
- இரண்டு
- மூன்று✓
- நான்கு
- ஐந்து
-
"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்
- காந்தியடிகள்
- பாரதியார்
- பசும்பொன் முத்துராமலிங்கர்✓
- பாரதிதாசன்
-
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
- நாதகுத்தனார்
- தோலா மொழித்தேவர்
- திருத்தக்க தேவர்
- சீத்தலைச் சாத்தனார்✓
-
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், 'மேலகரம்' என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், 'குற்றாலக் குறவஞ்சியின்' மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. 'வசந்தவல்லி திருமணம்' எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது- I மற்றும் II சரியானவை✓
- III மற்றும் IV சரியானவை
- II மற்றும் III சரியானவை
- I மற்றும் IV சரியானவை
-
கூற்று 1 : ஏரெழுபது பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி✓
- கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
-
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
- இராணி மங்கம்மாள்✓
- ஜான்சி ராணி
- தில்லையாடி வள்ளியம்மை
- வேலுநாச்சியார்
-
'அகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
- வீடணன்
- இராமன்✓
- சுக்ரீவன்
- குகன்
-
"குடிமக்கள் காப்பியம்" – எனப்படுவது ————
- சிலப்பதிகாரம்✓
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
-
நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- அண்ணா✓
-
"கைவண்ணம் அங்குக் கண்டேன் ; கால்வண்ணம் இங்குக் கண்டேன்".
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?- சிலப்பதிகாரம்
- மகாபாரதம்
- நளவெண்பா
- கம்பராமாயணம்✓
-
அடியார்க்கு உளையளித்தலையச் சியதேறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?
- சிவபூசை
- மகேசுவர பூசை✓
- திருத்தொண்டு
- மாதேவன் தொண்டு
-
'இடியோசை கேட்ட நாகம்போல'-என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க :
- வன்மம்
- ஏக்கம்
- மிரட்சி✓
- திரட்சி
-
“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல்- வங்கத்துப் பரணி
- திராவிடத்துப் பரணி
- கலிங்கத்துப் பரணி✓
- தக்கயாகப் பரணி
-
முதல்காலத்து இலக்கிய தமிழ் நூல்களில் ஒன்று எது?
- பெருங்கதை✓
- சிலப்பதிகாரம்
- பெரியபுராணம்
- கந்தபுராணம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →