Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 13 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்" – திருக்குறள் உணர்த்தும் கருத்து.
- ஏற்றுமதி
- ஏமாற்றுதல்
- நேர்மை✓
- முயற்சியின்மை
-
உலகம் முழுவதையும் ஆளிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
- படை வரும் வரை
- காலம் வரும் வரை✓
- பணம் வரும் வரை
- பலம் வரும் வரை
-
கிளவுளுரை அளக்கும் கோல் எது?
- நமக்கு வரும் தன்பம்✓
- இடுக்கண் களையும் நட்பு
- நட்பாங் கிழமை
- கீழ்த்திடா நட்பு
-
எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
- குறுந்தொகை
- நற்றிணை✓
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
-
"புனலடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னனிஞ் இழையும் தகிலும் பூண்டு
கனிமொழிபேபி நீ கனிந்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையம்வே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்- முத்தமிழறிஞர் கலைஞர்
- பேரறிஞர் அண்ணா✓
- மூதறிஞர் இராசாசி
- மு. வரதராசனார்
-
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்✓
- சுந்தரர்
- காரைக்கால் அம்மையார்
-
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறைபட்டியல் I பட்டியல் II (a) 10, 20, 30, 40... 1. முல்லைத் திணை (b) 6, 16, 26, 36... 2. நெய்தல் திணை (c) 4, 14, 24, 34... 3. குறிஞ்சித் திணை (d) 2, 8, 12, 18... 4. மருதத் திணை திணை
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
பொருத்துக:
வசனகாரகள்(a) பேகன் 1. நீலமணியும் நாகம் தந்த கயில்கத்தரையும் சிவலுக்கு தந்தவன் (b) காரி 2. மயிலுக்குப் போர்வை தந்தவன் (c) ஆய் அண்டிரன் 3. இரவலருக்கு நாடுவனைப் பரிசாகத் தந்தவன் (d) ஓரி 4. இரவலர்க்குத் தேர் தந்தவன் சிறப்பு
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
உலகளாவிய தமிழ்ழ்கள் – சிறப்பும் பெருமையும் புலன்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
- மண்ணும் மக்களும்
- புயலிலே ஒரு தோணி✓
- கடற்புரத்தில்
- தீவுக்கரை
-
"வலவன் ஏவா வானூர்தி" – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
- அகநானூறு
- புறநானூறு✓
- ஐங்குறுநூறு
- குறுந்தொகை
-
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
- சோலை
- பாலைவனம்
- வயல்
- காடு✓
-
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?- பெரியபுராணம்✓
- திருவிளையாடற்புராணம்
- சிலப்பதிகாரம்
- சீறாப்புராணம்
-
கீழே காணப்படுபவைவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக
- ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம் வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்படுகிறது
- ஓவியா, 'கண்ணூள் வினைஞர்' எனப் புகழப்பெற்றார்
- ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணைடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
- ஓவியச் செந்நூல் உரை நூல் கிடைக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது✓
-
"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?
- மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
- உ.வே. சாமிநாதனார்
- திரு.வி. கலியாண சுந்தரனார்✓
- ஆறுமுக நாவலர்
-
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்
- வள்ளலார்
- திருமூலர்✓
- அருணகிரிநாதர்
- தாயுமானவர்
-
அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
- வெள்ளிவீதியார்
- ஒளவையார்✓
- காக்கை பாடினியார்
- நக்கண்ணையார்
-
'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- புறநானூறு✓
- குறுந்தொகை
-
'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் 'முத்தொள்ளாயிரம்'
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்- I, III சரியானவை
- I, IV சரியானவை✓
- II, III சரியானவை
- III, IV சரியானவை
-
புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
- திரு. கால்டுவெல்
- திரு. ஜி.யு. போப்✓
- திரு. வீரமாமுனிவர்
- திரு. சீகன்பால்கு
-
கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெறுசொன்னவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேதுமொழிகளிலும் உள்ளன.- கூற்று 1, 2 சரி, 3 தவறு✓
- கூற்று 3, 2 சரி, 1 தவறு
- கூற்று 1, 2 தவறு, 3 சரி
- கூற்று 2, 3 தவறு, 1 சரி
-
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
– இவ்வரிகள் இடம் பெற்ற நூல்- தணியலங்காரம்
- யாப்பருங்கலக்காரிகை
- புறப்பொருள் வெண்பா மாலை✓
- நன்னூல் காண்டிகையுரை
-
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன் (b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள் (c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார் (d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- முடியரசன்✓
- பாரதியார்
-
பொருந்தாத இணையினைக் கண்டறிக
திணை — தொழில்- முல்லை – வரகு விதைத்தல், களை பறித்தல்
- பாலை – நிரை கவர்தல், சூரையாடல்
- குறிஞ்சி – தேனெடுத்தல், கிழங்கழ்தல்
- மருதம் – மீன்பிடித்தல், உப்பு விற்றல்✓
-
சரியான திருக்குறளைக் கண்டறிக.
- சொல்லொக சொல்லில் சொல்லற்கை பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லில் சொல்லொக சொல்லற்கை பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லொக சொல்லில் பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லொக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்டுலாச் சொல்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →