Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 10 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
- கிளி, மயில்
- நாரை, அன்னம்
- புறா, பருந்து✓
- கடற்காகம்
-
மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
- சிவகாமியின் சரிதம்✓
- சிவகாமியின் செல்வன்
- சிவகாமியின் வரலாறு
- சிவகாமியின் சபதம்
-
அரசமைப்பிற்குக் கஞ்சிக்கு அல்லற்படும் மக்களின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
- காந்தி
- பாரதியார்
- அம்பேத்கார்✓
- திரு.வி.க
-
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்"
– இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.- தேவாரம்
- திருவாசகம்✓
- ஏர் எழுபது
- திருக்கோவை
-
'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
- தாலாட்டுப்பாட்டு
- கும்மிப் பாட்டு
- பள்ளுப்பாட்டு✓
- வில்லுப் பாட்டு
-
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாயுதில்லை – இது யார் கூற்று?
- பாரதியார்
- பாரதிதாசன்✓
- கண்ணதாசன்
- வாணிதாசன்
-
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கப்படுபவர் நாவுக்கரசர்- I, II, III மட்டும் சரி
- I, III, IV மட்டும் சரி
- அனைத்தும் சரி✓
- அனைத்தும் தவறு
-
தீரா இடும்பை தருவது எது?
- ஆராயாமை, ஐயப்படுதல்✓
- குணம், குற்றம்
- பெருமை, சிறுமை
- நாடாமை, பேணாமை
-
'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
- மருதம்✓
- பாலை
- குறிஞ்சி
- நெய்தல்
-
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்" என்றவர் யார்?
- அண்ணிபெசண்ட் அம்மையார்
- மூவலூர் ராமமிர்த்தம்மாள்
- திம்மையாரு வள்ளியம்மை
- இரானி மங்கம்மாள்✓
-
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று(a) பெண்மை தாயாய் நின்று 1. அன்பே செய்யும் (b) பெண்மை அயலார் தமக்கும் 2. தரணியைத் தாங்கும் (c) பெண்மை மகளாய்ப் பிறந்து 3. தளர்வைப் போக்கும் (d) பெண்மை தாரமாய் வந்து 4. சேலையில் மகிழும் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
"நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மின்று தான்" -என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?- அகநானூறு
- புறநானூறு✓
- திருக்குறள்
- ஐங்குறுநூறு
-
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்
- மூதுரை
- நாலடியார்
- பழமொழி நானூறு✓
- நான்மணிக்கடிகை
-
சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை
- 9
- 3
- 5
- 4✓
-
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- பெருங்குன்று கிழார்
- பெருநாவலர்
- பாவேந்தர் பாரதிதாசன்
-
பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம் (b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம் (c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம் (d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை' என்று கூறும் நூல்
- தொல்காப்பியம்✓
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
-
''புறத்துறப்புப் எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறப்புப் ––––––––––.
– குறளினை நிறைவு செய்க.- அன்பு இலவர்க்கு✓
- மரம்தளிர்த் தற்று
- அப்தே துணை
- இலையந் தொடர்பு
-
'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
- நாமக்கல் கவிஞர்
- சுரதா
- பாரதிதாசன்✓
- பாரதியார்
-
கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்டபன் நிறுத்துகும் சந்தம் ———.
- விரவை மாறி, மாறி, எய்வழால் வருடம் ஓசை
- மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
- உலகெக்கயபால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை✓
- மத்தளங்களின் இடி ஓசை
-
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
- ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
- பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர் அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
- எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்
- இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழ்ந்த சித்தர்கள் அவளானின்✓
-
"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
- கண்ணதாசன்
- தஞ்சை இராமையாதாஸ்
- மருதகாசி✓
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
-
பொருந்தாத இணையினைக் காண்க
- "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" – பாரதிதாசன்
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" – கணியன் பூங்குன்றனார்
- "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" – இளங்கோவடிகள்
- "அழுது அடியடைந்த அன்பர்" – திருமூலர்✓
-
'பக்திசுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி லவை' என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர்.
- சுப்பிரத்திணியாசன்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்✓
- புரட்சிக்கவி பாரதிதாசன்
- மகாகவி பாரதியார்
-
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
- நுபுவத்துக் காண்டம்✓
- விலாதத்துக் காண்டம்
- ஹிஜ்ரத்துக் காண்டம்
- மேற்கூறிய அனைத்தும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →